search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்"

    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம்.
    • ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு.

    சுசீந்திரம்:

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர்சாமி சிலை உள்ளது.

    ஆஞ்சநேயர் சாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதந்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    அது போல் நேற்றும் மூலம் நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    • சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று காலையில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையொட்டி ரிஷப வாகனத்தில் தாணுமாலய சாமியும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரான பெருமாளும் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அதன் பிறகு மருங்கூர் முருகன், கோட்டார் வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசுவாமி எதிரெதிரே காட்சியளித்தனர்.

    பிறகு அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்றுபோல் தீபாராதனை நடந்தது. அப்போது தாணுமாலய சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து தனது மக்களை பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னுமாக அசைந்து அசைந்து செல்வதும், திரும்புவதுமாக பலமுறை நடந்தது. இந்த காட்சியை காண நள்ளிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    பெண்கள் குலவையிட்டு, மங்கல ஒலி எழுப்பிடவும், மேளதாளம் முழங்கவும் வாகனங்களில் இருந்து தாய்-தந்தையர் கோவிலை சென்றடைந்தனர். இந்த காட்சியை காண வந்த பக்தர்கள் பலரும் இரவு கோவிலிலேயே தங்கி தொடர்ந்து இன்று அதிகாலை நடந்த ஆருத்ரா தரிசனத்தை கண்டுகளித்தனர்.

    இன்று (27-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடராஜர் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இதைத்தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    • ஆடி கடைசி திங்களையொட்டி நாளை நடக்கிறது
    • கிரேந்தி, வாடாமல்லி பூக்களை தவிர்த்து மீதமுள்ள பூக்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமையையொட்டி கோவிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் புஷ்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

    அது போல் இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவிலில் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலயன் சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள், நவக்கிரக மண்டபம், கைலாசநாதர் சன்னதி மற்றும் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    கிரேந்தி, வாடாமல்லி பூக்களை தவிர்த்து மீதமுள்ள பூக்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் தங்களால் இயன்ற பூக்களை கொடுத்து புஷ்பாபிஷேகத்தை சிறப்பிக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கோவில் கணக்கர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • நிறை புத்தரிசி விழா 4-ந்தேதி நடைபெறுகிறது
    • சுசீந்திரம் ஸ்ரீகொன்றையடி சாமிக்கும் பின்னர் தாணு மாலயசாமிக்கும் பூஜை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நிறை புத்தரிசி நிகழ்ச்சி வருடந் தோறும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வருகின்ற 4-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலையில் சுசீந்திரம் ஸ்ரீகொன்றையடி சாமிக்கும் பின்னர் தாணு மாலயசாமிக்கும் பூஜை நடைபெறும்.

    தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து பயிர் கட்டுக்கள் சாமி சன்னதியில் இருந்து சன்னதி தெரு வழியாக எடுத்து வரப்பட்டு அதன் பிறகு சாமி சன்னதியில் வைத்து காலை 6 மணிக்கு சிறப்புப் பூஜை நடைபெறும். அதைத்தொடர்ந்து சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள், விவசாயிகளுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்குவார்கள்.

    இதனால் அப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள்  செழித்து வாழ்வார்கள் என்பது ஐதீகம். ஆகையால் அன்றைய தினம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தப் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

    இதற்கான முன்னேற்பாடு களை குமரி மாவட்ட கோவில் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    ×