search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேல்மலையனூர் அங்காளம்மன்"

    • இங்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால், நினைத்தது நடக்கும்.
    • அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை.

    மூன்று அமாவாசை வழிபாடு பயன்கள்

    மேல்மலையனூர் தலத்துக்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    இதன் பின்னணியில் உள்ள வரலாறு

    ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும்.

    உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண் பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.

    அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை.

    பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.

    இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள்

    அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம்.

    இந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள் படி நிறைவுபெறுகிறது.

    ஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ஆற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    • பக்தர்கள் மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருகின்றனர்.
    • மொட்டை அடிப்பது, காது குத்துவது, போன்ற வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன.

    அங்காளம்மன்-வேண்டுதல்கள்

    மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நிறைவு கூறவே,

    ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வேண்டுதல் பெயரில், மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது,

    மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான,

    பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கை உருபடிகளை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து கொள்வார்கள்.

    அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா தமிழ் நாட்டில் வேறு எங்கும் கொண்டாடுவதில்லை.

    இந்த மேல்மலையனூரில் மட்டுமே அது திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.

    • அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரமஹத்தி விலகிய நாள்.
    • ஐந்தாம் நாள் பகல் உற்சவமாக “தீமிதி” திருவிழா கொண்டாடப்படுகிறது.

    அங்காளம்மனுக்கு திருவிழா கொண்டாடுவது

    கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும்.

    அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரமஹத்தி விலகிய நாள்.

    அன்றுதான் அங்காளி என்ற பூங்காவனத்தாள் அங்காளம்மனாக ஆனாள்.

    முந்தைய பதிவில், கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகத்தில் அந்த பாம்பு படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்ததாகவும் அறிந்த வண்ணம், இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறவே எழுந்த நிலைகளே திருவிழாக்கள் ஆகும்.

    மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு வந்து இரவு தங்கியதால், அன்றைய இரவை சிவன் ராத்திரி என்றும்,

    அன்று இரவில் கரம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும்,

    மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவில் சூரையிடும் நாள், இதையே மயானக்கொள்ளை என்றும்

    அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள்.

    ஆண்பூத கணங்கள் புற்றை சுற்றி பணிந்தன என்று அறிந்த வண்ணம்,

    இரவில் ஆண்பூத வாகனத்தில் அம்மன் பவனி என்னும், மூன்றாம் நாள் பெண் பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும்,

    நான்காம் நாள், காட்டில் இருக்கும் மிருகத்தின் தலைவன் சிங்க வாகனத்தில் அம்மன் பவனி என்றும்,

    ஐந்தாம் நாள் வனத்தில் இருந்த பறவை கணங்கள் தன்னுடைய தலைவனான அன்னத்தை வாகனமாக ஏற்று அன்ன வாகத்தில் அம்மன் பவனி என்றும்,

    அன்றைய பகல் திருவிழாவாக கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற நிலையில் உச்ச கட்டமாக கருதி "தீமிதி" திருவிழாவாகவும் கொண்டாடப் படுகிறது.

    ஆறாம் நாள் தேவர் உலகின் ஐராவத்தில் இருந்து தேவர்கள் வந்தனர் என்றும் அவர்களின் வாகனமான ஐராவதத்தில் அம்மன் பவனி என்றும்,

    மற்றும் ஏழாம் நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேர் வடிவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர் அதன் நினைவாக ஏழாம் நாள் அம்மன் திருத்தேரில் பவனி என்றும்,

    எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை நினைவு கூறவே குதிரைவாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த உருவமான நாகத்தை நினைவு கூறவே 9 தலை நாகவாகனத்தில் அம்மன் பவனி என்றும், பத்தாம் நாள் சத்தாபரணம் அணிந்து அனைவருக்கும் அருள் கொடுக்கும் சத்தாபரணத் திருவிழா என்றும், தெப்பல் திருவிழா என்றும், கொண்டாடப்படுகிறது.

    ஆதி முதல் இன்று வரையில் இந்த திருவிழாவில் மாற்றம் இல்லாமல் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.

