என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக மாநில தலைவர்"

    • கோவிலின் நடைப்பந்தலில் வீடியோ எடுக்க அனுமதி உள்ளது.
    • வீடியோ காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.

    கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோவில் இருக்கிறது. திருமணம் மற்றும் மத சடங்குகளுக்கு மட்டும் கோவிலின் நடைப்பந்தலில் வீடியோ எடுக்க அனுமதி உள்ளது. மற்ற நிகழ்வுகள் மற்றும் சாதாரண நேரங்களில் அங்கு வீடியோ எடுக்க அனுமதி கிடையாது.

    இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், குருவாயூர் கோவிலுக்கு சென்றிருந்தார்.

    அப்போது அவர் கோவிலின் நடைப்பந்தல் (பாதை) மற்றும் தீபஸ்தம்பம் (விளக்கு கம்பம்) முன்பு வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோ காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.

    இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடகக்குழு உறுப்பினர் அனூப் என்பவர் குருவாயூர் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஐகோர்ட்டு உத்தரவை மீறி கோவில் வளாகத்தில் வீடியோ எடுக்கப்பட்டிருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் ராஜீவ் சந்திரசேகர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    • கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே. சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்தது.
    • சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

    பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே.சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.

    இதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் ராஜீவ் சந்திரசேகா் வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.

    இப்பதவிக்கு ராஜீவ் சந்திரசேகா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்தில் கட்சியின் கவுன்சில் கூட்ட நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற கேரள பாஜகவின் மேலிடப் பாா்வையாளர் மற்றும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, கேரள மாநில பாஜக தலைவராக ராஜீவ் சந்திரசேகரன் ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கா்நாடகத்தில் இருந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தோ்வான ராஜீவ் சந்திரசேகா், மத்திய பாஜக கூட்டணி அரசில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா், நீா் வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளாா்.

    பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியுள்ள ராஜீவ் சந்திரசேகா் பணியாற்றி உள்ளார். கடந்த மக்களவைத் தோ்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. 

     

    • தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர்.
    • அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது.

    இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டது.

    இதற்காக அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.

    3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புவார் என கூறப்பட்டது.

    அதன்படி, லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 28-ம் தேதி தமிழகம் வரும் அண்ணாமலை, டிசம்பர் 1-ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசை கண்டித்து நேற்று கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணி நடந்தது.
    • தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட அண்ணாமலை, வானதி உள்பட 917 பேரை போலீசார் கைது.

    கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத் தலைவர் எஸ்.ஏ.பாஷா கடந்த 16-ந் தேதி உயிரிழந்தார்.

    மறுநாள் 17-ந் தேதி அவரது உடல் அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க சார்பில், தமிழக அரசை கண்டித்து நேற்று கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் கருப்பு தின பேரணி நடந்தது.

    இந்த பேரணியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பா.ஜக. நிர்வாகிகள், தொண்டர்கள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணியாக சென்றனர். அப்போது, தங்களது கைகளில் பதாகைகள் வைத்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பியடி சென்றனர்.

    இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து போலீசார் பேரணியில் கலந்து கொண்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, வானதி உள்பட 917 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    பின்னர் இரவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஷ்வ இந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம், பா.ஜ.க பொருளாளர் சேகர், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை உள்பட 917 பேர் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் மரணம் அடைந்த அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த போலீசாைர கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட செலயாளர் ஆறுச்சாமி, மண்டல செயலாளர் மார்க்கெட் கிருஷ்ணா, பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலளார் ஜெய்சங்கர்,, பிரபாகரன், செல்வராஜ், சசிக்குமார் உள்பட மீது தடையைமீறி போராட்டத்தில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என பா.ஜ.க. டெல்லி தலைமை தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
    • மாத இறுதிக்குள் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு பா.ஜ.க.வுக்கு புதிய மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் தொகுதி, மாவட்டம், அணி அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆனால் புதுச்சேரி, தமிழகத்தில் மாநில தலைவரை தேர்வு செய்வதில் 2 மாநிலங்களிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இன்னும் ஓராண்டில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நிலையில் தமிழகம், புதுச்சேரி உள்ளது. இதனால் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலான ஒரு மாநில தலைவரை நியமிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தலைமை உறுதியாக உள்ளது.

    புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சியாக இருந்தும் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கிய அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியை சந்தித்தார். இது வரும் சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமோ? என பா.ஜ.க. தலைமை அச்சப்படுகிறது.

    இதனால் கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என பா.ஜ.க. டெல்லி தலைமை தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

    பா.ஜ.க. தலைவர் பதவிக்கு நமச்சிவாயம் பொருத்தமாக இருப்பார். ஆனால் அவர் அமைச்சர் பதவியோடு, தலைவர் பதவியை அளித்தால் ஏற்க தயார் என தலைமைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பா.ஜ.க.வை பொறுத்த வரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளது. இதனால் விதியை வளைத்து மாநில தலைவர் பதவி வழங்க கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. அதேநேரத்தில் புதுச்சேரியில் தற்போதைய தலைவரான செல்வகணபதி எம்.பி., அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.க்கள் அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோரும் தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த 20-ந் தேதியே புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் ஒரு வாரமாகியும் இதுவரை மாநில தலைவர் நியமிக்கப்படவில்லை. அனைவரும் ஏற்கும்படியும், தேர்தலை எதிர்கொள்ளும்படியும் ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்பதால் இந்த இழுபறி நீடிப்பதாக தெரியவந்துள்ளது.

    இருப்பினும் மாத இறுதிக்குள் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

    • நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?
    • சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கி வருகிறது.

    தமிழகத்தில் 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மின்‌ கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர்‌ செந்தில் பாலாஜி, தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில் மின் கட்டண உயர்வுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல சாக்குப்போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை இன்று உயர்த்தி உள்ளார்.

    தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. நீங்கள் செல்லச்செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×