என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்ஜிகல் ஸ்டெப்ளர்"
- கூலி தொழிலாளிக்கு இடது கையில் பலத்தவெட்டு காயங்கள் ஏற்பட்டது.
- சர்ஜிகல் ஸ்டேப்ளரை மருத்துவர் பரிந்துரை செய்தார். இது தொடர்ந்து அவருக்கு சர்ஜிகல் ஸ்டெப்ளர் மூலம் தையல் போடப்பட்டது.
ஏற்காடு:
ஏற்காட்டை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர். இவர் கடந்த வாரம் வேலை செய்யும் போது அவரது இடது கையில் பலத்தவெட்டு காயங்கள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உள்ளங்கையில் அடிபட்ட காரணத்தினால் தையல் போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் உடனடி தீர்வு காண வேண்டி சர்ஜிகல் ஸ்டேப்ளரை மருத்துவர் பரிந்துரை செய்தார். இது தொடர்ந்து அவருக்கு சர்ஜிகல் ஸ்டெப்ளர் மூலம் தையல் போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டி சேகரை 2 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து மருத்துவரின் ஆலோசனை பெருமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்த சேகர் தனக்கு புத்தகங்க ளுக்கு அடிக்கக்கூடிய ஸ்டேபிளரை அடித்ததால் தான் தனது காயம் ஆறவில்லை என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் அவருக்கு சர்ஜிகல் சஸ்டேப்ளர் முறை குறித்து விளக்கம் அளித்தனர். இதுபற்றி மருத்துவ அலுவலர் குமாரசெல்வம் கூறியதாவது:-
ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிறந்த முறையில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேகர் என்பவருக்கு சர்ஜிகல் ஸ்டேப்ளர் மூலம் தையல் போடப்பட்டது. இதுபற்றி யாரும் தவறாக சமூக வலைத்தளகங்களில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.
மேலும் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு மருத்துவமனைகளில் சர்ஜிகல் ஸ்டேப்ளர் நடைமுறையில் உள்ளது. ஏற்காட்டில் கடந்த 2ஆண்டுகளாக ஏற்காட்டில் சர்ஜிகல் ஸ்டேப்ளர் சிகிச்சை முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
சர்ஜிகல் ஸ்டேப்ளர் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இந்த பிரச்சனைக்கு காரணம். பொதுமக்கள் நடைமுறையில் உள்ள சிகிச்சை முறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.