search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நிறுத்தம்"

    பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தெரிவித்தனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஏரியும் கடலும் சந்திக்கும் முகத்துவார பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் தீட்டு காரணமாக நீரோட்டம் தடைபட்டு உள்ளது மேலும் படகுகள் வந்து செல்லும் பொழுது தரை தட்டி சேதம் அடைந்து விடுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

    எனவே முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைத்து மணல் அரிப்பு ஏற்படாத வகையில் நிரந்தர கான்கிரீட் தடுப்பு அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் முகதுவாரம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அதற்கான பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முகத்துவார பணி நிறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் மதிவாணன் பழவேற்காடு முகத்துவார பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். அவர் படகுமூலம் சென்று பழவேற்காடு முகத்துவாரப் பகுதியை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் மதிவாணன் கூறும்போது, பழவேற்காடு முகத்துவாரம், மீன்வளம் மட்டுமின்றி 62 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் ஆகும். இதன் சீரமைப்புக்காக மீன்வளத்துறை சார்பில் ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள சிக்கல் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்றும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பிரச்சனை தீர்க்கப்பட்டு மீனவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பழவேற்காடில் சுற்றுலா த்தலத்தை மேம்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

    • வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி நிறுத்தப்பட்டுள்ளது.
    • 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதல் கட்டமாக ரூ.8 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் காலத்தின் உயரம் அதிகமாக வேண்டும் என்று அப்போதே கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட அரசு பிறகு சுமார் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாலத்தின் உயரம் மீண்டும் குறைந்த அளவே கட்டப்படுவதால் பஸ்கள் உள்ளே செல்ல முடியாத நிலைமை உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் நடைபெற்று வந்த வேலையை நிறுத்தி சுமார் 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் சமூக ஆர்வலரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பாலம் கட்டும் உரிமையாளரிடம் பேசி 15 அடி உயரத்திற்கு பாலத்தை கட்ட ஏற்பாடு செய்வதாக கூறி சமூக தீர்வை ஏற்படுத்தி பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.

    ×