என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆதித்தனார் கல்லூரி"
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இருதய செயலிழப்பிற்கான முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
- டாக்டர் ஷீயாவுல்லா இருதய செயலிழப்புக்கான காரணங்களையும், முதலுதவி சிகிச்சை முறைகளையும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் இருதய செயலிழப்பிற்கான முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அதிகாரி வீ.சிவ இளங்கோ வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். ஷிபா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ஷீயாவுல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருதய செயலிழப்புக்கான காரணங்களையும், முதலுதவி சிகிச்சை முறைகளையும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்து பேசினார். முதலுதவி குறித்து மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் ஜிம்ரீவ்ஸ் சைலண்டு நைய், மாலை சூடும் பெருமாள், மருதையா பாண்டியன், சிவ முருகன், அசோகன், பிரியதர்ஷினி, சிவந்தி வானொலி மைய பொறுப்பாளர் கண்ணன், ஷிபா மருத்துவமனை ஊழியர்கள் ராதாகிருஷ்ணன், அருண், சுகன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின் பேரில் இளைஞர் செங்சிலுவை சங்க இயக்குனர், தேசிய மாணவர் படை அதிகாரி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் சங்கர நாராயணன் முதுநிலை பொருளியல் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.
- பேச்சுப்போட்டியில் முறையே முதல் 5 இடங்களை வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுநிலை பொருளியல் மன்ற தொடக்க விழா மற்றும் ஏ.டி.ஷரோப் நினைவு பேச்சுப்போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் சங்கர நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதுநிலை பொருளியல் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பேச்சுப்போட்டியில் முறையே முதல் 5 இடங்களை வென்ற மாணவர்கள் ெசல்வம், ஞான அபினாஷ், இசக்கிமுத்து, ஆஷா, சாமுவேல் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த முதுநிலை பொருளியல் மாணவிகள் அபிதா, குணவதி, 2-வது இடம் பிடித்த சிவபாரதி மற்றும் பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த இளங்கலை மாணவர் ஞான அபினாஷ், 2-வது இடம் பிடித்த மாணவர் எரிக் பர்னாண்டோ ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ செயலர் சிவபாலன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வழிகாட்டுதலின்படி, பொருளியல் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்து இருந்தனர்.
- ஓய்வுபெற்ற தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் இமானுவேல் தங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
- கல்லூரி மாணவர்க ளுக்கான கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த அருணாசலத்துக்கு ரூ.1,500 பரிசாக வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்த னார் கல்லூரியில் பயின்றோர் கழகத்தின் 54-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப் பட்ட போட்டிகளில் வென்ற வர்களுக்கு பரிச ளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.
ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாரா யணராஜன் முன்னிலை வகித்தார். பயின்றோர் கழக துணைத்தலைவர் ஜெயசிங் சாம்ராஜ் வரவேற்று பேசினார்.
முன்னாள் மாணவரும், ஓய்வுபெற்ற தொழிலாளர் நல கூடுதல் ஆணையருமான இமானுவேல் தங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பயின்றோர் கழக இணை செயலாளர் தர்மபெருமாள் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் பொருளாளர் பகவதி பாண்டியன் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
பணிநிறைவு செய்த பேராசிரியர்கள் ரமேஷ், சுந்தரவடிவேல், கதிரேசன், முனைவர் பட்டம் பெற்ற கோகிலா, திருச்செல்வன், சிறப்பு விருது பெற்ற முனைவர் லிங்கத்துரை ஆகியோர் கவுரவிக்கப்பட்ட னர்.
பள்ளி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டி யில் முதலிடம் பிடித்த காயல்பட்டினம் சுபைதா மேல்நிலைப்பள்ளி மாணவி நஜிபா ஹில்மியா வுக்கு ரூ.1,500-ம், 2-வது இடம் பிடித்த பூச்சிக்காடு இந்து உயர்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தலட்சுமிக்கு ரூ.1,000-ம், 3-வது இடம் பிடித்த காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி முத்து சபுராவுக்கு ரூ.750-ம் பரிசாக வழங்கப்பட்டது.
கல்லூரி மாணவர்க ளுக்கான கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த அருணாசலத்துக்கு ரூ.1,500-ம், 2-வது இடம் பிடித்த மாணவி வினிஷாவுக்கு ரூ.1,000-ம், 3-வது இடம் பிடித்த மாணவர் தமிழரசுவுக்கு ரூ.750-ம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24, 27 ஆகிய தேதிகளில் கல்லூரி நிறுவனர் சி.பா.ஆதித்தனார், நிறுவனர் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோர் பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாடுவது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், 'தொழில் முனைவு- ஒரு வெற்றிகர மான தொழில் விருப்பம்' என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது. நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், சேவியர் கல்லூரி பேராசிரியர்கள் முருகேசன், பிரின்ஸ், ஸ்டெல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
- இளங்கலை பாடப்பிரிவுகளான ஆங்கிலம், பொருளியல், பி.காம். பிரிவுகளில் சில இடங்கள் இருக்கின்றன.
- இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து 3-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்காக www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20 மற்றும் 22-ந்தேதிகளில் நடந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தனர். இதில் இடம் கிடைக்காத மாணவர்கள் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.
இளம் அறிவியல் பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன. அதுபோல இளங்கலை பாடப்பிரிவுகளான ஆங்கிலம், பொருளியல், பி.காம். பிரிவுகளில் சில இடங்கள் இருக்கின்றன. எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு நடைபெறும் 3-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
- போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி கல்லூரியில் கணினி அறிவியல்துறை சார்பில் 'டெக்ஸ்ட்ரா 2023' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மாநில அளவிலான தொழில்நுட்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர்கள் 14 பேர் கலந்து கொண்டனர்.
போட்டோகிராபிக் போட்டியில் மாணவர் மோகன்ராஜ் முதல் பரிசையும், மென்பொருள் வடிவமைப்பு போட்டியில் சாந்தகுமார், ரமேஷ் குமார் ஆகியோர் முதல் பரிசையும் பெற்று சாதனை படைத்தனர்.
இந்த சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன், கல்லூரி செயலர் ச. ஜெயக்குமார், கணினி அறிவியல் துறைதலைவர் சி. வேலாயுதம், பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், ஜெயந்தி, பிருந்தா ஆகியோர் பாராட்டினர்.
மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை சார்பாக தமிழ் வழியில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் 12 வகையான பாடங்களை ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர்கள் பாலு, பசுங்கிளி பாண்டியன், சுந்தர வடிவேல், கதிரசேன், பாலகிருஷ்ணன், தீபாராணி, ராஜ் பினோ, மோதிலால் தினேஷ், கோடீஸ்பதி மற்றும் செல்வி சித்ரா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சி வகுப்பு நிறைவு விழா கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமையில் நடந்தது. கல்லூரி செயலர் ச. ஜெயக்குமார் பாராட்டி பேசினார். கல்லூரி முன்னாள் மாணவரும், நெல்லை நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளருமான கா. சுரேஷ்ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள், கடின முயற்சியோடு, தோல்வியை கண்டு அஞ்சாமல், தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றினால் எளிதாக வெற்றி பெற முடியும், என்று கூறினார்.
பொருளியல் துறை தலைவர் சி. ரமேஷ் பயிற்சி வகுப்பின் அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் சி. முருகேஸ்வரி வரவேற்று பேசினார். பயிற்சி வகுப்பு இயக்குனர் உமா ஜெயந்தி நன்றி கூறினார். பயிற்சி வகுப்பின் அனைத்து நாட்களும் வருகை தந்த முதுகலை 2-ம் ஆண்டு பொருளியல் மாணவி அபிதா மற்றும் மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் முத்துராமன், சரவண சுயம்பு ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை பேராசிரியர் சிவ இளங்கோ தொகு த்து வழங்கினார். 29 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் கணேசன், அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கினார்.
- கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை வேதியியல் துறை சார்பில் "சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். முதுநிலை வேதியியல் துறை தலைவர் கோகிலா வரவேற்றார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை இணை பேராசிரியர் எஸ்.சபியா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு "செம்பை உயிரியல் வாழ்க்கையோடு இணைத்தல்" என்ற தலைப்பில் பேசினார். திருவனந்தபுரம் மார் இவானியோஸ் கல்லூரியின் பேராசிரியர் ஆர்.செல்வின் ஜோசிபல் "விசிபில் லைட் ட்ரைவன் டைட்டானியா பேஸ்டு நானோ காம்போசைட் சிஸ்டம் பார் என்விரான்மென்ட்ஸ் அப்ளிகேஷன்ஸ்" என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் கோகிலா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராகவும், பேராசிரியர்கள் ஆல்வின் ஜெயதுரை, மூகாம்பிகை ஆகியோர் கருத்தரங்க அமைப்பாளராகவும் செயல்பட்டனர்.
கருத்தரங்கில் ஆதித்தனார் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் அந்தோணி முத்துபிரபு, ஆய்வக உதவியாளர் ஐகோர்ட் மகாராணி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- இஸ்ரோ தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
- படைப்பாற்றல் மிக்க நபராக மாறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையில்லை என்று விஞ்ஞானி மந்திரமூர்த்தி கூறினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 58-வது கல்லூரி நாள் விழா நேற்று மாலையில் நடந்தது.
