என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மந்திரி கிரண் ரிஜிஜூ"
- கெஜ்ரிவாலுக்கு ஒருபோதும் ஊழல் ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை.
- சட்டம் அதன் கடமையைச் செய்வதற்கு விடுங்கள்.
புதுடெல்லி :
மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. அந்த சம்மன் பேரில் இன்று அவர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிறார்.
இதையொட்டி நேற்று அவர் டெல்லியில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தவறான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.
மேலும் டுவிட்டரில் ஒரு பதிவும் வெளியிட்டார். அந்த பதிவில் அவர், பொய் சாட்சியங்களையும், தவறான ஆதாரங்களையும் கோர்ட்டுகளில் தாக்கல் செய்வது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று கூறி உள்ளார்.
இதற்கு பதிலடியாக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, கெஜ்ரிவாலின் டுவிட்டர் பதிவை 'டேக்' செய்து, அவரைக் கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
கெஜ்ரிவாலுக்கு ஒருபோதும் ஊழல் ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை.
அன்னா ஹசாரே அவர்களே மன்னிக்கவும். இவ்வளவு மிகப்பெரிய சுமையை (கெஜ்ரிவால்) நாட்டிடம் ஒப்படைத்திருப்பது உங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. கோர்ட்டு உங்களை (கெஜ்ரிவால்) குற்றவாளி என தீர்ப்பு அளித்தால், கோர்ட்டின் மீதும் வழக்கு போடுவேன் என்று கூற நீங்கள் மறந்து விட்டீர்கள். சட்டம் அதன் கடமையைச் செய்வதற்கு விடுங்கள். நாம் சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
- காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
புதுடெல்லி :
மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியதாவது:-
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆதார் எண் அளிப்பதற்கான கால அவகாசம், அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்காதவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படமாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு கிரண் ரிஜிஜூ அளித்த பதில் வருமாறு:-
மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டமியற்றும் துறை, மசோதா உருவாக்கும் பணியை எளிமையாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மசோதாவை உருவாக்குவதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வக்கீல்களின் உதவியை பெறும் திட்டம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி கூறியதாவது:-
கொரோனாவுக்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டில் 1 கோடியே 9 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர். கொரோனாவுக்கு பிறகு, 2021-ம் ஆண்டில் 15 லட்சத்து 20 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 2022-ம் ஆண்டில் 61 லட்சத்து 90 ஆயிரம் பேரும் வந்தனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக 24 மணி நேரமும் 12 உள்நாட்டு மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளிலும் செயல்படும் உதவிமைய எண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெளிநாட்டில் இருந்து நமக்கு ஆதரவு தேவையில்லை.
- நமது போர், நமக்கு சொந்தமானது.
புதுடெல்லி :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான தீர்ப்பையும், எம்.பி. பதவி பறிப்பையும் கவனத்தில் கொண்டுள்ளதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியிருந்தார்.
அவரது கருத்தை வரவேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் நன்றி தெரிவித்தார். அவருக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா தலைவர்களும், ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, ராகுல்காந்திக்கு எதிராக புதிய தாக்குதலை தொடுத்தார். அவர் கூறியதாவது:-
1975-ம் ஆண்டு (அவசர நிலை) இந்திய ஜனநாயகம் காங்கிரஸ் கட்சியால் உண்மையிலேயே கொலை செய்யப்பட்டது. அப்போது யாரும் வெளிநாட்டில் அழுது புலம்பி, இந்திய உள்விவகாரங்களில் தலையிடுமாறு கேட்டது இல்லை.
இந்தியர்களே போராடி ஜனநாயகத்தை நிலைநிறுத்தினர். ஏனென்றால் இந்தியர்களின் மனதிலும், ஆன்மாவிலும் ஜனநாயகம் உயிர் வாழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஜெர்மனி செய்தித்தொடர்பாளரின் கருத்துக்கு நன்றி தெரிவித்த திக்விஜய்சிங்குக்கு மாநிலங்களவை எம்.பி. கபில்சிபல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கபில்சிபல், கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகினார். சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி. ஆனார்.
