search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்களிடம் ஒப்படைப்பு"

    கார்த்திக் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கொடுமுடி:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவர் கடந்த 6 மாதமாக ஈரோடு மாவட்டம் பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கார்த்திக் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்ட கார்த்திக் உறவினர்கள் திடீரென கார்த்திக் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அரசு தலைமை மருத்துவமனை போலீசார் மறியலில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கார்த்திக் உறவினர்கள் கூறும்போது, கார்த்திக்கின் 2 கை மணிக் கட்டும் அறுக்கப்பட்டு ரத்த காயம் உள்ளது. எனவே அவரது சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று அவர்கள் கலந்து சென்றனர்.

    பின்னர் கார்த்திக் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • வீட்டை விட்டு சென்ற சிறுவர்கள் நீண்ட நேரம் வீட்டுக்கு வராததால் அவர்களது பெற்றோர் மாணவர்களை தேடினர்.
    • அப்போது மாணவர்கள் 3 பேரும் குட்டையில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் பழனி யப்பா வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் நந்தகிஷோர் (8). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த பாலுசாமி மகன் சிபினேஷ் (10), வெங்கடேஷ் மகன் ராகவன் (10). இவர்கள் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். நந்த கிஷோர், ராகவன், சிபினேஷ் ஆகியோர் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

    இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் 3 பேரும் அந்தியூர் அடுத்த நாட்ராயன் நகரில் உள்ள தாமரை குட்டை என்ற பகுதிக்கு சைக்கிளில் சென்றனர்.

    அந்த பகுதியில் உள்ள குட்டையில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதை கண்ட மாணவர்களுக்கு குட்டையில் குளிக்க வேண்டும் என ஆசை ஏற் பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் குட்டையில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்ற தாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    இந்த நிலையில் வீட்டை விட்டு சென்ற சிறுவர்கள் நீண்ட நேரம் வீட்டுக்கு வராததால் அவர்களது பெற்றோர் மாணவர்களை தேடினர்.

    அப்போது தாமரைக்கரை குட்டை பகுதியில் சிறு வர்கள் வந்த சைக்கிள் மட்டும் இருந்தது. இதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் குட்டையில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குட்டையில் இறங்கி தேடினர். அப்போது மாணவர்கள் 3 பேரும் குட்டையில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    இது குறித்து அந்தியூர் ேபாலீஸ் இன்ஸபெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து மாணவர்களின் உடல்களை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று 3 மாணவர்களின் உடல்களும் பிதே பரி சோதனை செய்யப் பட்டு அவர்களது உற வினர்க ளிடம் ஒப்படை க்கப்பட்டது. உடல்களை பார்த்து அவர்க ளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    • எதிர்பாராத விதமாக திலகவதி மற்றும் அஸ்வின் ஆகியோர் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர்.
    • அப்பகுதிக்கு சென்ற பொது மக்கள் குழந்தைகளை மீட்டபோது 2 பேரும் இறந்து விட்டனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் சிவன் கோவில் குட்டை அமைந்துள்ளது. இதில் புளியம்பட்டி நொச்சிகுட்டை பகுதியை சேர்ந்த ராம்குமார் மகள் திலகவதி (17), ஆலம்பாளையம் கிருஷ்ண சாமியின் மகன் அஸ்வின் (11) மற்றும் சவுமியா, தன்யா, மனோஜ், பவித்ரா ஆகியோர் குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக திலகவதி மற்றும் அஸ்வின் ஆகியோர் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். உடனே அருகில் இருந்த குழந்தைகள் பார்த்து பயந்து வீட்டிற்கு வந்து உறவினர்களிடம் திலகவதி மற்றும் அஸ்வின் குட்டையில் மூழ்கி விட்டனர் என கூறியுள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு சென்ற பொது மக்கள் குழந்தைகளை மீட்டபோது 2 பேரும் இறந்து விட்டனர். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பிரேத பரிசோதனைக்காக 2 சிறுவர்கள் உடல் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பிரேத பரிசோ தனை முடிந்து இன்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    ×