search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட மாநில தொழிலாளர்கள்"

    • பணிக்கு உள்ளுர்களில் இருந்து பணியாளர்கள் சரியாக வருவதில்லை
    • போதுமான அளவு சம்பளம், தங்குவதற்கு இடம், உணவு கிடைக்கிறது என கூறினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக நல்ல மழை பெய்தது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவ சாயம் செய்ய போதுமான அளவு நீர் கிடைத்தது. இதனால் சொர்ணவாரி பருவ பயிர் அறுவடை பணிகள் கடந்த மாதம் முடிவுற்றது.

    தொடர்ந்து தற்போது சித்திரை பட்ட பயிர் செய்ய நாற்று விடும் பணி முடிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் நடவு பணிகளும் முடிவுற்றது. இந்தநிலையில் நேற்று சிறுவளையம், கர்ணாவூர், உளியநல்லூர் ஆகிய பகுதிகளில் நெற்பயிரில் களை எடுக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதுகுறித்து விவசாயி கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளுக் கும் மேலாக விவசாய தொழில் செய்துவருகிறேன். ஆனால் தற்போது விவசாயம் செய்ய மிகவும் கடினமாக உள்ளது. காரணம் நடவு மற்றும் களை எடுக்கும் பணிக்கு உள்ளுர்களில் இருந்து பணியாளர்கள் சரியாக வருவதில்லை.

    இதனால் வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து நடவு மற்றும் களை எடுக்கும் பணியில் ஈடுபடுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது என்றார். வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில் எங்களுக்கு போதுமான அளவு சம்பளம், தங்குவதற்கு இடம், உணவு கிடைக்கிறது. ஒரு மாதம் இங்கு தங்கி களை எடுக்கும் பணியை முடித்துவிட்டு ஊருக்கு சென்றுவிடுவோம் என்று கூறினர்.

    • ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
    • திரும்பி வருவோம் என்று வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட கிளம்பி செல்வதால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    திருப்பூர் மாநகரில் பனியன் தொழில் நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். நீண்டகாலம் திருப்பூரில் தங்கி இருந்து பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் பண்டிகை காலங்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு செலவது வழ்ககம். அந்த அடிப்படையில் வரும் 8 ஆம்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பணியாற்றும் பீகார், ஒடிசா, மேற்கு வங்க, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சாரை சாரையாக சொந்த ஊருக்கு கிளம்பி செல்கிறார்கள். இதனால் திருப்பூரில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் ரயில்களில்வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னை சென்று அங்கிருந்து வடமாநிலங்களுக்கு செல்வதால், சென்னை செல்லும் ரயில்களிலும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஏறிச் செல்வதை பார்க்க முடிந்தது. ஹோலி பண்டிகை முடிந்ததும்திருப்பூரில் பணியாற்ற திரும்பி வருவோம் என்று வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    • பாணாவரம் அருகே அறையில் சிறை வைப்பு?
    • 2 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள மேல்வீராணம் பகுதியில் தனியார் இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் சுமார் 35-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்ளுக்கு 2 மாதமாக மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் மாத ஊதியம் கேட்டால் வெளி ஆட்களை கொண்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது.

    வடமாநில தொழிலாளர்களில் 5 பேர் நேற்று மாலை காய்கறி வாங்க வெளியே சென்றிருந்த போது மீதம் இருந்த 27 தொழிலாளர்களை தொழிற்சாலையின் உள்ளே அடைத்து வைத்து பூட்டி வைத்துள்ளதாகவும் அவர்களை வெளியே அனுப்ப மறுப்பதாவும், மேலும் வெளியே சென்ற தொழிலாளர்களை தொழிற்சாலையின் உள்ளே செல்ல அனுமதிக்காமல் மிரட்டி வெளியேற்றியதாகவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாணாவரம் ேபாலீசில் வடமாநில தொழிலாளர்கள் புகார் அளித்தனர்.

    தொழிற்சாலை நிர்வாகம் தரவேண்டிய ஊதியத்தையும், தொழிற்சாலையின் உள்ள அடைத்து வைத்திருக்கும் 25-க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

    பணி செய்யும் போது சூப்பர்வைசர் 4 பேருக்கும் அதிகமாக வேலை வாங்கியதாகவும் இதனால் ஆத்திரத்தில் இந்த 4 பேரும் சூப்பர்வைசர் சஞ்சய் குமாரை தாக்கியதை ஒப்புக்கொண்டனர்.

    கடலூர்:

