என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சரிபார்ப்பு"
- திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
- திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை தொகுதி பூத் முகவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குமாா் நகரில் நடைபெற்றது.
திருப்பூா்:
திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை தொகுதி பூத் முகவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் குமாா் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். திருப்பூா் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மாநகா் மாவட்ட அவைத்தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினரும், திருப்பூா் மாநகா் மாவட்ட பூத் கமிட்டிபொறுப்பாளருமான செ.தாமோதரன் பேசியதாவது:-
பாஜக., கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் திமுக., வேண்டும் என்றே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறது. தோ்தலில் நாம் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளோம்.
தற்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், கட்சி நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க வேண்டும். மேலும், புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவை முன்னாள் துணைத் தலைவரும், மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில், வாக்காளா் சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக., நிா்வாகிகள் இந்த முகாமில் பங்கேற்க வேண்டும். லஞ்சம், ஊழலில் தலைசிறந்த மாநகராட்சியாக திருப்பூா் உள்ளது என்றாா்.
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் 8 பெல் என்ஜினீயர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது.
- ரிஜக்டடு எந்திரங்கள் 7 தினங்களுக்குள் பெங்களூர் பெல் நிறுவனத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும்
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, சென்னை தலைமை தேர்தல்அலுவலர் - அரசு முதன்மை செயலர் கடிதத்துடன் வரப்பெற்ற கால அட்டவணையின் படி திருப்பூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் 8 பெல் என்ஜினீயர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது.
முதல் நிலை சரிபார்ப்பு பணியின் ஒரு பகுதியாக மாதிரி வாக்குப்பதிவு 8.8.2023 மற்றும் 9.8.2023 ஆகிய இரு தினங்களில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
4.7.2023 அன்று திருப்பூர் மாவட்ட இருப்பு விபரம் 5698 பேலட் யூனிட் எந்திரங்களும், 3600 கண்ட்ரோல் யூனிட் எந்திரங்களும், 3876 விவிபேட் எந்திரங்களும் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி எப்எல்சி. ரிஜக்டடு எந்திரங்கள் 7 தினங்களுக்குள் பெங்களூர் பெல் நிறுவனத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
- மூவலூர் ராமாமிர்த அம்மையார் என்ற திட்டத்தை அரசு தொடங்கியது.
- சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 303 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் :
பெண் கல்வியை ஊக்கப்படுத்த தமிழக அரசு கல்லூரியில் பயலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க மூவலூர் ராமாமிர்த அம்மையார் என்ற திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 303 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 100 மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு சமூகநலத்துறை அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தீபா, மகாலட்சுமி ஆகியோரின் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
- பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்களை வேளாண் அலுவலகத்தில் சரிபார்க்க வேண்டும்.
- நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுரை
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டசெய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:-
பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு, 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம், வேளாண் இடுபொருள்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடா்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொ கையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 93,089 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இதுவரை 11 தவணைத் தொகைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளன.
தற்போது 12- வது தவணைத் தொகை பெறுவதற்கு வருகிற 31-ம் தேதிக்குள் நிதியுதவி பெறும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியமாகும். நில ஆவணங்களை சரிபாா்க்கும் பணி அனைத்து வட்டார வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே, இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்களை (பட்டா சிட்டா மற்றும் ஆதாா் நகலுடன்) தங்கள் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகி நிலம் சரிபாா்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம். இந்த சரிபாா்ப்பு பணிகள் முடிந்த பிறகே அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்