search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.1 கோடி"

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    கன்னியாகுமாரி:

    தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆறுதேசம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளி கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மாதந்தோறும் 5 முதல் 10 பிரசவம் நடைபெற்று வருகிறது. பிரசவித்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.

    இங்குள்ள ஆய்வக பிரிவு, புற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப நலப்பிரிவு கட்டிடம் போன்றவை பழுதடைந்து உள்ளதால் அவற்றை மாற்றி, புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டி மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை-குடும்ப நலத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினேன். தொடர்ந்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து குரல் கொடுத்தேன்.

    இதன் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், தேசிய சுகாதார திட்டம் சார்பில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை கட்டிடங்கள் அமைக் கப்படும் என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகி யோருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் எனது சார்பிலும், தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் இந்த கட்டிட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்பதனையும் தொகுதி மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்
    • புதிய எந்தி ரங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சியில் குப்பைகளை அப்புறப்படுத்தவும், சாக்கடை அள்ளவும் பொக்லைன் மற்றும் கிட்டாச்சு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன.

    இந்த நிலையில் மாநகராட்சிக்கு புதிய பொக்லைன், கிட்டாச்சு மற்றும் மினி கிட்டாச்சு ஆகியவை வாங்கப்பட்டு உள்ளது. 15-வது மத்திய நிதி குழுமத்தின் கீழ் ரூ.37.10 லட்சத்தில் பொக்லைன் எந்திரம், ரூ.46.94 லட்சத்தில் கிட்டாச்சு எந்திரம் மற்றும் ரூ.24.09 லட்சத்தில் மினி கிட்டாச்சு எந்திரம் ஆகி யவை வாங்கப்பட்டு உள்ளன.

    இந்த எந்திரங்கள் தொடக்க நிகழ்ச்சி மாநக ராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் பங்கேற்று புதிய எந்தி ரங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகை யில், "நாகர்கோவில் மாந கராட்சியை தூய்மை யாக வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மேலும் தீவிரப்படுத்த தூய்மைப் பணிக்காக பொக்லைன் மற்றும் கிட்டாச்சு எந்தி ரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

    எனவே புதிய எந்தி ரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் சர்வீஸ் செய்ய வேண்டும்" என்றார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் பால சுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், கவுன்சிலர்கள் முத்துராமன், ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏலத்தில் 3000 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.1 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

    திருப்பூர்:

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1 கோடிக்கு நிலக்கடலை விற்பனை திங்கட்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3000 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில் முதல் ரக நிலக்கடலை ரூ.7,100 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,700 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,200 முதல் ரூ.6,400 வரையிலும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.1 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • சுப்பையார் குளத்தை தூர் வாரி, அழகுபடுத்தும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.1 கோடி செலவில் கிருஷ்ணன்கோவிலில் இருந்து செல்லும் சி.பி.எச். குறுக்கு சாலை, சிவன்கோவில் தெரு உள்ளிட்ட சாலைகள் சீரமைத்தல் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தப் பணியை மாநகராட்சி மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்ரமணியன் மண்டல தலைவர்கள் ஜவஹர்,அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் வளர்மதி, கலாராணி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    மேலும் நாகர்கோவில் மாநகராட்சியில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 47 லட்சம் செலவில் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சுப்பையார் குளத்தை தூர் வாரி, அழகுபடுத்தும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    ×