    இந்த 10 நாட்களும் திருவிழாவாக கொண்டாடுவது முழுக்க முழுக்க இந்த அம்மனின் வரலாற்றுத் திருவிழாவாகும்.

    தற்கால திருவிழாவாக அங்காளம்மன் வார வழிபாட்டு மன்றத்தில் சார்பாக ஐந்தாம் நாள் பகல் உற்சவமாக "தீமிதி" திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    • தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.
    • சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது

    புற்று உருவான வரலாறு

    மலையனூரின் தேவதையான பூங்காவனத் தாய் ஒரே சிற் சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூரையை இறைக்கும்போது சிவனாரைப் பற்றி இருந்த பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்டது.

    அப்போது சிவபெருமான் தாண்டி ஓடி "தாண்டவ ஈஸ்வரனாகவும்" தாண்டிய இடமான மேல்மலையனூரில் "தாண்டேஸ்வரராகவும்" அமர்ந்தார்.

    தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.

    சிவபெருமானை விட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்ட பிரம்ம கபாலம் மீண்டும் சிவபெருமானை பற்றிக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானது.

    இதைக் கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள்.

    இந்நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மன் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைந்துவிட்டார்.

    சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது.

    அது சிவ சுயம்பு உருவமானது.

    அப்புற்றுக்குள் கோயில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றது.

    இந்த நிகழ்வுகளை கண்ட பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டிலிருக்கும் மிருக கணங்கள், வனத்திலிருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றன.

    ஆனால் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லவில்லை.

    இதனால் விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமாக ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுதனர்.

    அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லவில்லை.

    இந்த காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர்.

    அப்போது கலியுகம் பிறந்தது.

    கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து போனது.

    அந்த புற்றுதான் நாம் இப்போது கோவிலில் காணும் புற்றாகும்.

    நாம் எல்லோருக்கும் அருளும் அருள் அம்பிகையான அம் காளம் அம் அன் ஸ்ரீ அங்காளம்மனாக அந்த புற்றில் உறைந்து அமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    • தேவியின் வலதுகையில் புஜம் முதலில் விழுந்த இடமே இதுதான்.
    • தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே மேல்மலையனூர் ஆகும்.

    மேல்மலையனூர் - முதல் சக்தி பீடம்

    ஆதி சதுர்யுகத்தில் கிரேதா யுதத்திற்கு முன்பான மணியுகத்தில் முதல் மூர்த்தியான சிவபெருமானின் பிரமஹத்தி தோசம் நீக்கியும், கலியுக மாந்தர்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டும் அன்னை பராசக்தி சிவ சுயம்பு மண் புற்றுவாக திரு அவதாரம் செய்து ஸ்ரீ அங்காளம்மனாக அருள்பாலிக்கும் புண்ணியத் தலமே மேல்மலையனூர் ஆகும்.

    சிவபெருமான் தாட்சாயணி தேவியின் பூத உடலை சுமந்து நர்த்தன தாண்டவம் ஆடியபோது தாட்சாயணி தேவியின் வலதுகையில் புஜம் முதலில் விழுந்த இடமே, தண்டகாரண்யம் என்ற இந்த மேல்மலையனூர் ஆகும்.

    போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிக பரந்த பரப்யையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர்.

    தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும்.

    • விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது.
    • உடனே அந்தப் பெண் அருள் வந்து கூச்சலிடுவாள்.

    தீய சக்திகள் ஓடி விடும்

    விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது.

    பிள்ளைப்பேறு, வேலையின்மை, திருமணப் பிரச்சினை, இப்படிப் பல பிரச்சினைகளுக்கும் குறி பார்ப்பதுண்டு.

    அவர்களே அதற்கான பரிகாரமும் கூறுவர்.

    பேய் பிடித்த பெண்களைக் கூட்டி வந்து அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து ஈரப்புடவையுடன் கூட்டி வருகிறார்கள்.

    அந்நேரம் பூசாரி ஒருவர் அப்பெண் தலை மீது மந்திரக் கோலை வைத்துத் தடவி கபால ஜலத்தைத் தெளிப்பார்.