கபில்சி பல் கூறியதாவது:-
ஜெர்மனியின் கருத்துக்கு நன்றி தெரிவித்து இருந்தீர்கள். எனது கருத்து என்னவென்றால், நாம் முன்னேறி செல்ல ஊன்றுகோல் தேவையில்லை. வெளிநாட்டில் இருந்து நமக்கு ஆதரவு தேவையில்லை.
ஏனென்றால் நமது போர், நமக்கு சொந்தமானது. அந்தவகையில் ஒன்றாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நாட்டை இழிவுபடுத்த ராகுல்காந்திக்கு உரிமை இல்லை.
- காங்கிரசை நாட்டு மக்கள் நிராகரித்தது எங்கள் தவறு அல்ல.
புதுடெல்லி :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இங்கிலாந்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அனைத்து அமைப்புகளையும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி விட்டதாகவும் கூறியிருந்தார்.
அவர் இந்தியாவை அவமானப்படுத்தி விட்டதாக பாராளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜனதா அமளியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ இதுதொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ராகுல்காந்தி என்ன பேசினாலும், அது அவரது சொந்த கட்சிக்கே தீங்கு விளைவிக்கும். அவர் தனது கட்சியை அழித்துக் கொள்ளட்டும். அது அவர்களது உட்கட்சி பிரச்சினை. எங்களுக்கு அக்கறை இல்லை.
ஆனால், இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க முயன்றால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அவரை மன்னிக்க மாட்டோம்.
நாட்டை இழிவுபடுத்த ராகுல்காந்திக்கு உரிமை இல்லை. நாட்டை இழிவுபடுத்துவது அவ்வளவு கடுமையானது இல்லை என்று காங்கிரஸ் கருதினால், பாராளுமன்றத்தில் ஒருதரப்பு மக்களின் பிரதிநிதியாக இருப்பதற்கு அக்கட்சிக்கு தகுதி இல்லை.
காங்கிரசை நாடு நிராகரித்ததற்காக, நாட்டை பற்றி மோசமாக பேச காங்கிரசுக்கு உரிமை இருப்பதாக அர்த்தம் இல்லை. காங்கிரசை நாட்டு மக்கள் நிராகரித்தது எங்கள் தவறு அல்ல.
அதற்காக நாட்டையோ, ஜனநாயக ஆலயமான பாராளுமன்றத்தையோ, ஜனநாயகத்தையோ இழிவுபடுத்த காங்கிரசுக்கு உரிமை இல்லை. எனவே, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
ராகுல்காந்தியிடம் மன்னிப்பு கோருவது எங்கள் கடமை. ஏனென்றால், சக எம்.பி.யின் செயலை கண்டிக்காமலோ, மன்னிப்பு கோராமலோ இருந்தால், மற்ற எம்.பி.க்களை மக்கள் கேள்வி கேட்பார்கள்.
இந்தியாவுக்கு எதிரான சக்திகளும், ஒரு கும்பலும் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தி வருகிறார்கள். அவர்கள் ராகுல்காந்தி பயன்படுத்திய அதே வார்த்தைகளை பேசுகிறார்கள்.
ராகுல்காந்தி, லண்டனில் இந்தியாவை பற்றி பொய் பேசினார். முதலில், பாராளுமன்றத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்றார். அது முற்றிலும் சரியல்ல. அவர் ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி பேசினார். சுதந்திரமாக பேசினார். ஆனால் அவரது பேச்சில் சாரம் இல்லை.