இஸ்ரோ தலைமை விஞ்ஞானி
கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
ஆமதாபாத் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) செயல்பாட்டு மைய தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஊக்கப்பரிசு
டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும், 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கும், விருது பெற்ற பேராசிரியர்களுக்கும் ஊக்கப்பரிசுகளை வழங்கினார். பின்னர் தலைமை விஞ்ஞானி மந்திரமூர்த்தி பேசியதாவது:-
நான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். மிகவும் ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் பிளஸ்-2 படிப்புக்கு பிறகு உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை இக்கல்லூரி எனக்கு வழங்கியது.
நல்ல மாணவராக இருந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, சரியான பாதையை தேர்ந்தெடுத்து தேவையான உழைப்பை வழங்கியது எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது.
வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக சிக்கலானது, சவால்கள் நிறைந்தது. அதேபோன்று வெற்றிக்கான வழிமுறையை தேர்ந்தெடுப்பதும் மிகவும் முக்கியம். நாம் திறமைகளை மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும்.
கடின உழைப்பு
விஞ்ஞானியாகவோ அல்லது எந்த துறையிலும் ஒரு படைப்பாற்றல் மிக்க நபராக மாறுவதற்கு அதிர்ஷ்டம் தேவையில்லை. முறையான கல்வி, ஆழ்ந்த சிந்தனைத்திறன் உள்ளவர்கள் நிச்சயம் எந்த துறையிலும் சிறந்த வல்லுனராகலாம். மாணவர்கள் எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது. தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நாம் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தாலும், எந்த சூழ்நிலையிலும் அது நம்மை பாதிக்கக்கூடாது. கடின உழைப்பையும், அறிவாற்றலையும் கொண்டு வெற்றி பெற வேண்டும். நம்மை பலவீனப்படுத்தும் நிகழ்வுகளை அறிவாற்றலால் முறியடியுங்கள். எந்த பின்பலமும் இல்லாத சூழ்நிலையில் இருந்து முன்னுக்கு வந்த நானும் இதற்கு சிறந்த உதாரணம்.
நுணுக்கமான அறிவு
மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் எந்த விஷயத்தையும் ஏற்று கொள்ளாதீர்கள். வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களை கற்றுக் கொண்டால், அது எப்போதும் கை கொடுக்கும். கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் கல்லூரி பருவத்திலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து துறைகளிலும் நுணுக்கமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே இன்றைய தேவையாக இருக்கிறது. கல்வியின் பயன் அதிகம் இருந்தாலும், அறிவை மேம்படுத்துதலே முதன்மையானது. சவாலான வாழ்க்கையின் பிரச்சினைகளை நுட்பமான அறிவு கொண்டு வெல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆண்டு மலர் வெளியீடு
விழாவில் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் ஆண்டு மலரை வெளியிட, அதனை விஞ்ஞானி மந்திரமூர்த்தி பெற்றுக்கொண்டார். கல்லூரி பொருளியல் துறை தலைவர் ரமேஷ் வாழ்த்தி பேசினார்.
விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ், ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நூலகர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 வகையான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
- வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு,கல்லூரியின் முதல்வர் வைஸ்லின் ஜிஜி பரிசு கோப்பைகளை வழங்கினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அகதர உள் மதிப்பீட்டு குழு சார்பில் கலாசார போட்டிகள் கடந்த 13-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இளங்கலை மாணவ பிரிவு மற்றும் முதுநிலை மாணவ பிரிவுகளில் தனித்தனியே பாட்டுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் போட்டி, குழு நடன போட்டி, புகைப்பட போட்டி, குறும்பட போட்டிகள் என மொத்தம் 14 வகையான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் வைஸ்லின் ஜிஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். முன்னதாக ஆதித்தனார் கல்லூரியின் 2022-2023-ம் ஆண்டுக்கான கலைத்திறன் போட்டிகளின் பொறுப்பாளர் ஸ்ரீதேவி வரவேற்றார். ஆதித்தனார் கல்லூரியின் செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். உள்தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் வேலாயுதம், ரமேஷ் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஆதித்தனார் கல்லூரியில் வருடத்திற்கு 2 முறை ரத்த தான முகாம் நடத்தப்படுகின்றது.
- ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 200 மாணவர்கள் ரத்ததானம் செய்கின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் சார்பாக வருடத்திற்கு 2 முறை ரத்த தான முகாமானது ஆதித்தனார் கல்லூரியில் நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு முகாமிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்கின்றனர். அது மட்டுமல்லாது எப்பொழுதெல்லாம் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுகின்றதோ, அப்பொழுது மாணவர்கள் மருத்துமனைக்கும் நேரடியாகச் சென்று ரத்ததானம் செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 200 மாணவர்கள் ரத்ததானம் செய்கின்றனர். மாணவர்களின் தன்னலமற்ற இந்த சேவையைப் பாராட்டும் வகையில் ஆதித்தனார் கல்லூரியில் ரத்த தான கழகத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் டி.பொன்ரவி, மருத்துவர் பாபநாசகுமார் மற்றும் மருத்துவர் சசிகலா முன்னிலையில் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் மற்றும் கல்லூரிச் செயலர் ஜெயக்குமார், ரத்ததான கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி சகாய சித்ரா மற்றும் சி.மோதிலால் தினேஷ் ஆகியோரைப் பாராட்டினர்.
