search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை- பணம்"

    • மகளுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • அனி ஷா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது மக ளை சிகிச்சைக்காக சோ்த்து அவளுடன் அங்கேயே தங்கி இருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்க டேஸ்வரன். வெளிநாட்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி அனிஷா. இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மகளுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அனி ஷா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது மக ளை சிகிச்சைக்காக சோ்த்து அவளுடன் அங்கேயே தங்கி இருந்தார்.

    இதற்கிடையே அனிஷா வின் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு செல்போன் மூல மாக தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு சங்கராபுரத்துக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, 7 வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் அனிஷா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி கொள்ளை நடந்த வீட்டை பார்வை யிட்டு விசாரணை செய்து வருகிறார்.

    • தலைமை ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழகம் பணிமனை எதிரே குடியிருந்து வருபவர் ராமநாதன் (வயது65), இவர் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சித்ரா. இவரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை.

    கள்ளிக்குடி அருகே உள்ள தென்னமநல்லூரில் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சித்ரா இறந்துவிட்டார். இதனால் ராமநாதன் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார்.

    இந்த சந்தர்ப்பத்ைத பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் திருமங்க லத்தில் உள்ள ராமநாதன் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 50,000 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய ராமநாதன் நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு கணவன், மனைவி வேலைக்கு சென்று விட்டனர்.
    • வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் ( வயது 50) . இவரது மனைவி செல்வராணி . இருவரும் கூலித் தொழிலாளிகள். நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

    பிறகு வேலை முடிந்து மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.இதை அறிந்த செல்வராணி பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணமும், வீட்டின் டேபிள் மேல் வைத்திருந்த செல்போனும் காணாமல் போனது தெரியவந்தது, இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இதேபோல் பச்சாபாளையத்தை சேர்ந்த கருணாகரன் மகன் மகேஸ்வரன் (30). இவர் வெள்ளகோவிலில் டெய்லராக வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வீட்டு சாவியை வீட்டின் முன் உள்ள குளியல் அறையில் வைத்து விட்டு செல்வது வழக்கம், அதேபோல் நேற்று சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு வெள்ளகோவிலுக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரன் வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது தெரியவந்தது.

    இது குறித்து மகேஸ்வரன் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார், புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து இரண்டு வீட்டில் திருட்டு நடந்துள்ளதால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ×