என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு"
- மாணவரை தாக்கிய சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
- இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 15-ந் தேதி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஆசிரியர் மோகன் அடித்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர் சரியாக படிக்காததால் ஆசிரியர் அவரை அடித்ததாக தெரிகிறது.
இதில் மாணவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதனை சிலர் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டது. எனவே மாணவரை தாக்கிய சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கணித ஆசிரியர் மோகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி பிறப்பித்துள்ளார்.