என் மலர்
நீங்கள் தேடியது "வீடு ஜப்தி"
- அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?
- வழக்கு தொடர்பான விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நடிகர் பிரபு தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை" பிரபு தரப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, "ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த பிரபு தரப்பினர்,"நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- கோர்ட்டு உத்தரவின் பேரில் வீட்டை அதிகாரிகளிகள் ஜப்தி செய்தனர்.
- வீடு எங்களுக்கு சொந்தம் என சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடமதுரை:
திருச்சியை சேர்ந்தவர் பானு. இவருக்கு சொந்தமான வீடு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தைபேட்டையில் உள்ளது. இந்த வீட்டில் பூ வியாபாரி மாரியம்மாள், ரேவதி உள்பட 5 பேர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். மேலும் அந்த வீட்டை வாங்குவதற்காக குறிப்பிட்ட தொகையை பானுவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டை பானு வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டை வாங்கிய நபர் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் மற்றும் போலீசார் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த மாரியம்மாள் உள்பட குடும்பத்தார் நாங்களும் பணம் கொடுத்துள்ளோம். எனவே வீடு எங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறினர். மேலும் அவ்வழியாக ெசன்ற பஸ்சை மறித்து சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியால் அவர்கள் கலைந்து சென்றனர்.