என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரொக்கம்"
- 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது
- பாய், தலையணை, மளிகை பொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கினர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த செருகுடி கிராமத்தில் தியாகராஜன், ஆராயி, பாஸ்கரன் ஆகிய 3 பேரின் வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தகவல் அறிந்த சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அதன் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வீட்டு உபயோகப் பொருட்கள், பாய், தலையணை, மளிகைபொருட்கள், புத்தாடைகள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினர்.
அப்போது செயலாளர் ரவி, பொருளாளர் சந்தோஷ்குமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் மலர்க்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார்.
- ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பூக்கார 1-ம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (வயது 36). தனியார் நிதி நிறுவன அதிபர்.
இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதேபோல் அதே பகுதியில் உள்ள மகேஸ்வரி என்பவரது வீட்டிலும் 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
மேலும் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் காணாதது கண்டு திடுக்கிட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஏ.வி.பி.அழகம்மாள் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.
இவரது மனைவி அனிதாராஜ் (வயது 31).
சம்பவத்தன்று அனிதாராஜ் வீட்டை பூட்டி விட்டு புதுக்கோட்டைக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் காணாதது கண்டு திடுக்கிட்டார்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி.
- 2022 -23-ம் ஆண்டிற்கு அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்தில் ரூ.14.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது.
பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மன்ற கூட்ட அரங்கத்தில் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், துணைத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, முத்துமேரி, ஜாபர் அலி, புஷ்பா, கீர்த்தி வாசன், சமீரா பர்வீன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கெஜலட்சுமி, கோட்டையம்மாள், துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
பேரூராட்சி தலைவர் செயல் அதிகாரி ஒவ்வொரு பேரூராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கைகள் முழுவதும் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 2023 -ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட உத்தரவிட்ட முதல்- அமைச்சருக்கு மன்றம் நன்றியை செலுத்துகிறது.
பாபநாசம் பேரூராட்சியில் 2022 - 23 ஆம் ஆண்டு கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்வது எனவும், பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தகுதியான தெருவோர வியாபாரிகளை கணக்கெடுப்பு செய்து அடையாள அட்டை வழங்குவது எனவும், பாபநாசம் பேரூராட்சிக்கு 2022 - 23 ஆம் ஆண்டிற்கு அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்தில் ரூ.14.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது எனவும், உள்பட பேரூராட்சி வார்டுகளில் கோரிக்கை களை நிறைவேற்றுவது எனவும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.
- ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டு புடவைகள் ஆகியவை திருட்டு.
- நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
நீடாமங்கலம்:
திருவிடைமருதூர் உட்கோட்டம், நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட பழவாத்தான்கட்டளை, பாரதி நகர் தெற்கு, நேதாஜி தெருவை சேர்ந்தவர் முகில் (வயது 38).
இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.
இந்நிலையில், காலை வீட்டின் கீழ் பகுதியில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டிருந்து.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பின.
- மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது.
இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கனமழை பெய்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை.
இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து வங்கிக்குள் புகுந்தனர்.
இரண்டு பூட்டுகளை உடைத்து லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கியின் காவலாளி முத்துகண்னு வந்தார்.
இதை பார்த்த கொள்ளையர்கள் முத்துகண்ணுவை தாக்கிவி ட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் வங்கியில் இருந்த சுமார் ரூ. 7.30 கோடி மதிப்புள்ள நகைகளும் 14 லட்சம் ரொக்கமும் தப்பின.
தகவலறிந்து பொதுமக்கள் வங்கியில் முன்பு திரண்டனர்.
தகவல் அறிந்து வந்த கூட்டுறவு வங்கி தலைவர் சோமசுந்தரம், செயலாளர் அசோக் ஆகியோர் வங்கியில் கொள்ளை போகவில்லை எனவும் நகைகள், பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்தனர்
இதனால் நிம்மதியடடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கேல்சிலிண்டரை விட்டு சென்று உள்ளனர்.
மேலும் சி.சி.டிஒயர்களை கட் செய்து ஹர்டுடிஸ்க் எடுத்து சென்று உள்ளனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- மூன்று வீடுகளும் முற்றிலும் எரிந்ததில் வீட்டிலிருந்த உணவு பொருட்கள் உட்பட தளவாட சாமான்கள் சேதமடைந்தது.
- அரசு நிவாரண உதவியாக ஒரு வீட்டிற்கு ரூ. 5000 ரொக்கமும், வேஷ்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களும் மூன்று வீடுகளுக்கு வழங்கப்பட்டது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் ஊராட்சியில் தட்சன் இருப்பு தெருவில் வசிப்பவர் ஜெயராமன் (வயது 80). விவசாயக்கூலி.
கூரை வீட்டில் வசித்து வந்த இவர் நேற்று வீட்டில் சுடுதண்ணீர் அடுப்பில் வைத்து விட்டு கொல்லைப்புறம் சென்று விட்டார்.
அப்போது மேல்கூரையில் தீப்பிடித்து எரிந்தது.இதனால் அருகில் வசித்த சுந்தரமகம் மகன் சக்திவேல் (45), கணேசன் (75), ஆகியோர் வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன.
உடனடியாக இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அனைத்தனர்.
மூன்று வீடுகளும் முற்றிலும் எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருட்கள் உட்பட தளவாட சாமான்கள் சேதம் ஏற்பட்டது.
இதில் ரூ.1.5 லட்சம் சேதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், ஆகிய விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு அரசு நிவாரண உதவியாக ஒரு வீட்டிற்கு 5000 ரொக்க பணமும், வேஷ்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களை மூன்று வீடுகளுக்கும் வழங்கி ஆறுதல் கூறினர்.
- இறுதிப் போட்டிக்கு தேர்வான 4 அணிகளுக்கு நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது.
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடியில் ஊராட்சி மற்றும் விழுவை நண்பர்கள் இணைந்து மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தினர். கிரிக்கெட் போட்டியில் புதுக்கோட்டை, பழனி, திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், இறுதிப் போட்டிக்கு தேர்வா ன 4 அணிகளுக்கு நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் தோப்புத்து றை கியூஎம்சிசி கிரிக்கெட் கிளப் அணியினர் முதல் பரிசுத் தொகையான ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், 2வது பரிசு 40 ஆயிரம் மற்றும் கோப்பையை விழுந்தமாவடி விஎம்டபுள்யுசிசி அணியி னரும்,
3வது பரிசினை 30 ஆயிரம் மற்றும் கோப்பையை நாகூர் ஆர்கே என் எப்சிசிஅணியினரும் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் அகிலா வெங்கடேஷ், கிராம நாட்டாண்மை பூமாலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை விழுவை கோவிந்த் தொகு த்து வழங்கினார்.
- கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடு வழங்கப்பட்டது.
- அவரவர் வங்கிக் கணக்கில் ரொக்கமாக ரூ.17 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி:
தமிழக முதல்-அமை ச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை க்கிணங்கமயிலாடு துறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் பரிந்துரையின் கீழ் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடு வழங்கும் விழா செம்பனார்கோயிலில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர் அன்பரசன் வரவேற்றார். 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டது. இதில் அவரவர் வங்கிக் கணக்கில் ரொக்கமாக ரூ.17 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதை வளர்த்துக்கொண்டு வருமானத்தை மேம்படு த்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரஜினி, மோகன்தாஸ், கால்நடை மருத்துவர்கள் சிவரஞ்சனி, சரத்குமார், சரவணன், மோகனகிருஷ்ணன் மற்றும் உதவியாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் சாமிநாதன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்