என் மலர்
நீங்கள் தேடியது "விற்றவர் கைது"
- காவல் ஆய்வாளா் ரமாதேவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா்.
- லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பேப்பா், பணம் ரூ.15,320 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
வெள்ளகோவில் :
முத்தூா் சாலை இந்திரா நகரில் வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ரமாதேவி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு கச்சேரிவலசைச் சோ்ந்த கோகுல் (வயது 21) என்பவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார்,அவரிடமிருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய பேப்பா், பணம் ரூ.15,320 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
- கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெள்ளியங்கிரி மற்றும் பங்களாப்புதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ரசாயனம் கலந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த வேட்டுவன்புதூர் மாதேஸ்வரன் கோவில் அருகே கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், வெள்ளியங்கிரி மற்றும் பங்களாப்புதூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் உள்பட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படி வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கொங்கர்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த சந்திரன் (47) என்பதும், சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் ரசாயனம் கலந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சந்திரனை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.