இரண்டாவதாக, தன்னை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச அனுமதிக்கவில்லை என்று கூறினார். அதுவும் முற்றிலும் பொய். தனது யாத்திரையின்போது, தினந்தோறும் பலதடவை மத்திய அரசை விமர்சித்து பேசினார். நாட்டில் அதிகம் பேசியவரே அவர்தான்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், அதன் கண்ணியத்தை ராகுல்காந்தி காயப்படுத்துகிறார். அரசியல் சட்டத்தையும், நீதித்துறையும் இழிவுபடுத்துகிறார்.
அவர் எத்தகையவர் என்பது இங்குள்ள இந்தியர்களுக்கு தெரியும். ஆனால், வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர் உண்மை பேசுவதாக நினைப்பார்கள். காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க லண்டனுக்கு சென்று தரையை சுத்தம் செய்யுமா?
பிரதமர் மோடி, வெளிநாட்டில் இந்தியாவை இழிவுபடுத்தியதாக கூறுகிறார்கள். அவர் முந்தைய அரசின் செயல்களை பற்றி மட்டுமே பேசினார். மோடி, தானாக பிரதமர் ஆகிவிடவில்லை. 140 கோடி மக்களின் ஆசியுடன் பிரதமர் ஆனார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மோடியின் பங்கை உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார்.
- சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பனாஜி :
கோவா மாநில தலைநகர் பனாஜியில் 23-வது காமன்வெல்த் சட்ட மாநாடு தொடங்கியது. அதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, முதல்-மந்திரி பிரமோத் சவந்த் மற்றும் 52 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், கிரண் ரிஜிஜு பேசியதாவது:-
இன்று நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குடிமகனும் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலன் அடைகிறார். நலத்திட்ட நாடு என்பதால், ஒவ்வொரு தனிமனிதரின் குரலையும் கேட்பது முக்கியம்.
சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களுக்காகத்தான் சட்டங்கள் உள்ளன. சட்டங்களே தடைக்கற்களாக மாறும்போது, அவற்றை பின்பற்றுவது சுமையாக இருக்கும். அப்போது, அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.
அந்தவகையில் கடந்த எட்டரை ஆண்டுகளில், 1,486 பழமையான, நடைமுறைக்கு பொருந்தாத சட்டங்களை நீக்கி இருக்கிறோம். 13-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியில் மேலும் 65 சட்டங்களை நீக்க மசோதாவை முன்வைப்போம். நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் 4 கோடியே 98 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை குறைப்பது எளிதல்ல. ஏனென்றால், முடிவுக்கு வரும் வழக்குகளை விட 2 மடங்கு புதிய வழக்குகள் வந்து விடுகின்றன.
ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார். சில நீதிபதிகள், நாள் ஒன்றுக்கு 200 வழக்குகளை கூட முடித்து வைக்கிறார்கள். இருப்பினும், நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இ-கோர்ட்டுகளை தொடங்கி இருக்கிறோம். எங்கள் இறுதி இலக்கு, காகிதமற்ற கோர்ட்டுகள்தான்.
மத்தியஸ்தம் செய்வதை ஊக்குவிக்க மத்தியஸ்த மசோதாவையும் கொண்டுவர உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பயன்பாட்டுக்கு கண்டுபிடிக்கப்படவில்லை.
- உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி :
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், சொந்த தொகுதிக்கு செல்லாமல், தாங்கள் பணியாற்றும் ஊரில் இருந்தபடியே வாக்களிக்க தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் இதுபற்றிய கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ அளித்த பதில் வருமாறு:-
தேர்தல் கமிஷன் அளித்த தகவல்படி, தொலைதூர ஓட்டுப்பதிவு எந்திரத்தை வரப்போகும் தேர்தலில் பயன்படுத்தும் திட்டம் இல்லை. மேலும், இது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பயன்பாட்டுக்கு கண்டுபிடிக்கப்படவில்லை. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு கிரண் ரிஜிஜூ அளித்த பதில் வருமாறு:-
20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரம் கிடைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் 208 வழக்குகள் 20 ஆண்டுகளாக உள்ளன. ஐகோர்ட்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 547 வழக்குகளும், மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ்கோர்ட்டுகளில் 6 லட்சத்து 72 ஆயிரம் வழக்குகளும் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கூறியதாவது:-
உலகம் முழுவதும் உள்ள சிறைகளில் 8 ஆயிரத்து 343 இந்திய கைதிகள் உள்ளனர். அவர்களில் விசாரணை கைதிகளும் அடங்குவர். அதிகபட்சமாக, ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் 1,926 இந்திய கைதிகள் உள்ளனர்.
அவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலங்களவை கேள்வி நேரத்தில், ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் அளிக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
பாராளுமன்ற நிலைக்குழு அதற்கு சிபாரிசு செய்துள்ளது. இருப்பினும், 2019-2020 நிதிஆண்டில் பயணிகள் கட்டணத்தில் மத்திய அரசு ரூ.59 ஆயிரத்து 837 கோடி மானியம் அளித்துள்ளது. இது, ரெயிலில் செல்லும் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 53 சதவித சலுகை அளிக்கப்பட்டதற்கு சமம்.
அதுபோக, 4 வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள், மாணவர்கள் ஆகியோருக்கு சலுகை கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார்.
- ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.
புதுடெல்லி :
மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, ஒரு செய்தி சேனல் இணையதளத்தில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தை தனது 'டுவிட்டர்' பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். இது, 1947-ம் ஆண்டு ஜூன் மாதமே நேருவுக்கு தெரியும். அப்போதைய வைசிராய் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் நேரு இதை தெரிவித்துள்ளார். ஆனாலும், ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.
காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்தபோது, தவறான சட்டப்பிரிவின்கீழ் நேரு ஐ.நா.வை அணுகினார். அதனால், பிரச்சினையில் ஆக்கிரமிப்பாளராக இல்லாமல், ஒரு வாதியாக பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. காஷ்மீரில் ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்துவது சரிதான் என்ற மாயையை நேரு தோற்றுவித்தார். 370-வது அரசியல் சட்டப்பிரிவை உருவாக்கினார்.
மகாராஜா ஹரிசிங்கின் மகன் கரன்சிங், வரலாற்றை திரித்து, நேருவை பழியில் இருந்து விடுவிப்பதிலேயே குறியாக இருந்தார். பொய்யான வரலாற்றை புறந்தள்ளி, அப்போது என்ன நடந்தது என்பதை காஷ்மீர் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
- வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
புதுடெல்லி :
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
இம்மாதம் 1-ந் தேதி நிலவரப்படி சுப்ரீம் கோர்ட்டில் 72 ஆயிரத்து 62 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 25-ந் தேதி நிலவரப்படி 25 ஐகோர்ட்டுகளில் 59 லட்சத்து 55 ஆயிரத்து 873 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ்க்கோர்ட்டுகளில் 4 கோடியே 23 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அனைத்து கோர்ட்டுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சம் ஆகும். இது 5 கோடியை நெருங்கி வருகிறது.
நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில் அரசுக்கு பங்கில்லை. வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்களவை கேள்வி நேரத்தில், கடந்த ஆண்டில் உலக அளவில் ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்ட நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தில் இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ராணுவ இணை மந்திரி அஜய்பட் கூறியதாவது:-
மற்ற நாடுகளில் ராணுவ செலவினம் குறித்த விவரங்கள் ராணுவ அமைச்சகத்திடம் இல்லை.
இருப்பினும், சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தனது இணையதளத்தில், இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.
முதல் இடத்தில் அமெரிக்காவும் (80 ஆயிரத்து 67 கோடி டாலர் செலவு), இரண்டாம் இடத்தில் சீனாவும் (29 ஆயிரத்து 335 கோடி டாலர்), 3-வது இடத்தில் இந்தியாவும் (7 ஆயிரத்து 660 கோடி டாலர்) இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
46 இடங்களில், ரேடார் நிலையங்கள் நிறுவி கடலோர பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்