என் மலர்
நீங்கள் தேடியது "கொட்டி தீர்த்த"
- ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
- கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். நேற்று முன்தினம் முழுவதும் மழை பெய்ய வில்லை.
இந்நிலையில் நேற்று அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. மாலை 5 மணிக்கு பிறகு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
ஈரோடு மாநகர் பகுதியில் 3-வது அகில் மேடு வீதியில் உள்ள டிரான்ஸ்பாரம் தீப்பிடித்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது.
இதேபோல் ஸ்டார் தியேட்டர் அருகே உள்ள சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்களில் மின்சார கசிவு ஏற்பட்டு மாட்டு வண்டியில் இருந்த மாடு மீது மின்சாரம் பாய்ந்து இறந்தது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாக கோடை மழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகின்றது. இதனால் நிலங்களில் உழவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று மாலை மாவட்டம் முழுவதும் கோடை மழையானது கொட்டித்தீர்த்தது.
அக்னி நட்சத்திரம் தாக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி காணப்பட்டது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 109 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். ஒரு சிலர் வீட்டை விட்டு வெளியே வர தயக்கம் காட்டினர்.
இந்த நிலையில் காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழையானது தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சோலார், வெண்டி பாளையம், கஸ்பாபேட்டை, 46 புதூர், லக்காபுரம், மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விபரம் வருமாறு:
ஈரோடு-68, கோபி-12.2, பவானி-20, பெருந்துறை-24, சத்தி-2, தாளவாடி-6, நம்பியூர்-24, கொடுமுடி-22.2, கவுந்தப்பாடி-13.2, சென்னிமலை-5, எலந்தைகுட்டை மேடு-41,
பவானிசாகர்-15.6, கொடிவேரிஅணை-4, குண்டேரிப்பள்ளம்-2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்து மாவட்டத்தின் சராசரி மழையளவு 21.69 ஆகும்.
- இரவு திடீரென சாரல் மழை விழுந்தது. அதைத்தொடர்ந்து பலத்த மழையாக பெய்ய தொடங்கியது.
- அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. இரவு 9.45 மணிஅளவில் திடீரென சாரல் மழை விழுந்தது. அதைத்தொடர்ந்து பலத்த மழையாக பெய்ய தொடங்கியது.
சுமார் ஒரு மணிநேரம் இடைவிடாமல் மழை கொட்டியது.இதனால் ஈரோடு பஸ் நிலையம், தில்லை நகர், பன்னீர் செல்வம் பூங்கா, வீரப்பன் சத்திரம், பெரியவலசு, சூரம்பட்டி, ரெயில் நிலையம், கருங்கல் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
ஆர்.கே.வி.ரோடு, சத்திரோடு, பெருந்துறை ரோடு, காளைமாட்டு சிலை, காவிரிரோடு, குப்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக நாச்சியப்பா வீதி, முனிசிபல்காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுநீரும், மழை தண்ணீருடன் கலந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தார்கள்.
இதன் எதிரொலியாக ஈரோடு வ.உ.சி பூங்கா மார்க்கெட் பகுதியில் சேரும் சகதியுமாக காட்சி அளித்ததால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இங்கு அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பதிவானது.