    உடனே அந்தப் பெண் அருள் வந்து கூச்சலிடுவாள்.

    பிறகு மேளம் பம்பை முழங்கும்..

    பேய் பிடித்த பெண் ஆவேசமாக கத்தியபடி, தலையை விரித்து ஆடத் தொடங்குவாள்.

    இப்படி வெறியாட்டம் ஆடி பூசாரியிடமிருந்து செல்லத் துடிப்பாள்.

    உடனே பூசாரிகள் கற்பூரம் ஏற்றி அவளிடம் கொடுப்பார்.

    அதை அவள் வாயில் போட்டு விழுங்குவாள் அவளிடம், நீ யார், எதற்காக இவளைப் படித்தாய்? என்று பூசாரி கேட்பார்.

    இதன் மூலம் அந்த தீய சக்தி பற்றிய விபரம் தெரியும்.

    அந்த தீய சக்தியிடம் பேசி உறுதிமொழி வாங்கிக் கொண்டு அதை அங்காளம்மன் துணையுடன் விரட்டி விடுவார்கள்.

    அப்புறம் சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதிப்படுகிறாள்.

    இதன் மூலம் அந்த பெண் தீய சக்தியிடம் இருந்து விடுப்பதை உறுதி செய்கிறார்கள்.

    • இக்கோவிலின் தல விருட்சமாக வாகை மரம் உள்ளது.
    • இங்கு தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் பெறலாம் என நம்பப்படுகிறது.

    தொட்டில் கட்டினால் குழந்தை

    இக்கோவிலின் தல விருட்சமாக மயில் கொன்றை என்று அழைக்கப்படும் வாகை மரம் உள்ளது.

    இந்த மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தாலிக்கயிறை இந்த மரத்தில் கட்டினால் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இன்றளவும் ஐதீகமாக உள்ளது.

    மேலும், கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.


    • கோவில் புற்றின் இடது புறத்தில் காவல் தெய்வங்கள் உள்ளன.
    • வெளியில் நடராஜர், மாரியம்மன் சிலைகள் உள்ளன.

    கோவில் அமைப்பு

    இக்கோவில் புற்றின் இடது புறத்தில் வீரன், சூரன், உக்கிரன், ரணவீரன், அதிவீரன், வீரபத்திரன், பாவாடை ராயன், சங்கிலி கருப்பன், கருப்பன், முத்து கருப்பன், வேதாளம் போன்ற காவல் தெய்வங்களும்,

    வெளியில் நடராஜர், மாரியம்மன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    கோவிலின் உட்பிரகாரத்தில் வரசித்தி விநாயகர் அன்னபூரணி, கோபால விநாயகர், தலவிருட்சம் (மயில் கொன்றை) ஆகியவைகளும்,

    வெளிப்பிரகாரத்தில் பாவாடைராயன், மயானக்காளி, அம்மனின் பாதம், கங்கையம்மன், படுத்த நிலையில் உள்ள பெரியாயி அம்மன் ஆகியவையும் உள்ளன.

    • அம்மனுக்கு நான்கு திருக்கரங்கள் இருக்கின்றன.
    • அம்மனுக்கு முன்பாக புற்று உள்ளது.

    மேல் மலையனூர் அங்காளம்மன்-அம்மன் உருவ விளக்கம்

    மேல் மலையனூர் அங்காளம்மன் சிம்ம வாகனத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்ற (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.

    அம்மனுக்கு நான்கு திருக்கரங்கள் இருக்கின்றன.

    வலக்கரங்களில் உடுக்கை, கத்தி, இடக்கையில் கபாலம், திரிசூலம் ஏந்தி இடக்காலை மடித்து, வலக்காலால் பிரம்மனின் தலையை மிதித்தவாறு காட்சி தருகிறார்.

    பீடத்தின் கீழே பிரம்மனின் 4 முகங்களும் உள்ளன.

    அருகில் சிவபெருமான் சிறிய உருவத்தில் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார்.

