என் மலர்
நீங்கள் தேடியது "சாரா அலிகான்"
- ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- கவுகாத்தியில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர்.
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் புதிய விதிகளை கொண்டுவருவதை ஐபிஎல் நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த முறையும் புதிய விதிகளை கொண்டுள்ளது.
ஆனால் இந்த ஆண்டு புதிதாக கலை நிகழ்ச்சியில் ஒரு புது முயற்சியை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆனால் இந்த முறை 12 மைதானங்களில் நடக்கும் தொடக்க போட்டியில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடிய தொடக்க ஆட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த வகையில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி கவுகாத்தியில் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக பாலிவுட் நட்சத்திரம் சாரா அலி கானின் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- சாரா அலி கான் மற்றும் சுப்மான் கில் ஒருநாள் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
- கில் மைதானத்தில் விளையாடும் போது சாரா என்ற பெயரைக் கூறி அவரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இந்திய அணியின் தற்போது நட்சத்திர கிரிக்கெட் வீரராக சுப்மன் கில் பார்க்கப்படுகிறார். 3 வடிவ (டெஸ்ட், ஒருநாள், டி20) கிரிக்கெட்டிலும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இவருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் தவிர மற்றொரு காரணத்திற்காகவும் கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் இவரையும் சாரா டெண்டுல்கர் மற்றும் சாரா அலிகான் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில காலமாக, சாரா டெண்டுல்கருடன் டேட்டிங் செய்ததாகவும் மேலும் சிலர் அதை சாரா அலி கானுடன் டேட்டிங் செய்ததாகவும் நெட்டிசன்கள் குழப்பி வந்தனர்.
முன்னதாக, சாரா அலி கான் மற்றும் சுப்மான் கில் ஒருநாள் இரவு ஹோட்டலில் சாப்பிட சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இது அனைவராலும் பகிரப்பட்டு பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் தங்கள் டேட்டிங் வதந்திகள் குறித்து மூவரும் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். அதே வேளையில், அவர் மைதானத்தில் விளையாடும் போது சாரா என்ற பெயரைக் கூறி அவரை ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சுப்மன் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் பிரிந்ததாகக் தகவல் வெளியாகி உள்ளது. சாரா டெண்டுல்கருடனான டேட்டிங் வதந்திகளுக்கு மத்தியில், சாரா கானும் கில்லும் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதை நிறுத்திவிட்டனர். மற்றும் அவர்களின் சமீபத்திய நடவடிக்கை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவும், சுப்மன் கில்லும் காதலிப்பதாக வெகுகாலமாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
- கில் சிங்கிளாக தான் இருப்பதாக கூறி அந்த கிசுகிசுவுக்கு முற்றுபுள்ளி வைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மன் கில் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அவர் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார். அவர் இதுவரை 11 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவும், சுப்மன் கில்லும் காதலிப்பதாக வெகுகாலமாக சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இருவரும் சில புகைப்படங்களை தனித்தனியே பகிரும் போது ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இதனையடுத்து, இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சுப்மன் கில், நான் இப்போதும் சிங்கிளாக தான் இருக்கிறேன் என கூறி இந்த கிசுகிசுவுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். அதனையடுத்து இருவர் குறித்தும் எந்த தகவலும் வருவதில்லை.

இந்நிலையில் சுப்மன் கில் ஹிந்தி நடிகையுடன் டேட்டிங் செய்த வீடியோ மற்றும் புகைப்பட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு உணவகத்தில் சாரா அலிகானை ஒரு ரசிகை பார்த்து வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் சாரா இரவு உணவு சாப்பிடுவது போல இருந்தது. உடனே அதனை டிக்டாக்கில் பதிவு செய்துள்ளார்.

சாரா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்கள் டேபிளுக்கு அருகில் ஒரு பணியாளரிடம் ஆர்டர் செய்வது போல அந்த வீடியோவில் இருந்தது. அதில் சாரா இளஞ்சிவப்பு நிற உடையிலும் சுப்மான் வெள்ளை மற்றும் பச்சை நிற சட்டை அணிந்திருந்தார்.
இரண்டு பிரபலங்களின் ரசிகர்களும் அவர்களை ஒன்றாகக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

சாரா அலி கான் நடிகர்கள் சைஃப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோரின் மகள். இவர் மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் ஷர்மிளா தாகூர் ஆகியோரின் பேத்தியும் ஆவார். அவர் 2017-ல் கேதார்நாத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மற்றும் சிம்பா மற்றும் லவ் ஆஜ் கல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
Shubman gill date sara ali khan ko kar eha tha aur hum kisi aur hi sara ko lapet rhe the🥲#Shubmangill #CricketTwitter pic.twitter.com/oEAAXqXgOz
— Arun (@ArunTuThikHoGya) August 29, 2022சாரா அலி கான் அவர்களின் 'லவ் ஆஜ் கல் 2' படத்தின் படப்பிடிப்பின் போது கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங் செய்வதாக முன்னர் வதந்தி பரவியது. சமீபத்தில் படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் அதை உறுதிப்படுத்தினார். ஆனால், 2020- இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனுஷ் தற்போது நேரடி தெலுங்கு படமான சார் படத்தில் நடித்து வருகிறார்.
- இந்த படம் தமிழில் வாத்தி என்ற பெயரில் வெளியாக உள்ளது.
நடிகர் தனுஷ் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்தியில் ராஞ்சனா, ஷமிதாப், அந்த்ராங்கி ரே ஆகிய படங்களில் நடித்துள்ள அவர் ஹாலிவுட் படத்திலும் நடித்து இருக்கிறார். தற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் இந்தி நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் தனுஷ், இந்தி நடிகர் சயீப் அலிகான் மகளும் இந்தி நடிகையுமான சாரா அலிகான் ஆகியோரும் பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சியில் தனுசுடன் சாரா அலிகான் நெருக்கம் காட்டினார். தனுஷ் கையை விடாமல் அவர் பிடித்துக் கொண்டார். தனுசுடன் கைகோர்த்தபடி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்.

இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. தனுசும் சாரா அலிகானும் அந்த்ராங்கி ரே படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். இருவரும் நட்பாகவே பழகுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இருந்தும் ரசிகர்கள் பலர் இவர்களின் நெருக்கத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதோ என்று முணுமுணுத்து வருகின்றனர்.
தனுஷ் தமிழில் நடித்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.