search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரண்ட்"

    • கடன்களை அடைக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்
    • கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் வைத்து ஆடம்பரமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

    இந்தியாவின் பிரபல தொழிலாலதிபரும் கிங்பிஷர் நிறுவன உரிமையாளருமான விஜய் மல்லையா,  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் வாங்கிய ரூ.180 கோடி கடன் மற்றும் தனது நிறுவனத்தின் மூலம் வாங்கிய பல்வேறு கடன்களை அடைக்காமல் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

     

    இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானது. விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

     

    அவர் மீதான வழக்கு இதுநாள்வரை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவரம்மீது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. எனவே தற்போது மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இதற்கு முன்னரும் பல முறை விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கடந்த வாரம் விஜய் மல்லையா மகனுக்கு லண்டனில் வைத்து ஆடம்பரமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

     

    • வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாக கூறி உத்தரவு.

    நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதரிாக வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சம்பள பாக்கியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தயாரிப்பாளர் வழங்கவில்லை என அரவிந்த் சாமி வழக்கு தொடர்ந்தார்.

    சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாக கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடி வாரண்ட் பிரப்பிக்கப்பட்டது
    • 3முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகவில்லை.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தழுதாழை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பெருமாள் மகன் செல்லதுரை (வயது45). அதே பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் மகன் பாஸ்கரன் (39). பெரியசாமி மகன் அருண்குமார். இதில் செல்லதுரைக்கும், பாஸ்கரனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் பாஸ்கரன் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குபதிந்து செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம்தேதி ஜாமீனில் வெளியே வந்த செல்லதுரையை அவரது வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த போது பாஸ்கரன், அருண்குமார் ஆகியோர் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் பாடுகாயமடைந்த செல்லதுரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து செல்லதுரை கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டார்.

    இதுசம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்லதுரை பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக செல்லதுரை வழக்கை பதிவு செய்த அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா சாட்சியமளிக்க கோர்ட்டில் ஆஜராகுமாறு 3 முறை சம்மன் அனுப்பட்டும் கோர்ட்டுக்கு வரவில்லை.

    இந்நிலையில் நேற்று (22ம்தேதி) வழக்கு விசாரணையின் போது சாட்சியம் அளிக்க வராத அப்போதைய அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டரும், தற்போது கரூர் மாவட்டம், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டருமான கலாவிற்கு பிணையில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தும், வரும் ஆகஸ்ட் 1ம்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி மூர்த்தி உத்தரவிட்டார்.

    ×