    அம்மனுக்கு முன்பாக புற்று உள்ளது. (அம்மன் முதலில் புற்றுருவாக இருந்தார் என்பதற்கு சாட்சியாக இன்றும் உள்ளது)

    அம்மன் நாக வடிவில் உள்ளார் என்று இன்றளவும் பக்தர்களாலும், பூசாரிகளாலும் நம்பப்பட்டு வருகிறது.

    நம்பியவர்களுக்கு மட்டுமே அம்மன் பாம்பு உருவில் காட்சி தருகிறார் என்று கூறப்படுகிறது.

    இந்த புற்றின் வடிவம் அம்மன் காலை நீட்டி உட்காந்திருப்பது போல் உள்ளது.

    இந்த இடத்தில் இருந்து எடுக்கும் மண் பக்தர்களுக்கு பிரசாதமாகவும், அத்துடன் மஞ்சள், குங்குமம் வைத்து வழங்கப்படுகின்றன.

    • ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி ஓம் சுந்தரவல்லி போற்றி
    • ஓம் தாட்சாயணிதேவி போற்றி ஓம் திரிபுரசுந்தரி போற்றி

    1. ஓம் அங்காள அம்மையேபோற்றி

    2. ஓம் அருளின் உருவேபோற்றி

    3. ஓம் அம்பிகை தாயேபோற்றி

    4. ஓம் அன்பின் வடிவேபோற்றி

    5. ஓம் அனாத ரட்சகியேபோற்றி

    6. ஓம் அருட்பெருட்ஜோதியேபோற்றி

    7. ஓம் அன்னப்பூரணியேபோற்றி

    8. ஓம் அமுதச் சுவையேபோற்றி

    9. ஓம் அருவுரு ஆனவளேபோற்றி

    10. ஓம் ஆதி சக்தியேபோற்றி

    11. ஓம் ஆதிப்பரம் பொருளேபோற்றி

    12. ஓம் ஆதிபராசக்தியேபோற்றி

    13. ஓம் ஆனந்த வல்லியேபோற்றி

    14. ஓம் ஆன்ம சொரூபினியேபோற்றி

    15. ஓம் ஆங்காரி அங்காளியேபோற்றி

    16. ஓம் ஆறுமுகன் அன்னையேபோற்றி

    17. ஓம் ஆதியின் முதலேபோற்றி

    18. ஓம் ஆக்கு சக்தியேபோற்றி

    19. ஓம் இன்னல் களைவாளேபோற்றி

    20. ஓம் இடர்நீக்குவாளேபோற்றி

    21. ஓம் இமயத்து அரசியேபோற்றி

    22. ஓம் இச்சா சக்தியேபோற்றி

    23. ஓம் இணையிலா தெய்வமேபோற்றி

    24. ஓம் இரவு பகலாகி இருப்பவளேபோற்றி

    25. ஓம் இயக்க முதல்வியேபோற்றி

    26. ஓம் இறைவனின் இறைவியேபோற்றி

    27. ஓம் இகம்பர சுகமேபோற்றி

    28. ஓம் ஈசனின் தாயேபோற்றி

    29. ஓம் ஈஸ்வரி தாயேபோற்றி

    30. ஓம் ஈகைப் பயனேபோற்றி

    31. ஓம் ஈடில்லா தெய்வமேபோற்றி

    32. ஓம் ஈசனின் பாதியேபோற்றி

    33. ஓம் ஈஸ்வரி அங்காளியேபோற்றி

    34. ஓம் ஈசனின் இயக்கமேபோற்றி

    35. ஓம் ஈஸ்வரி ஆனவளேபோற்றி

    36. ஓம் ஈகை குணவதியேபோற்றி

    37. ஓம் உண்மை பொருளேபோற்றி

    38. ஓம் உலகை ஈன்றாய்போற்றி

    39. ஓம் உலகில் நிறைந்தாய்போற்றி

    40. ஓம் உருவம் ஆனாய்போற்றி

    41. ஓம் உமை அம்மையேபோற்றி

    42. ஓம் உயிரே வாழ்வேபோற்றி

    43. ஓம் உயிராய் இருப்பாய்போற்றி

    44. ஓம் உடலாய் அனந்தாய்போற்றி

    45. ஓம் உமாமகேஸ்வரியேபோற்றி

    46. ஓம் ஊனுயிர் ஆனாய்போற்றி

    47. ஓம் ஊக்கம் அருள்வாய்போற்றி

    48. ஓம் ஊழ்வினை அறுப்பாய்போற்றி

