search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகாந்த்"

    • 1990-களின் பிரபல நடிகை சிவரஞ்சனியும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
    • இந்த தம்பதி தற்போது விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

    தமிழில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் சிவரஞ்சனி. தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன் விலங்கு, கலைஞன், தாலாட்டு, ராஜதுரை, செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் தற்போது விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்திருப்பதாக தெலுங்கு வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

     

    இதற்கு பதில் அளித்து சிவரஞ்சனி கூறும்போது, ''எனது கணவர் ஸ்ரீகாந்தும், நானும் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறோம். இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளப்போவதாக வெளியான தகவல் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தினமும் எங்களை தொலைபேசியில் பலர் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார்கள். சமூக வலைதளத்தில் வரும் எங்களின் விவாகரத்து செய்தி முழுக்க பொய்" என்றார்.

    நடிகர் ஸ்ரீகாந்த் கூறும்போது, ''என் மனைவி மற்றும் குடும்பத்தின் மீது நான் உயிராக இருக்கிறேன். எனவே தயவு செய்து விவாகரத்து வதந்தியை பரப்ப வேண்டாம்" என்றார்.

    • உலக கோப்பை தொடர்களுக்காக, இந்திய அணியை இப்போதே தயார்படுத்த வேண்டும்.
    • டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டயாவை நியமிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து, தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை இப்போதிருந்தே தயார் படுத்த வேண்டும். இதை தேர்வுக்குழு புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களே இப்போதைய தேவை. மேலும் ஆல்-ரவுண்டர்களும் அவசியமாகும். அடுத்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டயா நியமிக்க வேண்டும். தேர்வு கமிட்டி தலைவராக நான் இருந்திருந்தால், இதை நேரடியாக சொல்லி இருப்பேன்.

    1983-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டு மற்றும் 2007-ம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் நாம் எப்படி வெற்றி பெற்றோம் என்பதை பாருங்கள். அணியில் கணிசமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர். அத்தகைய வீரர்களை நாம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார். 

    • அறிமுக இயக்குனர் பா.ரஞ்சித்குமார் இயக்கும் படம் சம்பவம்.
    • இப்படத்தில் ஸ்ரீகாந்த், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌகார்பேட்டை, பொட்டு, கா ஆகிய படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் சம்பவம். இதில் ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்கின்றனர். இதன் முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார். மேலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    சம்பவம் திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.ரஞ்சித்குமார். இவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் இணைஇயக்குனராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரிஸ் கவனிக்க இசை அம்ரீஷ் மற்றும் படத்தொகுப்பு சந்திரகுமார் கவனிக்கின்றனர்.


    உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக்கரு. இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் திருமலை, மகேந்திரகுமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சம்பவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×