என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செய்வதாக"
- அணையில் பிடிக்கும் ஜிலேபி, கட்லா, மிருகால், ரோகு உள்ளிட்ட மீன் இனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
- அதிக விலைக்கு மீன்களை விற்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மீன்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமை ந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை நீர்த்தேக்க பகுதி.
வடகிழக்கு பருவ காலங்களில் நிரம்பி வழியும் இந்த அணைக்கு கல்லுப்புள்ளம், வரட்டு பள்ளம், கும்பரபாணி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வந்து சேரும்.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில், மீன் வளத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் இருப்பு வைத்து வளர்க்கப்படுகிறது. நன்கு வளர்ந்த மீன்களை பிடித்து மீன்வளத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு ஆண்டு களாக கூட்டுறவு மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க டெண்டர் மூலம் மீன் பிடிக்கும் அனுமதி கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு மீன் பிடிக்கும் குத்தகைக்காக 18 லட்சம் ரூபாய் கூட்டுறவு சங்க மூலம் அரசுக்கு செலுத்தப்பட்டு ள்ளது.
கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு டெண்டர் விடப்பட்டதால், மீன்பிடி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
அணையில் மீன் பிடிக்கும் தொழிலாளர்க–ளுக்கு ஒரு பங்கு, கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு பங்கு என பிரித்து கொடுக்கப்படுகிறது.
அணையில் பிடிக்கும் ஜிலேபி, கட்லா, மிருகால், ரோகு உள்ளிட்ட மீன் இனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், தொழிலா ளர்களுக்கு வழங்கப்படும் பங்கு மீன்கள் 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை சூழ்நிலைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அணையில் பிடிக்கும் மீன்களை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பிடிக்கும் ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் அனைத்தும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். மீன் பிடிக்கும் தொழிலாளர்களுக்கு தனியாக பங்கு மீன்கள் வழங்க அரசாணை எதுவும் கிடையாது.
இந்தச் சூழ்நிலையில் அணையில் பிடிக்கும் மீன்களில் 50 சதவீதம் கூட்டுறவு சங்கத்திற்கு கொடுத்து கிலோ 100 ரூபாய்க்கும், பங்கு மீன்கள் என்ற முறையில் 50 சதவீத தொழி லாளர்களிடம் கொடுத்து ஒரு கிலோ 200 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். அதிக விலைக்கு மீன்களை விற்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மீன்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மேலும் மீன் வாங்கும் பொது மக்களுக்கு முறையான ரசீது வழங்குவதில்லை. இது மட்டுமின்றி மீன் பிடித்து விற்பனை செய்யும் வரை மீன்வளத்துறை அதிகாரி மற்றும் மேற்பார்வையாளர் உடன் இருக்க வேண்டும். ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக மீன்வளத்துறை அதிகாரிகள் யாரும் வரட்டுப்பள்ளம் அணைக்கு வருவதில்லை.
இதனால் டெண்டர் எடுத்தவர்கள் எவ்வளவு மீன் பிடித்தார்கள்? விற்பனை செய்தார்கள்? என்ற கணக்கும் கேள்விக்குறியாக உள்ளது.
இங்கு தன்னிச்சையாக செயல்படும் சில உறுப்பி னர்கள் நாள்தோறும் மீன்வளத்துறை அதிகாரி–களுக்கு தாங்கள் பிடித்ததா–கவும் விற்பனை செய்ததா–கவும் அனுப்பும் கணக்கு மட்டுமே பதிவு செய்யப்படு–கிறது. இதனால் இந்த அணையின் மூலம் விற்பனை செய்யப்படும் மீன் வர்த்தகத்தில் பல லட்சம் ரூபாய் அரசாங்கத்திற்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்