    49. ஓம் ஊரைக்காப்பாய்போற்றி

    50. ஓம் ஊழலை ஒழிப்பாய்போற்றி

    51. ஓம் ஊக்கமாய் நிறைவாய்போற்றி

    52. ஓம் ஊடல் நாயகியேபோற்றி

    53. ஓம் ஊழ்வினை களைவாய்போற்றி

    54. ஓம் ஊற்றும் கருணை மழையேபோற்றி

    55. ஓம் எங்கும் நிறைந்தாய்போற்றி

    56. ஓம் எங்களை காப்பாய்போற்றி

    57. ஓம் எண்குண வல்லிபோற்றி

    58. ஓம் எழில்மிகு தேவிபோற்றி

    59. ஓம் ஏழிசைப் பயனேபோற்றி

    60.ஓம் ஏகம்பன் துணைவிபோற்றி

    61. ஓம் ஏகாந்த ரூபிணியேபோற்றி

    62. ஓம் ஏழையை காப்பாய்போற்றி

    63. ஓம் ஐங்கரன் தாயேபோற்றி

    64. ஓம் ஐயனின் பாகமேபோற்றி

    65. ஓம் ஐயம் தெளிந்தாய்போற்றி

    66. ஓம் ஐம்பொறி செயலேபோற்றி

    67. ஓம் ஐம்புலன் சக்தியேபோற்றி

    68. ஓம் ஒருமாரி உருமாரிபோற்றி

    69. ஓம் ஒன்பான் சுவையேபோற்றி

    70. ஓம் ஒலி ஒளி ஆனாய்போற்றி

    71. ஓம் ஒப்பில்லா சக்திபோற்றி

    72. ஓம் ஒழுக்கம் அருள்வாய்போற்றி

    73. ஓம் ஒங்காரி ஆனாய்போற்றி

    74. ஓம் ஒங்காரி அங்காளிபோற்றி

    75. ஓம் ஓம்சக்தி தாயேபோற்றி

    76. ஓம் ஒருவாய் நின்றாய்போற்றி

    77. ஓம் ஒங்கார சக்தியேபோற்றி

    78. ஓம் கல்விக் கடலேபோற்றி

    79. ஓம் கற்பூர வல்லிபோற்றி

    80. ஓம் கந்தன் தாயேபோற்றி

    81. ஓம் கனகாம்பிகையேபோற்றி

    82. ஓம் கார்மேகன் தங்கையேபோற்றி

    83. ஓம் காளி சூலியேபோற்றி

    84. ஓம் காக்கும் அங்காளியேபோற்றி

    85. ஓம் சங்கரி சாம்பவீபோற்றி

    86. ஓம் சக்தியாய் நின்றாய்போற்றி

    87. ஓம் சாந்தவதியேபோற்றி

    88. ஓம் சிவகாம சுந்தரிபோற்றி

    89. ஓம் சினம் தணிப்பாய்போற்றி

    90. ஓம் சிங்க வாகனியேபோற்றி

    91. ஓம் சீற்றம் கொண்டாய்போற்றி

    92. ஓம் சுந்தரவல்லிபோற்றி

    93. ஓம் சூரசம்மாரிபோற்றி

    94. ஓம் தாண்டவ ஈஸ்வரிபோற்றி

    95. ஓம் தாட்சாயணிதேவிபோற்றி

    96. ஓம் திரிபுரசுந்தரிபோற்றி

    97. ஓம் தீபச் சுடரொளியேபோற்றி

    98. ஓம் நடன நாயகிபோற்றி

    99. ஓம் நான்மறைப் பொருளேபோற்றி

    100. ஓம் நீலாம்பிகையேபோற்றி

    101. ஓம் நீதிக்கு அரசிபோற்றி

    102. ஓம் பஞ்சாட்சரியேபோற்றி

    103. ஓம் பம்பை நாயகியே போற்றி

    104. ஓம் பார்வதா தேவி போற்றி

    105. ஓம் பாம்பின் உருவே போற்றி

    106. ஓம் பார்புகழும் தேவியேபோற்றி

    107. ஓம் பிணிக்கு மருந்தேபோற்றி

    108. ஓம் பிறவி அறுப்பாய்போற்றி

    • மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு தாண்டேஸ்வரி என்ற பெயர் உண்டு.
    • அங்காளம்மனை உன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரியும்.

