search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ விபத்தில்"

    • தீக்காயம் ஏற்பட்டு கிருஷ்ணவேணி அலறினார்.
    • சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ணவேணி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு லட்சுமிகார்டன் சேரன் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 29). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. கடந்த 21-ந் தேதி ரமேஷ்குமார் வெளியில் சென்று இருந்தார். அப்போது கிருஷ்ணவேணி மாடியில் உள்ள அறைக்கு சென்றார்.

    அங்கு விளக்கு ஏற்ற முயன்றபோது அவர் அணிந்திருந்த நைட்டியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதை அவர் கவனிப்பதற்குள் நைட்டியில் மளமளவென தீ பரவியது.

    இதனால் தீக்காயம் ஏற்பட்டு கிருஷ்ணவேணி அலறினார். மேலும், தீயை அணைத்து கொள்வதற்காக அவரா கவே குளியல் அறைக்குள் சென்று தண்ணீரை ஊற்றி க்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர்.

    தீயில் கருகிய கிருஷ்ணவேணி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ணவேணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணவேணிக்கு திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இருப்பதால் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமாரும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த 9 மாதங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சரவணனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.
    • தேன்மொழி அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஜீவா நகரைச் சேர்ந்தவர் சரவணன் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி (43). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 9 மாதங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சரவணனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ப்பட்டு பிளேட் வைக்கப்ப ட்டுள்ளது. இந்த நிலையில், வீட்டின் அருகில் உள்ள காலியிடத்தில் கிடக்கும் மரத்துண்டுகள், குப்பை களை தீ வைத்து அகற்றிட வேண்டும் என தன் மனைவி யிடம் சரவணன் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் மனைவி தேன்மொழி வெளியில் சென்றிருந்தார். அப்போது அவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர் போன் மூலமாக தேன்மொழியைத் தொடர்பு கொண்டு உங்கள் வீடு தீப்பற்றி எரிவதாக கூறி யுள்ளார்.

    இதையடுத்து, தேன்மொழி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது தன் வீட்டின் அருகில் இருந்த மரங்கள், செடி, கொடிகள், குப்பைகள் தீயில் எரிந்து கொண்டி ருந்துள்ளன.

    அதன் அருகில் சரவணன் உடலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து தேன்மொழி அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மூதாட்டி சேலையில் தீ பற்றிக்கொண்டது.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாராள் இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்துள்ள எலத்தூர் புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் மாராள் (74).

    தனியாக வசித்து வந்த மாராள் சம்பவத்தன்று இரவு வீட்டில் கொசுவர்த்தி பற்ற வைப்பதற்காக தீ குச்சியை உரசி உள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி மாராள் சேலையில் தீ பற்றிக்கொண்டது.

    பின்னர் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மாராள் இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.
    • மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த குடக்கரை கே. செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி மாராத்தாள் (82).

    சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்த குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.

    அப்போது திடீரென மாராத்தாளுக்கு மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாராத்தாளை குப்பை குழியில் இருந்து வெளியே மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாராத்தாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண்எண்ணை விளக்கு ரத்னா ஆடை மீது பட்டதில் தீ பற்றி எரிய தொடங்கியது.
    • இதனால் உடல் கருகி வேதனையால் அலறினார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உக்கரம், மில்மேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ரத்னா (40).

    சம்பவத்தன்று இரவு ரத்னா மண்எண்ணை விளக்கை பற்ற வைத்து விட்டு அருகில் பாய் போட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் பட்டு அருகில் இருந்த மண்எண்ணை விளக்கு ரத்னா ஆடை மீது பட்டதில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    இதனால் ரத்னா உடல் கருகி வேதனையால் அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்னா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரத்னா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்லாயாள் மயக்கம் அடைந்து அடுப்பின் மேல் விழுந்து விட்டார்.
    • கட்டிருந்த சேலையில் தீப்பிடித்து உடல் கருகினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த சுண்டக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்லாயாள் (79).

    இந்நிலையில் சம்பவத் தன்று செல்லாயாள் வீட்டில் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்து அடுப்பின் மேல் விழுந்து விட்டார்.

