என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சித்தர் பீடம்"
- பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
- 1,008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்ய னடைப்பு சித்தர் நகரிலுள்ள பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில், சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வராக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.
ஆன்மிக சிறப்புபெற்ற குருமகாலிங்கேஸ்வரருக்கு சனிப்பிரதோஷம் மற்றும் சிவராத்திரி விழா சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
காலை 10 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலெட்சுமி ஹோமத்துடன் சிவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மகாபூஜை, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரவு 9மணிக்கு முதல்கால யாக பூஜைகளுடன் சிவராத்திரி வழிபாடு பூஜைகள், சிவ பெருமானுக்கு 1,008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தமிழ்மறையில் தேவாரம், திருவாசக பாராய ணத்துடனும், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரா தனை நடைபெற்றது.
இரவு 10மணிக்கு பேராசிரியர் செபாஸ்டின் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும் அபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணம் நடந்தது.
இன்று அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால யாக பூஜை சதுர்வேத பாராயணத்துடனும் நடை பெற்றது. காலை 4மணிக்கு 4-ம் கால யாக பூஜை, சிறப்பு அபிஷேம், அலங்கார தீபாராதனைகளுடன் கோலாகலமாக நடை பெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
- அனுமனுக்கு வெற்றிலை, துளசி, வடை மாலை சாற்றி சிறப்பு திபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர், அம்பாள், குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், மா பொடி திரவியம், பால், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஆஞ்ச நேயர்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பி ரமணியன் மாரிஸ்வரன் பூஜைகளை செய்தனர். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா மற்றும் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழா சிறப்புப் பூஜையில் கணபதி பூஜை, கும்ப கலச பூஜை தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து அனுமனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், வெற்றிலை, துளசி, வடை மாலை சாற்றி சிறப்பு திபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு இனிப்பு, வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.
- பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவேண்டியும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
- மதியம் 12 மணிக்கு மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11 அடி உயரத்தில் மஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் மற்றும் விநாயகர், குருமகா லிங்கேஸ்வரர், சனீஸ்வரர், ஆஞ்சநேயர், வராகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இங்கு பைரவரின் பிறந்த தினமும், மஹாதேவ காலபைரவாஷ்டமி நாளான வருகிற 16-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) சிறப்பு மஹா யாக வழிபாடுகள் சுவாமி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவவேண்டியும், இந்தியாவில் இயற்கை சீற்றங்கள் இல்லாத நிலைவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகவேண்டியும் ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
காலை 8.45 மணிக்கு விநாயகர் வழிபாடும், 9மணிக்கு கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜையும், காலை 10மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவ-காலபைரவர் ஹோமமும் நடக்கிறது. தொடர்ந்து, காலை 10.30மணிக்கு மஹா காலபைரவருக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 64 வகையான சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.மதியம் 12 மணிக்கு ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பலவகையான மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபார தனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4.30மணிக்கு காலபைரவர் மஹா யாக வழிபாடுகள் தீபாரதனையுடன் நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழி பாட்டுக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்ற னர்.
- பவுர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
- பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு யாகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகர் சித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் ஜப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரரான சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் அன்னாபிஷேகத்துடன் பழங்களால் கூடிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அன்னாபிஷேக வழிபாடுகள் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், உலக மக்கள் யாவரும் நோய் தாக்கம் எதுவுமின்றி நலமுடன் மனநிம்மதியுடன் வாழ்ந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு யாகம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். அன்னாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னாபிஷேக வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், சித்தர் பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- “ஆடி அமாவாசை”யை முன்னிட்டு 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.
- பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.
ஸ்ரீசித்தர் பீடத்தில் "ஆடி அமாவாசை"யை முன்னிட்டு பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன் தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும்,
உலகை கடந்த காலங்களில் உலுக்கிய கொரோனா போன்ற கொடியநோய்கள் இல்லாமல் முற்றிலுமாக ஒழிந்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெறவும் வேண்டி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.
கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் கோலாகலமாக தொடங்கி மதியம் வரை நடந்தது.
இதில், பங்கேற்ற பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.
யாக வழிபாடுகளைத் தொடர்ந்து ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்