    1. கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மேல்மலையனூர் கோவிலில் வழிபட உரிய பலன் கிடைக்கும்.

    2. சில பெண்களை கணவன் அடிக்கடி துன்புறுத்துவது உண்டு. அப்படி பாதிக்கப்படும் பெண்கள் மலையனூர் வந்து அங்காளம்மனிடம் முறையிட பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    3. மலையனூர் அங்காளம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சிறப்பு வாய்ந்தது.

    4. ஆடி வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி வழிபட்டால் அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள்.

    5. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு தாண்டேஸ்வரி என்ற பெயரும் உண்டு.

    6. மலையனூர் புற்று மண்ணை 48 நாட்கள் நெற்றியில் பூசி வந்தால் சகல நன்மைகளும் தேடிவரும் என்பது ஐதீகம்.

    7. மலையனூர் மண்ணில் காலடி எடுத்து வைத்தாலே போதும், கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    8. மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர்கள் கருதுகிறார்கள்.

    9. அங்காளம்மனை ஆடி மாதம் ஒரு தடவையாவது சென்று வழிபட்டால், பக்தர்களை பிடித்த பீடை, தோஷம், பில்லி, சூனியம், காட்டேரி சேட்டை, ஏவல் போன்றவை தானாக விலகும்.

    10.மேல்மலையனூருக்கு 3 அமாவாசை தொடர்ந்து வந்து அங்காளம்மனை வழிபட்டு ஊஞ்சல் ஊற்சவத்தை கண்டு வந்தால் குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, திருமண யோகம் ஆகியவை வந்து சேரும்.

    11.அங்காளம்மனை குல தெய்வமாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் ஒருநாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    12. மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார். இதனால் அம்மனின் அருள் பக்தர்களுக்கு அதிகமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.

    13.மேல்மலையனூரில் அகோர உருவத்தில் ஆவேசம் அடைந்த அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்க பெற்று, பிறகு மீண்டும் மலையனூர் வந்து அமர்ந்ததாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மலையனூர் வந்து செல்வது நல்லது என்று கூறப்படுகிறது.

    14. மலையனூர் கருவறையில் வீற்றிருக்கும் அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரியவரும்.

    15. தட்சனின் யாகத்தை அழிக்க யாகத் தீயில் விழுந்து தன் உடலை அழித்துக் கொண்ட தாட்சாயணியின் அம்சமே அங்காளி என்பதால் மலையனூர் அங்காளம்மன் தலத்தில் சாம்பலைத்தான் பிரசாதமாக தருகிறார்கள்.

    16. அங்காளம்மனை தொடர்ந்து வழிபட்டால் ராகு,கேது தோஷ பாதிப்பு உங்களை நெருங்கவே நெருங்காது.

    17.சென்னையில் சூளை, ராயபுரம், சாத்தங்காடு, மைலாப்பூர், சிந்தாதிரிப்ேபட்டை, ஜார்ஜ்டவுன், நுங்கம்பாக்கம் என்று மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அங்காளம்மன் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    18. திருவள்ளூர் அருகே புட்லூர் அங்காளம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. அரக்கோணத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    19. விருதுநகர் மாவட்டம் மாந்தோப்பு என்னும் இடத்திலும் அங்காளம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    20. திருச்சி மாவட்டம் துறையூர் அங்காளம்மன் சயன கோலத்தில் இருப்பதால் அந்த கோவில் மிகவும் விசேஷமானது.

    21.திருப்பூர் அருகே முத்தம்பாளை யம் என்னும் இடத்தில் வீற்றிருக்கும் அங்காளம்மன் சுயம்புவாகத் தோன்றியவர் என்று கூறப்படுகிறது.

