என் மலர்
முகப்பு » விதை பரிசோதனை
நீங்கள் தேடியது "விதை பரிசோதனை"
- விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பது அவசியமாகும்.
- நல்ல தரமான நல்ல முளைப்பு திறன் உள்ள விதைகளே உயர் விளைச்சலை தரக்கூடிய விதையாகும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் விதை பரிசோதனை நிலைய அலுவலர் ராஜகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பது அவசியமாகும். ஏனென்றால் நல்ல தரமான நல்ல முளைப்பு திறன் உள்ள விதைகளே உயர் விளைச்சலை தரக்கூடிய விதையாகும். எனவே, விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள விதை குவியல்களில் இருந்து விதை மாதிரி எடுத்து விதைபரிசோதனை அலுவலர், விதைபரிசோதனை நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு ரூ.80 கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
×
X