search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரும்பு சங்கிலி"

    • ஆடி அமாவாசை நாளில் நீராடும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு
    • காசி, ராமேஸ்வரத்துக்கு இணையான புண்ணிய தளம் கன்னியாகுமரி.

    கன்னியாகுமரி:

    காசி, ராமேஸ்வரத்துக்கு இணையான புண்ணிய தளம் கன்னியாகுமரி. இங்கு இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக் கடல் ஆகிய முக்கடலும் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. இந்த முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் விநாயகர் தீர்த்தம், அனுமன் தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், கன்னியா தீர்த்தம், தனுஷ்கோடி தீர்த்தம், விசாக தீர்த்தம், மாதிரு தீர்த்தம், தனு தீர்த்தம்உள்பட 16 விசேஷ தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

    இதனால் இந்துக்கள் தங்களது முக்கிய விசேஷ நாட்களான ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை போன்ற சர்வ அமாவாசை நாட்களில் இந்த முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு பலிகர்மபூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் இந்த முக்கடல் சங்கமத்தில் வயதான முதியவர்கள் புனித நீராடும் போது அவர்களின் பாதுகாப்புக்காக முன்பு 4 புறமும் இரும்பு சங்கிலியினால் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் இந்த முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிக்கு சங்கிலித்துறை கடற்கரைபகுதி என்று ெபயர் வர க்காரணமாயிற்று. காலப்போக்கில் கடல் அலை சீற்றத்தின் காரணமாகவும் கடல் உப்புக்காற்றினால் அந்த இரும்பு சங்கிலி சேதம்அடைந்து காணாமல் போய்விட்டது. தற்போது சங்கிலித்துறை கடற்கரை என்று பெயர் இருக்கிறதே தவிர அந்த பகுதியில் சங்கிலியை காணவில்லை. இதனால் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தக் குளியல் போடும் போது ராட்சத அலையில் சிக்கி அடிக்கடி உயிர்ப்பலியாகும் சம்பவம் நடந்து வருகிறது.

    எனவே இந்த உயிர் பலியை தடுக்க கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இரும்பு சங்கிலிகள் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி ஆடி அமாவாசையையொட்டி லட்சக்கணக்கான புத்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுப்பார் கள்.

    இதைத்தொடர்ந்து ஆடி அமாவாசைஅன்று புனித நீராடும் பக்தர்களுக்கு வசதியாகவும் வயதான முதியவர்களின் பாதுகாப்புக்காகவும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 4 புறமும் இரும்பு சங்கிலியினால் பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேவசம் போர்டு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    ×