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
- சாதனை படைத்த தொழில் அதிபர்களோடு மாணவர்கள் கலந்துரையாடினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி- புத்தாக்க மையம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவு வளர்ச்சி- புத்தாக்க மையமும் இணைந்து இ்றுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் வளர்ச்சி கருத்தரங்கம் நடத்தியது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். கருத்தரங்கில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் எஸ்.காயத்ரி தொழில் திட்டமிடல் மற்றும் புதிய தொழிைல தொடங்குவதில் உள்ள சவால்கள், அதை எவ்வாறு எதிர் கொண்டு வெற்றியடைவது என்பது பற்றி விளக்கி பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி மைய உதவி இயக்குனர் ஜீ.அகிலா தொழில் முனைவோர்களுக்கு அரசு ஏற்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பின் நெல்லை மாவட்ட துணை இயக்குனர் ஜெரினாபூபி அரசு தொழில் தொடங்க வழங்கும் நிதியுதவி மற்றும் சலுகைகள் குறித்து பேசினார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் பகுதியில் சாதனை படைத்த தொழில் அதிபர்களோடு மாணவர்கள் கலந்துரையாடினர்.
இதில் திருச்செந்தூர் கே.சின்னத்துரை அன்கோ உரிமையாளர் ஜெ.முருகன், விவேகா கட்டுமான உரிமையாளர் பொறியாளர் கே.நாராயணன், வீ.ஆர்.கே. லிங்சின் உரிமையாளர் கே.பி.ரவிச்சந்திரன் மற்றும் மிஸ்டர் கிட்டுக் கிச்சன் உரிமையாளர் எஸ்.சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். முன்னதாக தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் புத்தாக்க மைய ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம் வரவேற்றார். தொழில் முனைவோர் மையத்தின் இயக்குனர் மாலைசூடும் பெருமாள் நன்றி கூறினார்.
கருத்தரங்க ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின்படி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் புத்தாக்க நிலையத்தின் இயக்குனர் மகேஷ் குற்றாலம் மற்றும் அதன் கள இயக்குனர் சுவேதரன் வழிகாட்டுதலின்படி பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், ஸ்ரீதேவி, முருகேஸ்வரி, மருதையா பாண்டியன், ராஜ்பினோ, செல்வகுமார், கருப்பசாமி, திலிப்குமார், சிரில் அருண், ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் பாலு, முத்துக்குமார், ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட், அந்தோணி சகாய சித்ரா, கவிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
- ஆதித்தனார் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்
- போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கண்காட்சியில் கிடைக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் நெல்லையில் உள்ள சி.ஆர். புத்தக ஏஜென்சி தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் அனைத்து துறைகளை சேர்ந்த புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போட்டி தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் கண்காட்சியில் கிடைக்கிறது.
இந்த கண்காட்சி தொடக்க விழாவில் மூத்த பேராசிரியர் முனைவர் பாலு, உடற்கல்வி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ், உதவி பேராசிரியர் மருதையா பாண்டியன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் நூலக உதவியாளர் சரவணமுத்து, முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். கண்காட்சி நாைள மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்.
- கருத்தரங்கில் 32 ஆய்வு மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத் துறை சார்பில் ' இன்றைய நடைமுறை வாழ்வில் இயற் கணிதம் மற்றும் பகுப்பாய்வு கணிதம்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்த ரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, அன்றாட வாழ்வில் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் குறித்து பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர் ஜோசப் கென்னடி கலந்து கொண்டு, எண் அமைப்பு மற்றும் புலங்கள் என்ற தலைப்பில் பேசினார். இதில் ஆய்வு மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
கருத்தரங்கில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பரணிதர் கலந்து கொண்டு, குவிந்த தொடர்கள் குறித்தும், கணிதத்துறை பகுப்பாய்வு செய்து கற்பது குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் 32 ஆய்வு மாணவர்கள், தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இந்த கட்டுரைகள் ஐ.எஸ். பி.என். எண் கொண்ட புத்தகமாக வெளியிடப்பட்டது. கருத்த ரங்கின் பொறுப்பாளராக கணிதத் துறை பேராசிரியை செண்பகா தேவி செயல் பட்டார். இதில் 19 கல்லூரி களை சேர்ந்த பேராசிரி யர்கள், ஆய்வு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கை கணிதத்துறை தலைவர் வழிகாட்டுதல்படி, துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்