என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்திய கம்யூனிஸ்ட்"
- நாகை தொகுதி எம்.பி.யான செல்வராஜ் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
- இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யான செல்வராஜ் இன்று அதிகாலை 2 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில மாதமாக நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான செல்வராஜ் மறைவெய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
1975-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த செல்வராஜ் சுமார் அரை நூற்றாண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தவர் ஆவார். செல்வராஜ் 4 முறை நாகை பாராளுமன்ற தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களுக்கு ரெயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை செல்வராஜ் முன்னெடுத்துள்ளார்.
என் மீது கொள்கைரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், இருவரும் டெல்டாகாரர்கள் என்ற வகையிலும் மிகுந்த பாசமும் நன்மதிப்பும் கொண்டவர் செல்வராஜ். கடந்த ஆகஸ்டு மாதம்தான் செல்வராசின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றியிருந்தேன்.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யான செல்வராஜ் இன்று அதிகாலை காலமானார்.
- அவரது மறைவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சோகத்தில் உள்ளனர்
சென்னை:
நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும். இவர் கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நாகை எம்.பி. செல்வராஜ் இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் நாகை தொகுதியில் கடந்த 1989, 1996, 1998 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.
- இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடனடியாக வழங்க வேண்டும். தண்ணீர் இன்றி கருகி பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சேவையா ,விஜயலட்சுமி, பிரபாகர் , முத்துக்குமார், செல்வகுமார் ,கல்யாணி, விஜயலட்சுமி, ராமச்சந்திரன், முகில், ராமலிங்கம் ,மூத்த தலைவர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கர்நாடகா அரசு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேப்போல் அம்மாபேட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு காவிரி நீரை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதேப்போல் மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில் முற்றுகை போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.
- தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதியை குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதீக நிதி ஒதுக்கீடு.
- தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை அண்ணாமலை ஏற்பாரா? என மக்கள் கேள்வி.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேட பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் இரண்டொரு வார்த்தைகள் பேசுவது, மகாகவி பாரதியார் கவிதைகள், திருக்குறள் உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகளில் சிலவற்றை மேற்கோள் காட்டி பேசுவது, அண்மையில் காசியில் தமிழ் சங்கம் விழா எடுத்தது என்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி, ஆரவார வாய்ச்சவாடல் அடித்து வருகின்றனர்.
ஆனால் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் வஞ்சகச் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி அங்கீகரிக்கபட்ட 22 மொழிகளை சமமாக அணுக வேண்டிய மத்திய அரசு, தமிழ்மொழி உட்பட பல மாநில மொழிகளை புறக்கணித்து, சமஸ்கிருத மொழியை திணித்து, ஏற்குமாறு நிர்பந்தித்து வருகிறது.
குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை மந்திரி அளித்த எழுத்து மூலமான பதிலில் சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கியிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து நீலிக் கண்ணீர் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாய் திறந்து பேசுவாரா? எட்டுக் கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கு, தொன்மை சிறப்பும், இலக்கிய செறிவும் கொண்ட செம்மொழியாம் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை வாய் பொத்தி, கைகட்டி, முதுகை வளைத்து பணிந்து ஏற்பாரா? என தமிழக மக்கள் வினா எழுப்பி வருகின்றனர். தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யும், மோடி அரசை, அதிகாரத்தில் இருந்து நீக்குவது மட்டுமே தமிழ்மொழிக்கு பாதுகாப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கூட்டத்தில், உணவு பண்டங்கள், இன்சூரன்ஸ் பாலிசி தொகை மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
- தஞ்சை வழியாக இயங்கிய அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டை,நிதிய ளிப்பு வழங்கும் என இருபெரும் விழா நடைபெற்றது. பின்னர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு கணேசன் தலைமை தாங்கினார். சொக்கலிங்கம் வரவேற்றார்.
மாவட்ட குழு பாலசுப்பிரமணியன் உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட குழு விஜயலெட்சுமி நிதிபெற்று பேசினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாநகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த கூட்டத்தில், உணவு பண்டங்கள், இன்சூரன்ஸ் பாலிசி தொகை மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மின்சார கட்டண உயர்வை மாநில அரசு திரும்பபெற வேண்டும். தஞ்சை வழியாக இயங்கிய அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொருளாளர் ராமலிங்கம், செயலாளர் ஜார்ஜ்துரை ஆகியோர் நன்றி கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்