என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரவுபுதி முர்மு"

    • நமது ஒற்றுமையை குலைக்கும் வகையில் வேறுபாடுகளை உருவாக்கினர்.
    • இதனால் நம் மக்களிடையே அடிமை மனநிலை ஏற்பட்டது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் லோக்மந்தன்-2024 தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    நாம் அனைவரும் இந்தியர்கள். இந்த தேசிய ஒற்றுமை உணர்வு அனைத்து சவால்களையும் மீறி நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கிறது.

    நமது சமூகத்தைப் பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் பல நூற்றாண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பல நூற்றாண்டுகளாக ஏகாதிபத்தியமும், காலனித்துவ சக்திகளும் இந்தியாவைப் பொருளாதார ரீதியாக சுரண்டியதுடன், நமது சமூக கட்டமைப்பையும் அழிக்க முயன்றன.

    நமது வளமான அறிவார்ந்த பாரம்பரியத்தை இழிவாகப் பார்த்த ஆட்சியாளர்கள் மக்களிடையே கலாசாரத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினர்.

    நமது ஒற்றுமையை குலைக்கும் வகையில் வேறுபாடுகளை உருவாக்கினர். இதனால் நம் மக்களிடையே அடிமை மனநிலை ஏற்பட்டது.

    நாம் நமது விலைமதிப்பற்ற மரபுகளை மீண்டும் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மக்களிடையே 'தேசம் முதலில்' என்ற உணர்வை ஏற்படுத்துவது அவசியம் என தெரிவித்தார்.

    • வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.
    • புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    விழாவையொட்டி குடியரசு தலைவர் நாளை (சனிக்கிழமை) ஊட்டியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதாக இருந்தார்.

    இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.

    இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.

    இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர், ஓ.பி.எஸ், கவச உடையுடன் வந்து வாக்களிப்பு
    • திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் களத்தில் உள்ளனர்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    நாடு முழுவதும் உள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளை பதிவு செய்தனர். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர்பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் வாக்களித்தனர். நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி, கார்த்தி சிதம்பரம் ஆகிய எம்.பி.க்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றிருந்தனர்.

    தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 10 மணிக்கு முதல் நபராக வந்து தனது வாக்கு பதிவு செய்தார். தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.  


    இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களும் வாக்குகளை பதிவு செய்தனர். 


    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க மாலை 4 முதல் 5 மணி வரை நேரம் அளிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வாக்களித்தனர்

    மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 99.18% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் களத்தில் உள்ளனர். மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். வருகிற 25-ந்தேதி அவர் பதவி ஏற்பார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்
    • தமிழகத்தில் முதல் நபராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓட்டு போட்டார்

    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர். 

    நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் அடங்குவார்கள். பிரதமர் மோடி, பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி, கார்த்தி சிதம்பரம் ஆகிய எம்.பி.க்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றுள்ளனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, எம்.எல்.ஏக்கள் ஓட்டு போடுகின்றனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலின், காலை 10 மணிக்கு முதல் நபராக வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பின்னர் மற்ற உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர்.

    இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைகிறது. அதன்பின் ஓட்டுப்பெட்டிக்கு 'சீல்' வைக்கப்பட்டு, இன்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

    மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது. புதிய ஜனாதிபதி வருகிற 25-ந்தேதி பதவி ஏற்பார். தற்போதைய சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 60 சதவீதம் ஓட்டு பெற்று அவர் ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

    ×