search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் புதின்"

    • ரஷிய அதிபர் புதினை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார்.
    • அப்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி முயற்சி எடுத்து, உக்ரைன் அரசும் அதற்கு ஒத்துழைத்தால் பேச்சு வார்த்தையில் பங்கேற்க ரஷியாவும் தயங்காது என அதிபர் புதின் சமீபத்தில் தெரிவித்தார்.

    இதற்கிடையே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ரஷியா சென்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்.

    இதுதொடர்பாக, அதிபர் புதின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா-ரஷியா இடையே இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அக்டோபர் 22 முதல் 24 வரை நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ரஷிய பயணத்தின்போது உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் ஆலோசிப்பார் என தெரிகிறது.

    பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா சென்ற நிலையில் பிரதமர் மோடி உக்ரைன் சென்று ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
    • உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்ப்பு.

    மாஸ்கோ:

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்துவருகின்றன. அமெரிக்காவும் உதவி வருகிறது. இதனால் ரஷியாவிடம் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த நாடுகளால் பேச முடியவில்லை.

    சீனா ரஷியாவுடன் இணக்கமாக உள்ளது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை என வரும்போது விலகி நிற்கிறது. இந்தியா உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் நட்பு நாடாக விளங்குகிறது. சமீபத்தில் ரஷியாவிற்கு சென்ற பிரதமர் மோடி, உக்ரைனுக்கும் சென்றார்.

    இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன.

    இதற்கிடையே, பிரதமர் மோடி ரஷியா, உக்ரைன், போலந்து சுற்றுப்பயணத்தை முடிக்கு கொண்டு இந்தியா திரும்பிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் டெலிபோனில் பேசினார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைன் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும்.

    இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் போரின் முதல் வாரங்களில் ரஷியா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே எட்டப்பட்ட பூர்வாங்க ஒப்பந்தம் ஒருபோதும் செயல்படுத்தப்படாது. அவை பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையும் என தெரிவித்தார்.

    • ரஷியாவின் உயர்ந்த விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அளித்து கவுரவித்தார்.
    • இந்த உயர்ந்த விருதை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.

    மாஸ்கோ:

    இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.

    இதற்கிடையே, மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வணிகம், எரிபொருள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், ரஷியாவின் உயர்ந்த விருதான ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ த அபோஸ்தல் விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் புதின் அளித்து கவுரவித்தார்.

    இந்த உயர்ந்த விருதை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • 22-வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷியா தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது.
    • இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைசார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

    மாஸ்கோ:

    இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார்.

    மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷிய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே, மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.

    இந்நிலையில், மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். வணிகம், எரிபொருள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    அப்போது பேசிய பிரதமர் மோடி, குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்களுக்கு மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை வெற்றியடையாது என தெரிவித்தார்.

    இருநாட்டு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைசார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரஷியாவும், இந்தியாவும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஆழ்ந்த நட்பை கொண்டுள்ளன.
    • கடந்த மார்ச் மாதம் ரஷியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடப்பட்டது.

    புதுடெல்லி:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டு கடந்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக அளவிலான பேச்சு வார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபடவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கு இரு நாடுகளும் உடன்படவில்லை. ஆனாலும், ரஷியாவுடனான இந்தியாவின் நல்லுறவு தொடர்ந்து வலுவாக உள்ளது.

    ரஷியாவும், இந்தியாவும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஆழ்ந்த நட்பை கொண்டுள்ளன. இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் ரஷியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடப்பட்டது.

    பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிழக்கு நகரான விளாடிவோஸ்டாக்கிற்கு பிரதமர் மோடி சென்றார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதினைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஜெய்சங்கரிடம் பேசிய அதிபர் புதின், எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் காண்பதற்கும், அனைத்து நடப்பு சூழல்களைப் பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி ஜூலை மாதம் 8ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ரஷியா மற்றும் ஆஸ்திரியாவுக்கு பயணம் செய்ய உள்ளார் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்தப் பயணத்தின்போது அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசுவார் என தெரிகிறது.

    • ரஷியாவும், இந்தியாவும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஆழ்ந்த நட்பை கொண்டுள்ளன.
    • கடந்த மார்ச் மாதம் ரஷியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடப்பட்டது.

    புதுடெல்லி:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டு கடந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக அளவிலான பேச்சு வார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபடவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதற்கு இரு நாடுகளும் உடன்படவில்லை. ஆனாலும், ரஷியாவுடனான இந்தியாவின் நல்லுறவு தொடர்ந்து வலுவாக உள்ளது.

    ரஷியாவும், இந்தியாவும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஆழ்ந்த நட்பை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் ரஷியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடப்பட்டது.

    பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிழக்கு நகரான விளாடிவோஸ்டாக்கிற்கு பிரதமர் மோடி சென்றார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதினைச் சந்தித்துப் பேசினார்.

    அப்போது ஜெய்சங்கரிடம் பேசிய அதிபர் புதின், எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் காண்பதற்கும், அனைத்து நடப்பு சூழல்களைப் பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி ஜூலை மாதத்தில் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யக்கூடும் எனவும், இந்தப் பயணத்தின்போது அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசுவார் எனவும் ரஷிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    • பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
    • பிரதமர் மோடி 3-வது முறை பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

    வாஷிங்டன்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இதையடுத்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன.

    இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன.

    பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாக பெற்றுள்ளது. ஆனாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது.

    இதற்கிடையே, பிரதமர் மோடி 3-வது முறை பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தென் கொரியா அதிபர் யூன் சுக் ரியோல், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட், ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கால்ப்ஸ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஒன்றாகப் பணிபுரிய விருப்பம் உள்ளதாக உலக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ரஷியா, சீன அதிபர்கள் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினர்.
    • அப்போது, உக்ரைன் மீதான போருக்கு அரசியல் ரீதியில் விரைவில் தீர்வு காணப்படும் என்றனர்.

    பீஜிங்:

    கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகப் பேசினர். இருதரப்பு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

    இந்நிலையில் அதிபர் புதின், அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டாக பேட்டியளித்தனர். கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சீனா, ரஷியா இடையே நல்ல நட்பு உள்ளது. இதை யாராலும் சீர்குலைக்க முடியாது.

    எங்களுடைய உள்நாட்டு விவகாரங்கள், நட்பு மற்றும் இறையாண்மை மீதான மூன்றாம் நாடுகளின் தலையீட்டை எதிர்க்கிறோம்.

    உக்ரைன் மீதான போருக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என தெரிவித்துள்ளது.

    • ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
    • செர்ஜியை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக அதிபர் புதின் நியமித்தார்.

    மாஸ்கோ:

    உக்ரைன், ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் ரஷிய துருப்புகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

    இந்நிலையில், ரஷியாவின் பாதுகாப்பு மந்திரியான செர்ஜி ஷோய்கு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு மந்திரியாக பெலோசோவ் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அதிபர் புதின் மேற்கொண்ட மிக முக்கியமான ராணுவ மறுசீரமைப்பு இது என கருதப்படுகிறது.

    இதற்கிடையே, செர்ஜியை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக அதிபர் புதின் நியமித்துள்ளார். செர்ஜி ஷோய்கு அதிபர் புதினின் நீண்டகால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றார்.
    • தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் அபார வெற்றி பெற்றார். அவர் 88 சதவீத வாக்குகள் பெற்று சாதனை படைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதற்கிடையே தேர்தலுக்கு முன்பாக சிறையில் மரணமடைந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா, அதிபர் புதினுக்கு எதிராக தனது கணவரின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக அறிவித்தார்.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் புதின் பெற்ற வெற்றி தொடர்பாக யூலியா நவல்னயா கூறியதாவது:

    தேர்தல் முடிவுகள் ஒரு பொருட்டல்ல. உலகில் யாரும் புதினை முறையான அதிபராக அங்கீகரிக்கவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம். அவருடன் உலக தலைவர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு மேசையில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஏனென்றால் அவர் ரஷியாவின் முறையான அதிபர் அல்ல. புதின் எங்கள் அதிபர் அல்ல என்பதை நாங்கள் மற்றவர்களுக்கும் நிரூபித்துள்ளோம். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் புதின் ஆட்சியை எதிர்த்துப் போராட மக்களை வலியுறுத்துகிறேன்.

    நமக்கு அமைதியான, சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான ரஷியா தேவை. நாம் இணைந்து செயல்பட்டால் நிச்சயம் சாதிக்க முடியும். இதை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது என தெரிவித்தார்.

    • ரஷியாவில் எதிர்க்கட்சி தலைவர் மரணம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அதிபர் புதினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    வாஷிங்டன்:

    ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இதற்கிடையே, நேற்று அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அலெக்சி நவால்னி மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ரஷிய அதிபர் புதினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நவால்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்துவருகிறது. இதற்கு புதின் தான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என தெரிவித்தார்.

    உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    • உலகின் பொருளாதார வளர்ச்சியில் மிக உயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
    • அதற்கு பிரதமர் மோடியின் தலைமையே காரணம் என ரஷிய அதிபர் புதின் கூறினார்.

    மாஸ்கோ:

    ரஷிய மாணவர் தினத்தை முன்னிட்டு அதிபர் விளாடிமிர் புதின் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வளர்ச்சி கொண்ட நாடு இந்தியா. அதற்கு காரணம் தற்போதைய பிரதமரின் தலைமைப் பண்புகளே ஆகும். அவரது தலைமையில் தான் இந்தியா இத்தகைய வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளது.

    சர்வதேச அரங்கில் தங்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதால் இந்தியா மற்றும் அதன் தலைமையை ரஷியா நம்பியிருக்க முடியும். இந்தியாவை நம்பகத்தன்மை கூட்டாளியாக ரஷியா கருதுகிறது.

    இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்கிறது. இன்றைய உலகில் இது எளிதான விஷயம் அல்ல. 150 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இதனை செய்வதற்கு உரிமை உள்ளது.

    பிரதமர் தலைமையில் இந்தியாவின் உரிமை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது வெறும் அறிக்கை மட்டும் அல்ல. கூட்டுப்பணியை ஒழுங்கமைப்பதில் இருந்து முக்கியமானது.

    மேற்கு உலக நாடுகளின் அரசியல் விளையாட்டு இந்தியாவிடம் எடுபடாது. ஒரு நாட்டையும், அதன் தலைமையையும் நம்பி ஒத்துழைக்க முடியுமா அல்லது அதன் தேசிய நலனுக்காக அந்த நாடு சில முடிவுகளை எதிராக எடுக்குமா போன்ற அரசியல் விளையாட்டுகள் இந்தியாவிடம் இருக்காது என குறிப்பிட்டார்.

    ×