search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்பானந்த சோனாவால்"

    • ஆயுர்வேத துறையில் சில முக்கிய ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • ஆயுர்வேத சிகிச்சை நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் .

    7வது ஆயுர்வேத தினம் நேற்று இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது. இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் நடத்திய நான் ஆயுர்வேதத்தை ஆதரிக்கிறேன் என்ற பிரச்சாரத்திற்கு 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 


    நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஆயுர்வேதத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால், கூறியதாவது: ஆயுர்வேதம் என்பது நோயைத் தடுக்கும் அறிவியல், இது ஒரு பண்டைய கால அறிவு பொக்கிஷம். ஆயுர்வேத துறையில் சில முக்கிய ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும், அதன் நன்மைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.தற்போது உலகளவில் ஆயுர்வேத முறை அறியப்படுவதற்குக் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான, அயராத முயற்சிகள் தான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா, ஆயுர்வேத சிகிச்சை இந்தியாவின் பண்டைய கால பாரம்பரிய சொத்து. மழைவாழ் மக்களுடன் இணைந்து ஆயுர்வேத சிகிச்சை முறையை மேலும் வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.ஆயுர்வேதம், மற்ற சிகிச்சைகளை போல நோய்வாய்ப்பட்ட பிறகு சிகிச்சை பற்றி விவாதிப்பது இல்லை. நோய் வருவதை தடுப்பதைப் பற்றி பேசும் மருத்துவ விஞ்ஞானம் ஆயுர்வேதம் மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • பிரதமர் மோடி தலைமையின் கீழ் எந்த சூழ்நிலையையும் கையாள தயாராக உள்ளோம் என்றார்.

    புதுடெல்லி:

    சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது.

    இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு செய்தனர்.

    இந்நிலையில், உயர்தொழில்நுட்ப சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கையில் இருப்பதால் எழக்கூடிய எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

    இது தொடர்பாக, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் எந்த வகையான சூழ்நிலையையும் திறம்பட கையாள்வதற்கு நாங்கள் நன்கு தயாராக உள்ளோம். அதுபற்றி தெளிவாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    மேலும், பாரதீப், விசாகப்பட்டினம் மற்றும் சென்னை துறைமுகத்தில் ஏற்கனவே உள்கட்டமைப்பை மேம்படுத்தத் தொடங்கிவிட்டோம் என தெரிவித்தார்.

    • நமது பாரம்பரிய மருத்துவத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.
    • பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையக அலுவலகக் கட்டிடம் மற்றும் புதிய புறநோயாளிகள் பிரிவை மத்திய ஆயுஷ் துறை மந்திரி சர்பானந்த சோனோவால் இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது:

    இந்தக் கட்டிடங்களின் கட்டுமானமும் சித்த மருத்துவ முறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆயுஷ் அமைச்சகத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமையக அலுவலகம் அனைத்து வகையிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்.

    சித்த மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மாபெரும் தமிழ் சித்தர் அகத்தியர் சிலை நிறுவப்பட்டு புனிதப்படுத்தப்பட்டுள்ளது.

    சித்தா மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் என்பது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள சித்தா முறை மருத்துவ ஆராய்ச்சிக்கான ஒரு உச்ச அமைப்பாகும்.

    அதன் முதன்மையான கவனம் சித்தர்களின் உலகளாவிய கூற்றுகளை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்துவதாகும். இதுவரை 10 காப்புரிமைகள் சிசிஆர்எஸ் மூலம் தாக்கல் செய்யப்பட்டு 623 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    ஒருங்கிணைந்த சித்தா புற்றுநோய் வெளிநோயாளி பிரிவு அகில இந்திய ஆயுர்வேத நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. சித்தா அமைப்பின் மூலம் புற்றுநோயாளிகளின் நோய்த்தடுப்பு சிகிச்சைக்கு உதவுவதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

    விடுதலையின் அமிர்தப் பெருவிழா திட்டத்தின் ஒரு பகுதியாக, சிசிஆர்எஸ் மற்றும் என்ஐஎஸ் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அமுக்கரா சூரணம் மாத்திரைகளை வழங்கியுள்ளது. பாரம்பரிய மருத்துவத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

    பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை நான் அறிவேன். கொரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதையும் நான் நன்கு அறிவேன். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி. இன்றைய இளம் மருத்துவர்கள் நமது பாரம்பரிய மருத்துவத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


    இந்த நிகழ்ச்சியில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தாம்பரம் மாநகராட்சி மேயர் கே.வசந்தகுமாரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பாரம்பரிய மருத்துவ துறையில் அமெரிக்கா, பிரிட்டன் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
    • ரஷ்யா பல்கலைக் கழகங்களில் ஆயுர்வேத கல்விக்கு இருக்கைகள் அமைக்க ஒப்பந்தம்.

    பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதில் அளித்த மத்திய ஆயுர்வேதத்துறை மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளதாவது:

    மருத்துவத் துறையில் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்காக நேபாளம், பங்களாதேஷ் ஹங்கேரி உள்பட 24 நாடுகளுடனும், உலக சுகாதார நிறுவனத்துடனும் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

    இதே போல் பாரம்பரிய மருத்துவ துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்புக்காக அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளுடன் 37 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    ரஷியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் ஆயுதர்வேத கல்வி சார்ந்த படிப்புகளுக்கு இருக்கைகள் அமைக்க 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×