என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாலைப்புதூர்"
- கேரளாவில் இருந்து தூத்துக்குடி நோக்கி ரப்பர் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி சாலைப்புதூரில் நான்கு வழி சாலை பணி நடை பெறும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- சாலைப் பணி நடைபெறும் பகுதிகளில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமல் இருப்பதே முக்கிய காரணம் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
தென்காசி:
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரில் புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்களை உயரமாக கொட்டியுள்ளனர்.
இப்பகுதியில் ஏற்கனவே இருந்த பழைய சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரு வாகனங்கள் எதிரெதிரே சாலையில் செல்லும் பொழுது வாகனங்கள் விலகிச் செல்ல போதிய இடம் இல்லாததால் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விபத்து
நேற்று இரவு கேரளாவில் இருந்து தூத்துக்குடி நோக்கி ரப்பர் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியை விருதுநகர் மாவட்டம் பசும்பொன் தேவர் நகரை சேர்ந்த தர்மர் ( வயது 29) என்பவர் ஓட்டி சென்றார்.
அப்போது சாலைப்புதூரில் நான்கு வழி சாலை பணி நடை பெறும் பள்ளத்தில் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தர்மர் கன்டெய்னர் லாரி க்குள் சிக்கிக்கொண்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து தர்மரை மீட்டனர். டிரைவர் தர்மர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினர்.
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் பாவூர்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் அரசுப் பேருந்துகளும் வாகனங்களும் தொடர்ந்து விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. சாலைப் பணி நடைபெறும் பகுதிகளில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்து வருவதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்தி புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்