என் மலர்
நீங்கள் தேடியது "சிலைகள் சேதம்"
- டாக்கா விமானநிலையத்தில் கடந்த 25-ம் தேதி சின்மோய் தாஸ் கைதுசெய்யப்பட்டார்.
- வங்கதேசத்தில் இந்துக் கோவில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
டாக்கா:
வங்கதேச மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்கு எதிராக இந்துக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டன. வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக இருந்த இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த இந்து சாமியார் சின்மோய் கிருஷ்ணதாஸ் மீது வங்கதேச கொடியை அவமதித்து இந்துக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 25-ம் தேதி சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டார்
வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டாக்காவில் நமஹட்டா மையத்தில் உள்ள இஸ்கான் கோவிலை சூறையாடிய மர்ம நபர்கள், அங்கிருந்த கடவுள் சிலைகளுக்கும் தீவைத்தனர். அதில் அங்கிருந்த லட்சுமி நாராயணர் சிலை மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
டாக்காவின் புறநகர் பகுதியான தோவூர் கிராமத்தில் ஹரே கிருஷ்ணா நம்ஹட்டா சங்கம் நிர்வகித்து வந்த ஸ்ரீஸ்ரீ மகாபாக்யா லட்சுமிநாராயணன் கோவில் மற்றும் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா கோவிலையும் சூறையாடிய மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகளுக்கு தீவைத்தனர். அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது என கொல்கத்தா இஸ்கான் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது புகழ்பெற்ற பழமைவாய்ந்த அகோபில மடம் ஆதீன பரம்பரை மிராசை சேர்ந்த ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவிலில் இடி விழுந்தது.
இதில் கோவிலின் முன்புறம் உள்ள ராஜ கோபுரத்தின் சிலைகள் சேதம் அடைந்தன. அதோடு கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இடி தாக்கியதில் கோபுரத்தில் தங்கி இருந்த குரங்குகள் காயம் அடைந்தது.இந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த மே மாதம் இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .கோபுரத்தில் தங்கியிருந்த குரங்கும் அடிப்பட்டு உயிருக்கு போராடி வருகிறது.