என் மலர்
நீங்கள் தேடியது "மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்"
- சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசினார்.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது.
சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சிறுவன் தப்பியுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.
இந்த நிலையில், சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசினார்.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, "16 வயது சிறுவனின் முகத்தில் 3 வயது சிறுமி எச்சில் துப்பியது தான் வன்கொடுமைக்கு காரணம்" என மாவட்ட ஆட்சியர் பேசிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
- கள்ளக்குறிச்சி காவல்துறை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
- தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பை அடுத்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்த நிலையில், அது கலவரமாக மாறியது. பள்ளி சூறையாடப்பட்டதுடன், பஸ்கள், வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில், கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கள்ளகுறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.