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (வயது 43) அதே மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங் (32)இவர்கள் 2 பேரும் கடலூர் முதுநகர் குடிகாட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். இந்த தொழிற்சாலையில் சஞ்சய் குமார் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.நேற்று இரவு 2 பேரும் வேலை முடிந்து சக தொழிலாளர்களுடன் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது தொழிற்சாலை பகுதியில் பதுங்கி இருந்த மர்மகும்பல் திடீரென கட்டையால் சஞ்சய் குமார், சஞ்சய் சிங் ஆகியாரை சரமாரியாக தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயங்களுடன் விழுந்தனர்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சஞ்சய் குமாரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் சஞ்சய் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.விசாரணையில் இறந்த சஞ்சய் குமாருக்கும் அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 4 பேர் கும்பலுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிந்தது. இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் 4 பேர் கும்பலை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர்கள் காரைக்காடு பகுதியில் உள்ள வீட்டில் உள்ள அறை ஒன்றில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று அந்த 4 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர சவுத்ரி, ரவீந்தர் சவுத்ரி, சுனில் குமார், சோனு குமார் என்பது தெரியவந்தது. ரசாயன தொழிற்சாலையில் பணி செய்யும் போது சூப்பர்வைசர் சஞ்சய் குமார் இந்த 4 பேருக்கும் அதிகமாக வேலை வாங்கியதாகவும் இதனால் ஆத்திரத்தில் இந்த 4 பேரும் சூப்பர்வைசர் சஞ்சய் குமாரை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். இதனால் சஞ்சய் குமார் இறந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமாநில தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் தங்கி சமைத்து சாப்பிட்டு வேலைக்கு செல்கின்றனர்.
    • விலையை பொறுத்து 250 கிராம் -200 கிராம் பாக்கெட்களாக கட்டி விற்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தொழில் நிமித்தமாக 2லட்சத்திற்கும் அதிகமான வடமாநில இளைஞர்கள் வசிக்கின்றனர். திருப்பூர் மாநகரில் மட்டும் 1.50 லட்சம் பேர் உள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் தங்கி சமைத்து சாப்பிட்டு வேலைக்கு செல்கின்றனர்.

    கடந்த 6 மாதங்களாக கொல்லிமலை, எடப்பாடி உள்ளிட்ட சேலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், திருப்பூரில் ரோட்டோர மளிகை கடைகளை விரித்து, வடமாநில வாடிக்கையாளருக்கு விற்பனை செய்கின்றனர். அங்குள்ள உற்பத்தியாளரிடம் மொத்தமாக பொருட்களை வாங்கி 250 கிராம் பாக்கெட்களாக தயாரித்து, திருப்பூர், காங்கயம், கொடுவாய் பகுதிகளில் கடை நடத்த துவங்கிவிட்டனர்.

    கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சை பயறு உட்பட, அனைத்து வகை மளிகை பொருட்களையும் தலா 20 ரூபாய் பாக்கெட்டுகளாக மாற்றி விற்கின்றனர். விலையை பொறுத்து 250 கிராம் -200 கிராம் பாக்கெட்களாக கட்டி விற்கின்றனர்.

    இது குறித்து சாலையோர வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலத்தினர் பலர், ரேஷன் அரிசியை மக்களிடம் கேட்டு வாங்குகின்றனர். அத்துடன் தலா20 ரூபாய்க்கு விற்கும் மளிகை பொருள் பாக்கெட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமையும், காங்கயத்தில் திங்கட்கிழமையும், கொடுவாயில் செவ்வாய் கிழமையும் கடை நடத்துகிறோம். மற்ற நாட்களில், பொருட்களை வாங்கி வந்து எடைபார்த்து பாக்கெட் தயாரிக்கிறோம் என்றனர்.

    • வடமாநில தொழிலாளர் விவரத்தை பதிந்து பராமரிக்க வேண்டும்.
    • இணையதளத்தில், விவரம் சேகரிக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்களும், 21 மாநிலங்களை சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர். சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாமல், பணியாற்ற தயாராக இருப்பதால் வட மாநிலத்தவர், இடைத்தரகர் மூலம் அதிகம் வரவழைக்கப்படுகின்றனர்.அவ்வாறு வரும் நபர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தி அடையாள ஆவணங்களை பெறுவது இல்லை. குற்ற பின்னணி குறித்தும் விசாரிப்பதில்லை. ஊராட்சி நிர்வாகம் உட்பட உள்ளாட்சிகளும், வெளிமாநில தொழிலாளர் பதிவேடுகளை பராமரிப்பதில்லை.

    மாநிலத்திற்குள் நுழையும் போதே, வடமாநில தொழிலாளரின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை பெற வேண்டும். ரெயில் நிலையம் போன்ற பகுதியில், வெளிமாநில மக்கள் வருகையை, பயோமெட்ரிக் சரிபார்ப்புடன் பதிவு செய்ய வேண்டும்.

    ஊராட்சிகளிலும் பொதுநபர் பதிவேடுகளை பராமரித்து வடமாநில தொழிலாளர் விவரத்தை பதிந்து பராமரிக்க வேண்டும். தொழிற்சாலைகள், வீடுகள் போன்ற விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பொது இணையதளத்தில் ஆதார் உள்ளிட்ட விவரங்களுடன், போலீசாரின் ஒப்புதல் பெற்ற தொழிலாளர் விவரம் பராமரிக்கப்பட வேண்டும். பொது இணையதளம், கோட்டம், மாவட்டம், மாநில அளவிலான ஒருங்கிணைப்புடன் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு, குடியிருப்பு பகுதிகளின் பாதுகாப்பு கருதி, குற்ற பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.இது விஷயத்தில் வருவாய்த்துறை, தொழிலாளர்துறை, போலீஸ், ஊரக வளர்ச்சித்துறையை ஒருங்கிணைத்து, உரிய வழிமுறைகளை கையாள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் புகழேந்தி, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்ட பாதுகாப்பு குழுவுக்கு அறிவித்துள்ள அறிக்கையில்,வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்ய, தமிழக அரசின் தொழிலாளர்துறை சார்பில்,8 வகையான விவரங்களை பெற்று பதிவு செய்கிறோம். https://labour.tn.gov.in/ism/users//login என்ற இணையதளத்தில், விவரம் சேகரிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரத்து 630 தொழிலாளரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை நிர்வாகங்களுடன் பேசி, வடமாநில தொழிலாளர் விவரத்தை, இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×