என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உயர்கல்வி நிறுவனங்கள்"
- உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன.
- காங்கிரஸ் இதை ஒருபோதும் அனுமதிக்காது- சமூக நீதிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அவற்றைப் பொதுப் பிரிவினருக்கான இடங்களாக மாற்றி மற்ற பிரிவினரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்" என்று பல்கலைக்கழக மானியக்குழு புதிய வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளது.
இதுதொடர்பாக குறிப்பிட்ட காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, "இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி நடக்கிறது" என்றார்.
ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:-
யுஜிசியின் புதிய வரைவில், உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்சி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர சதி நடக்கிறது.
இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசிய பாஜக- ஆர்எஸ்எஸ், இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன.
சமூக நீதிக்காகப் போராடும் மாவீரர்களின் கனவுகளைக் கொல்லவும், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை இல்லாதொழிப்பதற்கும் இது ஒரு முயற்சி. இதுதான் 'அடையாள அரசியலுக்கும்' 'உண்மையான நீதி'க்கும் உள்ள வித்தியாசம், இதுதான் பாஜகவின் குணாதிசயம்.
காங்கிரஸ் இதை ஒருபோதும் அனுமதிக்காது- சமூக நீதிக்காக நாங்கள்
தொடர்ந்து போராடுவோம். மேலும் இந்த காலியிடங்களை இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களைக் கொண்டு மட்டுமே நிரப்பவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயர் கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம்.
- கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் இன்று தரவரிசை வெளியாகியிருப்பது பொருத்தமானது.
2022ஆம் ஆண்டிற்கான தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்த இடங்களைப் பெற்றதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மத்திய கல்வி அமைச்சகத்தின் NIRF தரவரிசைப் பட்டியல் 2022-இல் தத்தமது பிரிவுகளில் தலைசிறந்த இடங்களைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
உயர்கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம், அதுவும் இத்தரவரிசைப் பட்டியலானது நாம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் இன்று வெளியாகியிருப்பது சாலப் பொருத்தமானது.
குறிப்பாக, இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை நான் பயின்ற மாநிலக் கல்லூரி பெற்றிருப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இச்சாதனைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்துக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்