search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனதின் குரல் நிகழ்ச்சி"

    • அரியவகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை தோட்டத்தை உருவாக்கி உள்ளார்.
    • தோட்டத்தைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீக்கு பாராட்டு தெரிவித்தார்.

    இதுகுறித்து மோடி கூறும்போது, `நம்மைச் சுற்றி எந்த ஒரு துன்பத்திலும் பொறுமையை இழக்காத சிலர், அதிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்.

    அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர் தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீ. இவர் அரிய மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகள் கொண்ட அற்புதமான தோட்டத்தை உருவாக்கி உள்ளார். அவரது தந்தையை பாம்பு கடித்தபோது அவரை காப்பாற்ற பாரம்பரிய மூலிகைகள் உதவியது.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் பாரம்பரிய மருந்துகள் மற்றும் மூலிகைகளை ஆராயத் தொடங்கினார். அவர் மதுரை வெரிச்சியூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட அரியவகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை தோட்டத்தை கடினமாக உழைத்து உருவாக்கி உள்ளார்.

    கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளை மக்களுக்கு வழங்கினார். இவரது மூலிகைத் தோட்டத்தைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள்.

    நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்த நமது பாரம்பரியத்தை சுபஸ்ரீ முன்னெடுத்துச் செல்கிறார். அவரது மூலிகை தோட்டம் நமது கடந்த காலத்தை எதிர் காலத்துடன் இணைக்கிறது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்றார்.

    • நரேந்திர மோடியின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சி விவசாயிகள் மத்தியில் ஒளிபரப்பப்பட்டது.
    • பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர்கள் விளக்கி கூறினார்.

    பாப்பாரப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதில் குரல் நிகழ்ச்சி விவசாயிகள் மத்தியில் ஒளிபரப்பப்பட்டது.

    பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் முக்கியத்து வத்தையும் கடந்த நிகழ்ச்சிகளின் மூலம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவு கூர்ந்தார்.

    பிரதமரின் மக்களின் குரல் நிகழ்ச்சியின் மூலமாக விவசாயிகளுக்கு வேளாண்மை பற்றிய பேசிய கருத்துக்களை பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர்கள் விளக்கி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியானது வருகிற 30- ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நாடுமுழுவதும் நடக்கிறது.
    • பொதுமக்கள் அதிகம் பங்கேற்கவும், மேலும் நடுத்தர, அடித்தட்டு மக்கள் பெருமளவில் பங்கேற்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் வானொலி மூலம் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பொது மக்களிடையே உரையாற்றி வருகிறார். அப்போது பல தரப்பு மக்களின் சாதனைகள் அந்தந்த ஊர்களின் சிறப்பு குறித்தும், வளர்ச்சிகள், சுகாதாரம், வழிகாட்டுதல்கள், சமுதாய பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோர் குறித்தும் வாழ்க்கை பாதையில் எவ்வாறு முன்னெடுத்து செல்ல வேண்டும் என உரையாற்றி வருகிறார். இது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

    மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியானது வருகிற 30- ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நாடுமுழுவதும் நடக்கிறது. இதையொட்டி சென்னையில் முன்னேற் பாடாக பல பணிகள் நடைபெறுகிறது.

    பொதுமக்கள் அதிகம் பங்கேற்கவும், மேலும் நடுத்தர, அடித்தட்டு மக்கள் பெருமளவில் பங்கேற்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மீனவர்கள் அதிகம் வாழும் பகுதியான நடுக்குப்பத்தில் பொதுமக்களை அழைப்பதற்கு வித்தியாசமான முறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண பத்திரிக்கை போன்று மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அடிக்கப்பட்டு தாம்பூல தட்டில் வெற்றியை பாக்கு, பழம் இனிப்புடன் மேள தாளம் முழங்க வீடு வீடாக சென்று நிகழ்ச்சியில் தவறாமல் பங்கு கொள்ளும்படி பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாரதிய ஜனதா மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறியதாவது:-

    பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி அனைத்தும் மக்களிடையேயும் செல்ல வேண்டும்.

    நடுக்குப்பத்தில் மீனவர்கள் அதிகம் வாழ்வதால் வருகிற ஞாயிறு அன்று நடைபெறும் பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்புகிறோம். இதில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடைய வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் எல்லோரிடமும் போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர் பாரம்பரிய முறையில் அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

    • 75வது சுதந்திர தின கொண்டாட்டம், பொது மக்களின் இயக்கமாக மாறி உள்ளது.
    • மருத்துவப் பயன் உள்ள தாவரங்களின் ஆராய்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

    மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் இன்று பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று வருகின்றனர்.

    சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நம் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள நமது கணக்குகளின் சுயவிவரப் படமாக ஆகஸ்ட் 2 முதல் 15ந் தேதிவரை மூவர்ணக் கொடியை வைக்க வேண்டும்.

    காமன்வெல்த் போட்டியில் டீம் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று காலத்தில் மருத்துவப் பயன் உள்ள தாவரங்களின் ஆராய்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல ஆரம்பம்.

    இந்த மாதம் மெய்நிகர் ஹெர்பேரியம் துவக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட தாவரங்கள் அல்லது தாவர பாகங்களின் தரவுத்தளம் இதில் உள்ளது, இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் மற்றும் தொடர்புடைய அறிவியல் தகவல்களும் இதில் கிடைக்கின்றன. இந்த மெய்நிகர் ஹெர்பேரியம் நமது தாவரவியல் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×