search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய சங்கம்"

    • திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் சமூக பணித்துறை சார்பில் அமிட்டி கிளப் தொடக்க விழா நடைபெற்றது
    • சமூகப் பணித்துறையில் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள் பற்றியும், பேச்சாற்றல், கவனிப்புத்திறன், வாகனம் ஓட்டுதல், நீச்சல் போன்ற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சிறப்பு விருந்தினர் அறிவுரை

    திருச்சி:

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் சமூக பணித்துறை சார்பில் அமிட்டி கிளப் தொடக்க விழா கல்லூரி காவேரி அரங்கில் நடைபெற்றது. சமூக பணித்துறை தலைவர் முனைவர் ஜி.மெட்டில்டா புவனேஸ்வரி வரவேற்றார்.

    முன்னாள் மாணவிகளின் தொடர்பு புலத்தலைவர் முனைவர் ஜி.கனகா வாழ்த்துரை வழங்கினார். லுசாகா யூஜின் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.சவரிமுத்து, புனித வளனார் கல்லூரி ஓய்வு பெற்ற மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் ஜாம்பி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சமூக பணித்துறை தலைவர் ஏ.ஆனந்த் ஜெரால்டு செபாஸ்டின் பங்கேற்றார்.

    அப்போது அவர் பேசுகையில், சமூகப் பணித்துறையில் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள் பற்றியும், பேச்சாற்றல், கவனிப்புத்திறன், வாகனம் ஓட்டுதல், நீச்சல் போன்ற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அவர்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவேரி மகளிர் கல்லூரி அமிட்டி கிளப் ஒருங்கிணைப்பாளர் பழ.ராணி வழிகாட்டியாக இருந்து செயல்பட்டார்.

    மேலும் சமூகப் பணித்துறையின் ஏனைய உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் உறுதுணையாக இருந்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ×