search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி விளைச்சல் அதிகரிப்பு"

    • திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்திலேயே மிகப்பெரிய 2-வது மார்க்கெட்டாக உள்ளது.
    • தற்பொழுது ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தமிழகத்திலேயே மிகப்பெரிய 2-வது மார்க்கெட்டாக உள்ளது. ஒட்டன்சத்திரம் காந்தி மற்றும் காமராஜர் ஆகிய காய்கறி மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் அனைத்து விதமான ஆயிரக்கணக்கான டன் காய்கறிகள் லாரிகள் மூலம் தினமும் அனுப்பப்படுகிறது.

    தற்பொழுது ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தக்காளி நடவு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு 14 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.60 முதல் ரூ.80 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

    தற்பொழுது ஒரு பெட்டி தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. பெங்களூரு, ஆந்திரா, கோவை, பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் அதிகளவு தக்காளி விளைச்சல் இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு வரவில்லை.

    இதனால் உள்ளூர் வரத்து அதிகரித்து வாங்க ஆள்இல்லாமல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற சந்தைகளிலும் தக்காளி விைல வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விலை வீழ்ச்சியில் இருந்து சற்று உயர்ந்து வந்த தக்காளி விலை தற்போது மீண்டும் சரிய தொடங்கியிருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் நிரந்தர விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×