    இதில் அவர் கட்டிருந்த சேலையில் தீப்பிடித்து உடல் கருகினார். அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நீரை ஊற்றி ஈரத்துணியால் போற்றி அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூதாட்டி செல்லாயாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்திரமோகனின் வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
    • புகை மூட்டத்தினுள் தடுமாறி தீயில் விழுந்து விட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள குட்டிபாளையம் சாயுபுகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுடைய இளைய மகன் சந்திரமோகன் (46). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சந்திரமோகன் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் தூங்க சென்று விட்டார். அவரது தாய் சரஸ்வதி அருகில் உள்ள கொட்டகையில் படுத்து தூங்கினார்.

    நள்ளிரவில் சந்திரமோகனின் வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் பதறி அடித்து சந்திரமோகனை எழுப்ப முயன்றனர். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து சந்திரமோகனை எழுப்ப முயன்றனர்.

    இதில் அவர் வீட்டில் இருந்து வெளியே எழுந்து வர முயன்ற போது புகை மூட்டத்தினுள் தடுமாறி தீயில் விழுந்து விட்டார்.

    இதுப்பற்றி தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் வீட்டின் உள்ளே பார்த்தபோது சந்திரமோகன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் அங்கு சென்று சந்திரமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.

    இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • தீ மளமள வென பரவி அருகில் இருந்த பழனியம்மாள், பச்சமுத்து ஆகியோரின் 2 வீடுகளிலும் பற்றி கொண்டது.
    • தீ விபத்தில் வீடுகளிலும் இருந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம், நாகிரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (80). அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் குலசேகரன் (43), பச்சமுத்து (60).இவர்களுடைய 3 வீடுகளும் தகரம் வேயப்பட்ட கூரை வீடாகும்.

    இந்நிலையில் குணசேகரன் வீட்டில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனால் அவரது குழந்தைகள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டவாறு வெளியே ஓடி வந்தனர்.

    உடனே அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது தீப்பிடித்து வீடு எரிந்து கொண்டிருந்தது.

    இதனையடுத்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமள வென பரவி அருகில் இருந்த பழனியம்மாள், பச்சமுத்து ஆகியோரின் 2 வீடுகளிலும் பற்றி கொண்டது.

    இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி ராபர்ட் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை தண்ணீரைப் பீச்சி அணைத்தனர்.

    இருப்பினும் இந்த தீ விபத்தில் 3 வீடுகளிலும் இருந்த பொருட்கள், 2 வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    தீ விபத்து நடந்ததும் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியே ஓடி சென்று விட்டதால் உயிரி ழப்பு தவிர்க்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சகுந்தலா வீட்டின் பின்புறம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை காய வைத்து கொண்டு இருந்தார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி கொண்டது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பா ளையம் வடக்கு சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சகுந்தலா (வயது 85). கோவிந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், 5 மகள்கள் உள்ளனர். மகன் வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று மதியம் சகுந்தலா வீட்டின் பின்புறம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை காய வைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி கொண்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது உறவின ர்கள், அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சகுந்தலாவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சகுந்தலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தீ குச்சியானது தவறி மடியில் விழுந்ததில் வேட்டி, சட்டை ஆகியவை தீ பற்றிக்கொண்டது.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி அய்யம்பா ளையம் ஆவராங்காட்டூரை சேர்ந்வர் பழனியப்பன் (60). உடல்நிலை பாதிக்க ப்பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்தார்.

    சம்பவத்தன்று பழனியப்பன் தனது வீட்டில் சேரில் அமர்ந்து பீடி பற்ற வைப்பதற்காக தீ குச்சியை உரசி உள்ளார். அப்போது தீ குச்சியானது தவறி தனது மடியில் விழுந்ததில் வேட்டி, சட்டை ஆகியவை தீ பற்றிக்கொண்டது.

    இதில் பலத்த தீக்காய மடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • மனோஜ்குமார் வீட்டில் மாடியில் பொங்கல் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்து போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார்.
    • எனினும் சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வி.வி.சி.ஆர் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ராமன் குட்டி நாயர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இதில் இளைய மகன் மனோஜ் என்கிற மனோஜ் குமார்(42). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று மனோஜ்குமார் வீட்டில் மாடியில் பொங்கல் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்து போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது.

    வேதனை தாங்காமல் மனோஜ் குமார் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு கீழே இருந்த அவரது தந்தை, ராமன்குட்டி அண்ணன் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைகாக மனோஜ் குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×