என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/19/1732142-1172849-1tharangambadi.jpg)
பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டது.
பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடு வழங்கப்பட்டது.
- அவரவர் வங்கிக் கணக்கில் ரொக்கமாக ரூ.17 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி:
தமிழக முதல்-அமை ச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை க்கிணங்கமயிலாடு துறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் பரிந்துரையின் கீழ் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடு வழங்கும் விழா செம்பனார்கோயிலில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர் அன்பரசன் வரவேற்றார். 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டது. இதில் அவரவர் வங்கிக் கணக்கில் ரொக்கமாக ரூ.17 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதை வளர்த்துக்கொண்டு வருமானத்தை மேம்படு த்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரஜினி, மோகன்தாஸ், கால்நடை மருத்துவர்கள் சிவரஞ்சனி, சரத்குமார், சரவணன், மோகனகிருஷ்ணன் மற்றும் உதவியாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் சாமிநாதன் நன்றி கூறினார்.