என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழுக்கி விழுந்த"
- அப்புசாமி குளியலறைக்கு சென்ற போது வழுக்கி தவறி கீழே விழுந்தார்.
- இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கஸ்பாபேட்டை, செல்லப்பம்பாளையம், மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புசாமி (57). இவரது மகன் சிவன். அப்புசாமி மகனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1½ வருடத்திற்கு முன்பு பாறை உடைக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்புசாமி விபத்தில் சிக்கி அவரது பார்வை பறிபோனது.
இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்புசாமி குளியலறைக்கு சென்ற போது வழுக்கி தவறி கீழே விழுந்தார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் குருநாதன் வழுக்கி விழுந்துள்ளார்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, குரு நாதன் பரிதாபமாக இறந்தார்.
- இதுகுறித்து, கோபி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
கோபி அருகே உள்ள கூகலூர், மனுவக்காடு பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (54). இவர், நாகர்பாளையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் குருநாதன் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை, கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரது உடல் நிலை மேலும் மோசமானதால் பெருந்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி, குரு நாதன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து, கோபி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.