search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டு வளர்ப்பில்"

    • கிராம பட்டுவளர்ப்பு விவசாயிகளுக்கு ‘பட்டு வளர்ப்பில் கிருமிநீக்கம் செய்தல்’’ குறித்து தொழில்நுட்ப பயிற்சி நத்தமேடு, மாணிக்கநத்தம் சமுதாயக்கூட்டரங்கில் நடைப்பெற்றது.
    • பட்டுவளர்ப்பில் கிருமி நீக்கம் செய்தல் குறித்தும், வெண் பட்டுவளர்ப்பின் அனுபவங்கள் குறித்தும் பட்டுவளர்ப்பு விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்து பயிற்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம், மாணிக்கநத்தம் கிராம பட்டுவளர்ப்பு விவசாயிகளுக்கு 'பட்டு வளர்ப்பில் கிருமிநீக்கம் செய்தல்'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நத்தமேடு, மாணிக்கநத்தம் சமுதாயக்கூட்டரங்கில் நடைப்பெற்றது.

    பயிற்சியில் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி பட்டுவளர்ப்பில் ஏற்படும் நோய், பூச்சி தாக்குதலினால் ஏற்படும் இழப்புகளை குறித்தும் அதன் மேலாண்மை குறித்தும் வேளாண்மைப்பயிரில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் காரணிகளால் ஏற்படும் இழப்புகள் அதன் மேலாண்மை குறித்த விளக்கமளித்தார்.

    பயிற்சியில் பரமத்தி வட்டார பட்டுவளர்ச்சித்துறையின் உதவி பட்டு ஆய்வாளர் கோமதி, இளம்நிலை பட்டு ஆய்வாளர் யோகாம்பாள் ஆகியோர் தங்களது துறை சார்ந்த திட்டங்கள், மானியங்கள், குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் பயிற்சியளித்தனர். மேலும் பஞ்சப்பட்டி, மாணிக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த பட்டுவளர்ப்பில் நீண்ட அனுபவம் பெற்ற விவசாயி. இளம் பட்டுப்புழு உற்பத்தி செய்யும் பட்டு வளர்ப்புத்துறையின் மூலம் சான்றிதழ் பெற்ற தங்கராசு, அவர்கள் தனது பட்டுவளர்ப்பில் கிருமி நீக்கம் செய்தல் குறித்தும், வெண் பட்டுவளர்ப்பின் அனுபவங்கள் குறித்தும் பட்டுவளர்ப்பு விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்து பயிற்சியளித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் பாபு, உதவி வேளாண்மை அலுவலர் பிரபு, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×