    22. அங்காளம்மன் ஆலயங்களில் மயானக்கொள்ளை நடக்கும் தினத்தில் அம்மனுக்கு பொங்கலிட்டு பூஜைகள் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

    23. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மலையனூர் வந்து அங்காளம்மனை தரிசித்து செல்கிறார்கள்.

    24.சமீப காலமாக மேல்மலையனூருக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

    25. சென்னையில் இருந்து ஒவ்வொரு அமாவாசைக்கும் மேல்மலையனூருக்கு சுமார் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    26. மேல்மலையனூருக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் மீதான தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளவே வருகிறார்கள்.

    27. காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்த சன்னதி அமாவாசையன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்.

    28. மேல்மலையனூர் கோவில் புற்று மண் சித்தர்கள், தேவர்கள், மகான்கள் பாதம் பட்டு மேலும் புனிதமான மண்ணாகும்.

    29.மேல்மலையனூர் பிள்ளையாருக்கு ஒரு கால் ஊனமாக இருந்ததாம். பித்து பிடித்த நிலையில் இருக்கும் தனது தகப்பனாரின் காவல் தெய்வமாக இருந்து அன்னையை வேண்டிய பின்பு நல்லகால்களை பெற்றதாக கூறுவதுண்டு.

    • அங்காளம்மன் கோவில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர்.
    • அங்காளி மானிடங்களின் ஆன்ம பிணிகளை போக்கிடுவாள்

    ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி. இதையே ஆற்றலாக கருதும்போது, விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவாற்றல். இதையே தெய்வமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி.

    வாழ்க்கையின் நிலைகளாக, கல்வி, செல்வம், வீரம் என்று ஏற்கொள்கிறோம். லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவை இணைந்த ஒரே உருவான சிற்சக்தியே, அங்காளி என்ற உருவ மற்ற சக்தி ஆகும்.

    அங்காளம்மன் கோவில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர். இதுவே தலைமையிடமாகவும், இந்த கோவிலில் உள்ள தேவதையே தலைமைத்தாய், மூலதாய், முதன்மைத்தாய், குலதெய்வம் என்றும் வழிபாடு செய்கிறோம். இதுவே வம்சாவளியாக செய்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகள்.

    குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு தங்களின் வம்சாவளியினராக தங்களின் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் போன்றோருடன் ஒன்று சேர்ந்து வந்து மொட்டை அடிப்பது காதணி விழா செய்வது, அபிஷேகம் செய்வது, ஆராதனை செய்வது, அர்ச்சனை செய்வது, பொங்கல் வைப்பது போன்ற வழிபாடுகளை செய்யும் வழிபாட்டு தெய்வமாக அங்காளம்மன் விளங்குகின்றாள்.

    இந்த ஆற்றல் மிகு சக்தியின் துணைவர், கணவர், இறைவன் என்று போற்றப்படுபவர். முறையே சிவன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் மும்மூர்த்திகள் ஆவார்.

    இந்த மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிரம்மஹத்தி தோசம் பிடித்து விட்டதாகவும், இந்த பிரம்மஹத்தி தோஷத்தை அங்காளியான இந்த அங்காளம்மன் மாசிமாதம் விலக்கியதாகவும் அறிந்த வண்ணம், சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானின் பிரம்ம ஹத்தியை விலக்கியதை போன்றே மானிடராகிய மக்களின் துன்பம், துயரம், பிணிகள், பீடைகள், சகடைகள், தோசம், பில்லி வைப்பு, சூன்யம், ஏவல், காட்டேரி சேட்டைகள், போன்றவற்றை விலக்கி நல்வாழ்வு தரும் தெய்வம், வழிபாட்டு தெய்வம் அங்காளம்மன் ஆகும்.

    பிரம்மஹத்தியில் இருந்து சிவபெருமானை விடுவித்த அங்காளி மானிடங்களின் இந்த ஆன்ம பிணிகளைப் போக்கிடுவாள் என்று கருதியே மேல்மலையனூரை தலைமையிடமாக ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து காணிக்கை, பிரார்த்தனைகளை செய்து நல்லருள் பெற்று செல்கின்றனர்.

    ×