search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அளவீடு பணி"

    • அதிகாரிகள் ஆய்வு
    • பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 1½ வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிர் இழந்தனர்.

    அல்லேரிமலைக்கு சாலை அமைக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2எக்டர் நிலத்தினை 6.4 எக்டர் அளவிற்கு வருவாய் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.

    தார்சாலை அமைப்ப தற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம் என கூறினர்.

    தற்போது வழங்க ப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது.

    எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்தி ற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.

    இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்கப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    இது குறித்து விசாரணை மேற்கொண்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வனத்துைறக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி வருவாய்துறை அதிகாரிகள், வனத்துறை யினருக்கு இடம் வழங்க வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள மலைைய தேர்வு செய்துள்ளனர்.

    அதன்படி இன்று காலை வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து இன்று அளவீடு பணி நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தாசில்தார் உத்தரவின் பேரில் நேற்று சங்கோதி பாளையத்தில் அளவீடு பணி நடைபெற்றது.
    • பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சங்கோதி பாளையம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே காரணம்பேட்டையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் சங்கோதி பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள சங்கோதிபாளையத்தில், திருச்சி ரோட்டிற்கு செல்லும் மெயின் ரோடு அருகே, தனியார் நிறுவனத்திற்கு வழிப்பாதை அமைக்க மண் கொட்டி, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து தாசில்தார் உத்தரவின் பேரில் நேற்று சங்கோதி பாளையத்தில் அளவீடு பணி நடைபெற்றது. சர்வேயர் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்டோர் அளவீடு பணியை மேற்கொண்டனர். இதற்கிடையே ஆக்கிரமிப்பு குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சங்கோதி பாளையம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

    • மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
    • மலைவாழ் கிராமங்களில் பட்டா வழங்க பணிகள் துவங்கியுள்ளது.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் 13க்கும் அதிகமான மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாரம்பரியமாக வசிக்கும் மக்கள் வன உரிமை சட்டத்தின் கீழ் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதன் வாயிலாக தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். விவசாய பணிகளையும் மேற்கொள்ள முடியும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து வன உரிமை குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக உடுமலை வனச்சரகத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில், பட்டா வழங்க வன உரிமைக்குழு தீர்மானங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களில் பட்டா வழங்க பணிகள் துவங்கியுள்ளது. தளிஞ்சிவயல் கிராமத்தில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வனத்துறையால் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×