search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலை கம்பெனி"

    • இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார்.
    • ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயசு 51). இவர் கோணம் பகுதியில் உள்ள வலை கம்பெனியில் மேலாளராக பணி செய்து வருகிறார்.

    இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார். அப்போது தோவாளை 4 வழிச்சாலை அருகே ஒரு இடம் உள்ளதாக தகவல் கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்ட எண்ணை தொடர்பு கொண்ட போது, 4 வழிச்சாலைக்கு வரும் படி கூறி உள்ளனர்.

    அதன்பேரில் இடத்தை பார்ப்பதற்காக ரமேஷ் சென்றார். அப்போது அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ரமேசை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் அவரது கையில் கிடந்த 4 கிராம் மோதிரம் மற்றும் ரூ.6 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் ரமேஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கர்கணேசின் பின்பக்க தலையில் வெட்டினார்.
    • கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    என்.ஜி. ஓ.காலனி அருகே உள்ள ஆத்திக் காட்டுவிளையை சேர்ந்தவர் சங்கர்கணேஷ் (வயது 29).

    இவர் அப்பகுதியில் வலை கம்பெனி நடத்தி வருகிறார். 6 மாதத்திற்கு முன்பு ஆத்திக்காட்டு விளையை சேர்ந்த பாஸ்கர் (39) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி மாதம், மாதம் 10ஆம் தேதி வட்டி கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் இந்த மாதம் வட்டி கொடுக்காததை முன் விரோதமாக கொண்டு நேற்று சங்கர்கணேஷ் ஆத்திக்காட்டுவிளை வெள்ளைச்சாமியார் கோயில் பக்கம் நின்று கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த பாஸ்கர் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

    மேலும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கர்கணேசின் பின்பக்க தலையில் வெட்டினார். அப்போது அக்கம் பக்கத்தினர் வந்ததால் பாஸ்கர் தப்பி ஓடி விட்டார்.

    அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சங்கர் கணேசை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சங்கர் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் பாஸ்கர் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×