search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து பிரச்சனை"

    • தாயின் உடல் தகனம் செய்வதற்கு முன் அதற்கான செலவுகளை சகோதரிகள் மூன்று பேரும் சமமாகப் பங்களிக்க வேண்டும் என்று சைதி ரெட்டி கூறினார்.
    • ஊர் பெரியவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சைதி ரெட்டி இறுதியில் தகனத்தை செய்ய ஒப்புக்கொண்டார்.

    உயில் எழுதுவது ஏன் முக்கியம் என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

    79 வயதான வேமு லக்ஷ்மம்மா என்ற மூதாட்டிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைய மகளுடன் வசித்து வந்தார் வேமு லக்ஷ்மம்மா. சில நாட்களுக்கு முன் குளியலறையில் விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயத்தால் வேமு லக்ஷ்மம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருப்பினும் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கினார்.

    அதுவரை தாயாரை கண்டுகொள்ளாத மகனான சைதி ரெட்டி, சகோதரிகளிடம் சண்டையிட்டு மூதாட்டியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதை தொடர்ந்து மூதாட்டி வேமு லக்ஷ்மம்மா கடந்த செவ்வாய்கிழமை இரவு காலமானார்.

    இதையடுத்து மூதாட்டி மரணத்தை தொடர்ந்து, அவர் விட்டு சென்ற ரூ.21 லட்சம் மதிப்பிலான சொத்துக்களால் ஏற்பட்ட தகராறால் அவரது இறுதிச் சடங்குகளை செய்வதில் இருந்து குடும்பத்தினர் பின்வாங்கினர்.

    ரூ.21 லட்சம் மதிப்பிலான சொத்துக்களில் மருத்துவ செலவுக்கு 6 லட்சம் ரூபாயும், மீதமுள்ள 15 லட்ச ரூபாயை சைதி ரெட்டி எடுத்துக்கொண்டுள்ளார். மூன்று மகள்களும் தங்களுக்குள் 25 சவரன் தங்க நகைகளை சமமாக பகிர்ந்து கொண்டனர்.

    இருப்பினும் தாயின் உடல் தகனம் செய்வதற்கு முன் அதற்கான செலவுகளை சகோதரிகள் மூன்று பேரும் சமமாகப் பங்களிக்க வேண்டும் என்று சைதி ரெட்டி கூறினார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் மூதாட்டியின் உடல் ஆம்புலன்சிலும், பின்னர் ஐஸ் பெட்டியிலும் என இரண்டு நாட்களாக வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கிராமப் பெரியவர்கள் தலையிட்டு, இறுதிச் சடங்குச் செலவுகளை ஏற்க சைதி ரெட்டியை வற்புறுத்திய பின்னரே பிரச்சனை தீர்க்கப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சைதி ரெட்டி இறுதியில் தகனத்தை செய்ய ஒப்புக்கொண்டார்.

    ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நாம் வாழும் போது தாய், தந்தையரிடம் அன்பு காட்டுவதில்லை. அவர்கள் இருக்கும் போது நாம் சொத்துக்காக சண்டை, பெற்றோரை யார் பார்ப்பது என்பதில் சண்டை என தொடங்கி நம்முடைய பாசத்தை காட்ட தவறுகிறோம். ஐந்தறிவு கொண்ட விலங்குகளிடம் இருக்கும் பாச உணர்வு நம்மில் பல பேருக்கு இருப்பதில்லை. தேடி தேடி அலைந்தாலும் கிடைக்காத சொத்து தாய், தந்தை பாசம் மட்டுமே என்று உணர்ந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.

    • நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • தந்தையை பிடித்து கீழே தள்ளி மிதித்து கன்னத்தில் அறைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மதனபள்ளி அடுத்த குண்டவாரி பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா ரெட்டி. இவரது மனைவி லஷ்மியம்மா. இவர்களுக்கு மனோகர் ரெட்டி, ஸ்ரீனிவாசலு ரெட்டி என 2 மகன்கள் உள்ளனர்.

    விவசாய நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த சீனிவாசலு ரெட்டி அவரது தாயின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று கீழே தள்ளி காலால் சரமாரியாக உதைத்து தாக்கினார். இதனை தடுக்க வந்த தந்தையை பிடித்து கீழே தள்ளி மிதித்து கன்னத்தில் அறைந்தார்.

    இந்த சம்பவங்களை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இந்த வீடியோ பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்தது. இதனைக் கண்ட போலீசார் வெங்கட்ராமண ரெட்டி மற்றும் அவரது மனைவியிடம் புகாரை பெற்று சீனிவாசலு ரெட்டியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • சொத்து சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே பைங்குளம் நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் (50) என்பவருக்கும் சொத்து சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் உள்ளது. இந்த நிலையில் சம்பவதினம் தாஸ் வீட்டில் இருக்கும் போது அவரது வீட்டில் அத்து மீறி நுழைந்த ராஜன், விஜயா (45) ஆகியோர் தாசை தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த தாஸ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×