என் மலர்
நீங்கள் தேடியது "நாற்கரசாலை"
- திடீர் மழையால் பண்ருட்டி- சென்னை சாலை சேறும் சகதியுமாக மாறியது.
- நாற்கர சாலை பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த வீடு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை போடும் பணிதொடங்கியது.
கடலூர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலை திடீர் மழையால் சேரும்சகதியுமாகிபோக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து கடலூர் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை யாக தரம் உயர்த்தப்பட்டு நாற்கரசாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நாற்கர சாலை பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த வீடு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை போடும் பணிதொடங்கியது. ஆனால் 10 ஆண்டு களாகதொடங்கிய நிலையிலேயே இந்த பணி உள்ளதால் சாலையில் குண்டும் குழியும் ஏற்பட்டு உயிர் பலி வாங்கும் சாலையாக இந்த பண்ருட்டி சென்னை சாலை மாறி உள்ளது. கடந்த 2 நாட்களாக பண்ருட்டியில் மழை பெய்து வருவதால் குண்டும் குழியுமான சாலை சேரும் சகதியும் மாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள மரண குழியில் விழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. எனவே கடலூர் கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி இந்த போக்குவர த்துக்லாயக்கற்ற சாலையை சீரமைத்து தரவேண்டும் என அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்