என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷம்சி"
- இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது.
- தென்ஆப்பிரிக்கா 13.5 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 15 ஓவரில் 152 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை 13.5 ஓவரில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தொடக்கத்தில் 6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினர். 3-வது வீரராக களம் இறங்கிய திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்கள் விளாசினார். இவர் ஆட்மிழக்கும்போது 5.5 ஓவரில் 55 ரன்கள் சேர்த்திருந்தது.
வேகப்பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு விளையாடினார்கள். ஆனால் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர்களான ஷம்சி, மார்க்கிராம் பந்து வீச்சில் சற்று திணறினர். ஷம்சி 4 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மார்க்கிராம் 3 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினர்.
மிடில் ஓவர்களில் இருவரும் சிறப்பாக செயல்பட்டதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை என திலக் வர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து திலக் வர்மா கூறியதாவது:-
நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தது. புதுப்பந்து சற்று கூடுதலாக சீமிங்-கிற்கு ஒத்துழைத்தது. மார்க்கிராம் மற்றும் ஷம்சி ஆகியோர் பந்து வீசும்போது ஆடுகளம் க்ரிப் (grip) ஆக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஷம்சி, மார்கிராம் ஸ்பெல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இல்லையெனில் நாங்கள் 200 ரன்களை கடந்திருப்போம்.
நாங்கள் பவர்பிளேயில் சற்று கூடுதலாக ரன்கள் கொடுத்து விட்டோம். அதன்பின் நாங்கள் வலுவான நிலைக்கு திரும்பிய நிலையில், பவுண்டரி லைன் அருகே ஈரப்பதாக இருந்ததால் பந்து நனைந்து, க்ரிப் இல்லாமல் போனது.
இவ்வாறு திலக் வர்மா தெரிவித்தார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 191 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 101 ரன்களில் சுருண்டது.
சவுத்தாம்ப்டன்:
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இதையடுத்து நடந்த டி20 தொடரின் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது.
அந்த அணியின் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 70 ரன்களை எடுத்தார். மார்க்ரம் 51 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 17 ரன், கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் 14 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், இங்கிலாந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ஷம்சி 5 விக்கெட்டும், மகராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 2-1 என டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது ஷம்சிக்கும், தொடர் நாயகன் விருது ஹென்ரிக்சுக்கும் அளிக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்க உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்