search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலைக்கு சென்ற"

    • கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியிலேயே ரேவதி திடீரென இறந்து விட்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோசணம் கடைசெல்லி பாளையத்தை சேர்ந்தவர் கோபால்குமார். டிராக்டர்டிரைவர். இவரது மனைவி ரேவதி (27). இவர் செட்டி தோட்டம் என்ற பகுதியில் தனியார் தறிகுடோனில் வேலைப்பார்த்து வந்தார்.

    வழக்கம் போல் நேற்று காலையும் கோபால்குமார், தனது மனைவி ரேவதியை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் தறி குடோனில் வேலை செய்து கொண்டு இருந்த ரேவதி மாலையில் திடீரென தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தனது கணவருக்கு செல்போனில் தகவல் கொடுத்து உள்ளார்.

    கோபால்குமார் வருவதற்குள் தறிபட்டறை உரிமையாளர் தனது காரிலேயே ரேவதியை நம்பியூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளார்.

    இதையடுத்து கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியிலேயே ரேவதி திடீரென இறந்து விட்டார். இதுப்பற்றி தெரியவந்ததும் ரேவதியின் கணவர் அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.

    மேலும் இது குறித்து நம்பியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் ரேவதி இறப்புக்கான காரணம் தெரியவரும்.

    காலையில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாலையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இந்துமதி சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
    • இதையடுத்து பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டுமென புகார் அளித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வண்டிபட்டி, அத்தாணி ரோட்டை சேர்ந்தவர் மல்லேஸ்வரன்(45). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளார்.

    இதில் 3-வது மகள் இந்துமதி (21). கோவையில் நர்சிங் பயிற்சி முடித்து விட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக பணிபுரிந்து வருகிறார்.

    தினமும் காலையில் வீட்டிலிருந்து வேலைக்கு செல்பவர் மாலை வீட்டுக்கு வந்து விடுவார். இதேபோல் சம்பவத்தன்றும் காலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இந்துமதி சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் இந்து மதியை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் பணிபுரிந்த மருத்துவமனை, நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து இந்துமதியின் பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மகளை மீட்டு தர வேண்டுமென புகார் அளித்தனர். புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×