என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிடிப்பு"
- விவசாயிகள் தங்களுக்கு வெங்காயம் லோடு தரகர் மூலமாக வரவேண்டிய நிலுவை தொகை பாக்கி உள்ளதாக 20 நாட்களுக்கு மேலாக சிறைபிடித்து வைத்திருந்தனர்.
- அவரது கடின முயற்சியின்பேரில் லாரி மீட்கப்பட்டது.
திருச்செங்கோடு:
மகாராஸ்திர மாநிலம் அவ்ரங்காபாத்தில் கடந்த ஜூலை 30-ந்தேதி வெங்காயம் லோடு ஏற்ற சென்ற சங்ககிரியை சேர்ந்த லாரியை அங்குள்ள விவசாயிகள் தங்களுக்கு வெங்காயம் லோடு தரகர் மூலமாக வரவேண்டிய நிலுவை தொகை பாக்கி உள்ளதாக 20 நாட்களுக்கு மேலாக சிறைபிடித்து வைத்திருந்தனர்.
இதுபற்றி லாரி உரிமையாளர் திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவர் சி.ஆர்.சங்கரிடம் தெரிவித்தார். அவரது கடின முயற்சியின்பேரில் லாரி மீட்கப்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி புக்கிங் ஏஜெண்ட்டுகள் திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு வந்து தலைவர் மூர்த்தி, செயலாளர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் துணை தலைவர் சி.ஆர்.சங்கருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.
- பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரமத்தியை மையமாகக்கொண்டு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து வருகின்றனர்.
- இந்நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் பரமத்தி நகருக்குள் வருவதில்லை என நீண்ட காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய நகரங்களில் பரமத்தியும் ஒன்றாகும். பரமத்தியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், சார்நிலைக் கருவூலம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
மேலும் பரமத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பரமத்தியை மையமாகக்கொண்டு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் பரமத்தி நகருக்குள் வருவதில்லை என நீண்ட காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் வரும் பயணிகள், பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் என அனைவரையும் (பைபாஸ்) புறவழிச்சாலையில் இறக்கி செல்வதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு நேரங்களில் புறவழிச்சாலையில் இறக்கி விடப்படும் பயணிகள் அங்கிருந்து நகருக்குள் வர அச்சம் அடைகின்றனர்.
பரமத்தி பகுதி மக்கள் இதுகுறித்து பரமத்தி வட்டார போக்குவரத்து ஆய்வாளர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் உள்ளது.
இந்நிலையில் பரமத்தி நகருக்குள் வராமல் சென்ற தனியார் பஸ்சை இப்பகுதி பொதுமக்கள், பேரூராட்சி தலைவர் மணி ,துணைத்தலைவர் ரமேஷ்பாபு மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அழைத்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட பஸ் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் 1 மணி நேரத்திற்கு மேல் அந்த வழியாக வந்த பஸ்கள், லாரிகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்