search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ேகாவில் தெப்பகுளம்"

    • கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தெப்பகுளத்தில் குப்பைகளை வீசுவதால் மாசு ஏற்படும் அவல நிலையில் உள்ளது.
    • வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் குளத்தை சரிவர பராமரிப்பு செய்து மாசடைந்த நீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    கடலூர்:

    கடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமானது பாடலீஸ்வரர் கோவில். இந்த புகழ் மிக்க பாடலீஸ்வரர் தளத்தில் தான் இறைவி தவம் செய்து தன் மணவாளனை கரம்பற்றிய தலம் இத்தலமாகும். மேலும் இந்த கோவிலின் முன்புறம் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் தான் சிவன் சித்தராக இருந்து விளையாடினார். மேலும் இந்த குளம் சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளது. மேலும் இந்த குளத்தில் தான் புலிக்கால் முனிவர் அப்பர் அகத்தியர் வியாக்ரபாதத் மன்க்கானமுனிவர் உபமன்னியர் ஆதிராசன் ஆகியோர்களால் பூஜித்து பேரு பெற்ற தலமாகும். அப்படிப்பட்ட இந்தப் பாடலீஸ்வரர் புனித குளம் தற்போது தண்ணீர் படிப்படியாக குறைந்து குளத்தை சரிவர பராமரிக்காமல் குளத்திற்குள் ஆங்காங்கே குப்பைகள் கிடக்கிறது. மேலும் இந்த குளத்தி ல் உள்ள தண்ணீரை சரிவர பராமரிக்காமல் குளம் முழுவதும் மாசு அடைந்து பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

    இதனால் இந்த குளத்தில் உள்ள மீன்களுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் பிஸ்கட் பொறி போன்றவற்றை அப்படியே பிஸ்கட் கவருடன் வீசுகிறார்கள். இதனால் குளம் முழுவதும் மாசடைந்து வருகிறது. மேலும் மக்காத பிளாஸ்டிக் தாள்களையும் குலத்திற்குள் போடுவதால் குளம் முழுவதும் மாசடைந்து துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த குளத்தில் வாழும் மீன்கள் அழியும் வகையில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற 1008 சிவதலங்களில் ஒன்றான பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள குளம் மாசடைந்து வருவது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மன வேதனையை ஏற்படுத்துகிறது.

    எனவே உயர் அதிகாரிகள் இதில் கவனத்தை செலுத்தி வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் குளத்தை சரிவர பராமரிப்பு செய்து மாசடைந்த நீரை அப்புறப்படுத்த வேண்டும். தற்போது மழை இல்லாத காரணத்தால் மோட்டார் மூலம் நல்ல நீரை குளத்தில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.

    ×