என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்ம விருதுக்கு"

    • 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • 7 பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளுக்கு ஒப்புதல்.

    2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    7 பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 139 பத்ம விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    அதன்படி, இந்தாண்டில் பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சந்திரகுமாருக்கு மற்றும் தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி செட்டிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 2023-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வரும் ஜனவரி 26-ம் நாள் குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது.
    • தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிகள் உடைய தனித் தன்மைக் கொண்ட நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

    தேனி:

    2023-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வரும் ஜனவரி 26-ம் நாள் குடியரசு தினவிழாவில் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணியில் வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.

    தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கீழ்க்காணும் தகுதிகள் உடைய தனித்தன்மைக் கொண்ட நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

    தனது வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பாக சாதனை செய்தவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

    இவ்விருது எப்பொழுதும் உயரிய சாதனை செய்பவருக்கே வழங்கப்படும். இவ்விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் சாதனை எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருத்தல் வேண்டும். உயர்ந்த தரநிர்ணயத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்படும்.

    பத்ம விருதுகள் நாட்டிலேயே 2-வது உயரிய விருதாக இருப்பதால் விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே அவர்கள் துறையில் தேசிய விருது பெற்றிருக்க வேண்டும்.

    சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள், நலிவடைந்த சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டவர்கள், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    சிறந்த சாதனையாளராக இருந்து இறந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதில்லை. இருந்த போதும் மிக தகுதியானவர்களுக்கு இந்த விருது அறிவிக்கும் தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் இறந்திருந்தால் அவர்கள் பரிசீலிக்கப்படலாம்.

    ஏற்கனவே பத்ம விருது பெற்றவராக இருந்தால் 5 வருடத்திற்கு பின்னரே விண்ணப்பிக்க முடியும். அரசு பணியாளர் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் டாக்டர், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

    வருகிற 15.09.2022-க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    ×