search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 246489"

    • அரசுப் பெண் ஊழியா்களுக்கான பொதுப்பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன.
    • கணக்கம்பாளையம் ஸ்டாா் வாலிபால் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் ஜெய்வாபாய் நகர பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மாணவிகளுக்கான பிரிவில் 15 அணிகளும், கல்லூரி மாணவிகளுக்கான பிரிவில் 7 அணிகளும், அரசுப் பெண் ஊழியா்களுக்கான பிரிவில் 4 அணிகளும், பெண்கள் பொதுப்பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன.

    இதில் பள்ளி மாணவிகளுக்கான பிரிவில் ஜெய்வாபாய் நகர பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரண்டாவது இடத்தையும், இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது இடத்தையும் பிடித்தது. அதேபோல, கல்லூரி மாணவிகளுக்கான பிரிவில் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரி முதலிடத்தையும், காங்கயம் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி இரண்டாவது இடத்தையும், உடுமலை ஜிவிஜி. விசாலாட்சி பெண்கள் கல்லூரி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

    அரசுப் பெண் ஊழியா்களுக்கான பிரிவில் ஜெய்வாபாய் நகர பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியைகள் அணி முதலிடத்தையும், ஜெய்வாபாய் ஆசிரியைகள் அணி இரண்டாவது இடத்தையும், தாராபுரம் ஆசிரியைகள் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது. பெண்களுக்கான பொதுப் பிரிவில் அா்ஜூா அவாா்டிஸ் வாலிபால் கிளப் முதலிடத்தையும், டைமண்ட் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் அணி இரண்டாவது இடத்தையும், கணக்கம்பாளையம் ஸ்டாா் வாலிபால் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது. 

    • ஆண்கள் பிரிவில் 12 அணிகளும் ,பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பரிசுக்கோப்பைகளை வழங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி வேட்டுவபாளையம் பகுதியில் கிங் ஆப் ஆர்.எப்., மற்றும் கே.டி.எம்.ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 14வயதுக்குட்பட்டோருக்கான கே.டி.எம்.சாம்பியன்ஸ் டிராபி (வாலிபால் போட்டி) நடைபெற்றது.இதில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும் ,பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன.இதில் வித்யா விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்கள், மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளும் முதல் இடம் பிடித்தன.

    இரண்டாம் பரிசை வேலவன் பள்ளி அணியும் , மூன்றாம் பரிசை ஜெய் சாரதா பள்ளி அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பரிசுக்கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சதிஷ் குமார், ஞானவேல், ஆர்.எப்.குழு நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
    • மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தோ்வு செய்யப்படுவா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட அளவிலான இளையோா் பிரிவு வாலிபால் போட்டிக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட வாலிபால் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்ட வாலிபால் சங்கத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் பிரிவு வாலிபால் போட்டிகளுக்கான வீரா், வீராங்கனைகள் தோ்வு சிறுபூலுவபட்டியில் உள்ள திருப்பூா் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டிசெட்) மைதானத்தில் ஜூலை 24ந் தேதி நடைபெறுகிறது. இதில், பங்கேற்கும் வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது வயதுச் சான்று, பிறப்புச் சான்று, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

    இதில் பங்கேற்பவா்கள் கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதிக்குப் பின் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். இதில் தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகள் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் வரும் ஆகஸ்ட் 6 ந் தேதி முதல் 9 ந்தேதி வரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தோ்வு செய்யப்படுவா் என்று தெரிவித்துள்ளாா்.

    ×