search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிலில் சிறப்பு பூஜைகள்"

    • தனி சன்னதிகள் கொண்டு அருள் பாலிக்கும் ராகு கேது, மகா காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
    • தொடர்ந்து இரவில், யாக சாலையில் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.

    ஓசூர்,

    ஓசூர் அருகே மோரனப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராகு கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா கோவில் உள்ளது. இங்கு மூலவர் பிரத்தியங்கிரா தேவி அம்மன் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். அதேபோல மகா கால பைரவர் மற்றும் ராகு கேது ஆகிய தெய்வங்க ளும் தனி சன்னதி கொண்டு உள்ளனர்.

    இந்த கோவிலில், ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை, பில்லி சூனியம், துஷ்ட சக்திகள் போன்றவற்றை அகற்றும் விதமாகவும் மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி தினம் குரு பூர்ணிமா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், குரு பவுர்ணமி தினமான நேற்று, இந்த கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் உள்ள மறைந்த ஏழுமலை சுவாமி மகா குரு சன்னிதானத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விசேஷ அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தார்.

    அதேபோல தனி சன்னதிகள் கொண்டு அருள் பாலிக்கும் ராகு கேது, மகா காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் அம்மனுக்கு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரவில், யாக சாலையில் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.

    இதில், தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டு மா விளக்கு ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி அம்மனை வழிபட்டனர்.

    • 48 நாட்கள் கோவிலில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது.
    • தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் ராம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை சுயம்பு மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம் 10-ம் தேதி, ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, 48 நாட்கள் கோவிலில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது.

    அதன் நிறைவு நாளை முன்னிட்டும் நேற்று, ஆடி அமாவாசை நாள் ஆதலாலும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

    இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபாடு நடத்தினர். பின்னர், கோவிலின் நிர்வாகிகளான, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.கோபிநாத், ஜெய்சங்கர் மற்றும் பக்தர்கள், அலங்க ரிக்கப்பட்ட உற்சவர் அம்மனை சுமந்து கோவிலை வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது.

    ×